Doctor Verified

Childhood Asthma Causes: குழந்தை பருவ ஆஸ்துமா நோயும், அதனை சமாளிக்கும் முறைகளும்

  • SHARE
  • FOLLOW
Childhood Asthma Causes: குழந்தை பருவ ஆஸ்துமா நோயும், அதனை சமாளிக்கும் முறைகளும்

குழந்தை பருவ ஆஸ்துமா

இந்தியாவில் குழந்தைகளிடையே காணப்படும் பொதுவான நிலை ஆஸ்துமா ஆகும். பெரும்பாலான நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்படலாம். ஆனால், சில சமயங்களில் ஆஸ்துமா பயமுறுத்தலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் நுரையீரலில் உள்ள சிறிய சுவாசக் குழாய்களை ஆஸ்துமா பாதிப்பதாக அமைகிறது. அதாவது நுரையீரலுக்கு உள்ளே மற்றும் வெளியே காற்றைக் கொண்டு செல்லும் காற்றுப் பாதைகள் சுருங்குகிறது. இவையே மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு காரணமாகிறது. ஆஸ்துமாவினால் குழந்தைகளுக்கு இருமல், சுவாசிப்பதில் சிரமம், மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம், சில சமயங்களில் வயிற்று வலி போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

இந்த பதிவும் உதவலாம்: Juvenile Arthritis Symptoms: குழந்தைகளைப் பாதிக்கும் இளம் மூட்டுவலியின் முக்கிய அறிகுறிகள்

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவிற்கான காரணங்கள்

குழந்தைப் பருவ ஆஸ்துமாவுக்கு பல்வேறு காரணங்கள் உண்டு.

பொதுவான தூண்டுதல்கள்

மருத்துவர் ஹரிஷ் அவர்களின் கூற்றுப்படி, “ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளையே ஆஸ்துமா அடிக்கடி தூண்டுவதற்கான காரணம் வைரஸ் நோய்கள். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், பெரிய குழந்தைகள், பெரியவர்கள் போன்றோர் மகரந்தம், புகையிலை, இரசானயங்கள், விலங்குகள், ஒவ்வாமை போன்ற எரிச்சலூட்டும் பொருள்கள், தூசிப் பூச்சிகள் போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது. வயதான குழந்தைகளுக்கு உடற்பயிற்சியும் ஆஸ்துமா ஏற்படுவதற்கான முக்கிய தூண்டுதலாக இருக்கலாம். குழந்தையின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு அரிக்கும் தோலழற்சி அல்லது ஆஸ்துமா இருப்பின், குழந்தைக்கும் ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.” என்று கூறினார்.

மூச்சுத்திணறல்

மேலே கூறப்பட்ட சில காரணங்களால் காற்று செல்லக் கூடிய சிறிய சுவாசப்பாதைகள் அடைக்கப்பட்டு ஆஸ்துமா உள்ள ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். இது அதிக ஒலியை ஏற்படுத்துவதாக அமையும். ஆஸ்துமா உள்ள குழந்தைகளில் காற்றுப்பாதையில் சுருக்கம் ஏற்படின், காற்று மிகவும் சிரமத்துடன் நுரையீரலுக்கு உள்ளே மற்றும் வெளியே செல்கிறது. இந்த குறுகிய காற்றுப் பாதை குழாய்களிலேயே அதிக சளி உற்பத்தி செய்யப்படுகிறது என மருத்துவர் கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Juvenile Arthritis Impacts: இளம் மூட்டுவலி கண்களை எவ்வாறு பாதிக்கிறது

ஆஸ்துமா உள்ள குழந்தைகள்

ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் குழந்தைகள், அவர்கள் வயதாகும் போது மேம்படுகிறது மற்றும் மறைந்து விடுகிறது. ஆஸ்துமா லேசானதாக இருப்பின், சரியான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கான ஆஸ்துமாவைச் சரி செய்யலாம். ஒவ்வாமை ஆஸ்துமாவாக இருப்பின், குழந்தை வயதாகும் போது சரியாவதற்கான வாய்ப்பு குறைவாகும்.

குழந்தை பருவ ஆஸ்துமாவை சரி செய்வது எப்படி?

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களுக்கான மருந்துகளை சரியாக உட்கொண்டு, வழக்கமான மருத்துவ மதிப்பாய்வுகளில் கலந்து கொள்வதன் மூலம் இயல்பான வாழ்க்கையைப் பெறலாம். மேலும், ஆஸ்துமாவை கட்டுப்படுத்த உதவும் இன்ஹேலர்களை குழந்தையிடமே இருப்பதற்கு ஏற்றவாறு பெற்றோர்கள் வழி செய்ய வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Child Asthma Treatment: குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவை நிர்வகிப்பது எப்படி?

Image Source: Freepik

Read Next

Child Mental Health: குழந்தைகள் மனநல ஆரோக்கியம் மேம்பட இதுமட்டும் போதும்!

Disclaimer