Doctor Verified

Autism Childrens Therapy: ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறந்த சிகிச்சை முறைகள்

  • SHARE
  • FOLLOW
Autism Childrens Therapy: ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறந்த சிகிச்சை முறைகள்


பெற்றோர்கள் எப்போதும், ஆதார அடிப்படையிலான நடைமுறைகளையே கடைபிடிக்க வேண்டும். இவற்றில் குறிப்பிடப்பட்ட சிகிச்சைகள், ஒரு பெரிய மக்கள் தொகையில் ஆராய்ச்சி செய்யப்பட்ட அணுகுமுறைகள் மற்றும் மன இறுக்கம் கொண்ட குழந்தைகளில் நேர்மறை விளைவுகளைக் காட்டியுள்ளது. ஆட்டிஸ்டிக் குழந்தைகளுக்கான பயனுள்ள சிகிச்சை முறை குறித்து புனேவில் உள்ள லெக்சிகன் ரெயின்போ தெரபி மற்றும் சைல்டு டெவெலப்மென்ட் சென்டரின் சென்டர் ஹெட் சீனியர் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் டாக்டர் ஈஷா சோனி அவர்கள் விவரித்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Newborn immunity: பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது?

ஆட்டிஸ்டிக் குழந்தைகளுக்கான சிகிச்சைகள்

பேச்சு சிகிச்சை, தொழில்சார் சிகிச்சை, அப்ளைடு பிஹேவியர் அனாலிசிஸ் மற்றும் சிறப்புக் கல்வி போன்ற முக்கிய சிகிச்சைகள் தவிர, கீழே கொடுக்கப்பட்ட சில அணுகுமுறைகளும் மன இறுக்கத்திற்கான ஆதாரமாக உள்ளது.

சமூக திறன்கள் பயிற்சி

சமூக திறன் பயிற்சி என்பது, சிறப்புக் கல்வியாளர், பேச்சு சிகிச்சையாளர், ஆலோசகர் போன்ற நிபுணர்களால் ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் சமூகட் திறன்களை வளர்ப்பதற்காக செய்யப்படும் ஒரு அமர்வாகும். இதில் குழந்தைகளின் குழு அளவு 2 முதல் 10 வரை இருக்கலாம். மேலும் இவை வாழ்த்துக்கள் போன்ற சொற்கள் அல்லாத வாய்மொழி சைகைகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டதாகும். இது பெரியவர்களுடனான அல்லது மற்ற குழந்தைகளுடன் உரையாடல் நடத்த பொருத்தமான மற்றும் உடல் மொழியைக் கற்பிப்பதாக அமைகிறது.

மாடலிங் மற்றும் ரோல் பிளே தெரபி

இந்த வகை தெரபிகள், சமூக, நடத்தை, விளையாட்டு, வெளிப்படையான மற்றும் ஏற்றுக் கொள்ளும் மொழி, அறிவாற்றல் திறன்களைக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் உண்மையான வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு பொதுமைப்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Juvenile Arthritis Impacts: இளம் மூட்டுவலி கண்களை எவ்வாறு பாதிக்கிறது

பட பரிமாற்ற தகவல் தொடர்பு அமைப்பு (PECS)

PECS (Picture Exchange Communication System) மூலம் குழந்தைகளிடையே செயல்பாட்டுத் தொடர்பு திறன்களை கற்பிக்கவும், சமூகச் சூழலில் பேச்சு இல்லாத அல்லது மட்டுப்படுத்தப்பட்ட பேச்சு இல்லாத மன இறுக்கம் கொண்ட குழந்தைகளின் மொழி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. இது அவர்களைப் படங்களைச் சார்ந்து இருக்கச் செய்யாமல், மொழி வளர்ச்சியை ஊக்குவிப்பதாக அமையும். மேலும், அவர்களின் செய்தி அல்லது தேவைகளைத் தெரிவிக்கும் வகையில் தகவல் தொடர்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. சில குழந்தைகள் அவர்களின் விருப்பங்களை வெளிப்படுத்த முடியாததால் விரக்தி அடைவர். இது அவர்களுக்குக் கோபத்தை வரவழைக்கும். PECS மூலம் அவர்களுக்கு ஏற்படும் கோபங்களின் அதிர்வெண்ணைக் குறைக்கலாம். மேலும் இது குழந்தை மற்றும் பெற்றோர் ஆகிய இருவரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.

மருத்துவர் சோனி கூற்றுப்படி, “ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு வளர்ச்சிப் பாதையில் உள்ளது. மேலும், சிகிச்சைகளுக்கும் வித்தியாசமாக பதிலளிக்கும். ஆரம்ப கால தலையீடு மற்றும் ஆதார அடிப்படையிலான சிகிச்சைகள் மூலம் ஆட்டிஸ்டிக் குழந்தைகளுக்குச் சிகிச்சை தருவது மேம்பட்ட விளைவுகளைத் தரும். மேலும், இவ்வாறு செய்வது, குழந்தைகளிடையே உண்மையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதுடன், இடைவெளியைக் குறைக்க உதவுகிறது” என்றார்.

இந்த பதிவும் உதவலாம்: Childhood Asthma Causes: குழந்தை பருவ ஆஸ்துமா நோயும், அதனை சமாளிக்கும் முறைகளும்

Image Source: Freepik

Read Next

Baby Food: குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாத உணவுகள் பட்டியல்!

Disclaimer

குறிச்சொற்கள்