Doctor Verified

ADHD Symptoms: குழந்தைகளுக்கு ஏற்படும் ADHD வகைகள் மற்றும் அதன் அறிகுறிகள்

  • SHARE
  • FOLLOW
ADHD Symptoms: குழந்தைகளுக்கு ஏற்படும் ADHD வகைகள் மற்றும் அதன் அறிகுறிகள்


ADHD Types And Symptoms: ADHD என்பது கவனக்குறைவு ஹைப்பர் ஆக்டிவிட்டி கோளாறு ஆகும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான நரம்பியல் வளர்ச்சி நிலையாகும். இதற்கான காரணங்கள் மரபியல், முன்கூட்டிய பிரசவம், குழந்தை பிறப்பு எடை, மற்றும் கர்ப்ப காலத்தில் மருந்துகளுக்கு வெளிப்பாடு போன்றவை காரணமாகும். நோய் கட்டுப்பாட்டு மையம் வழங்கிய தரவுகளின் படி, அமெரிக்காவில் 3 முதல் 17 வயதுக்குட்பட்ட 6 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ADHD நோயால் பாதிக்கப்பட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ADHD நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனக்கிளர்ச்சி கொண்டவர்களாகவும், மிகவும் பதற்றமானவர்களாகவும், பணிகளை முடிப்பதில் சிரமம் உள்ளவர்களாகவும் இருப்பர். ஆனால், சில குழந்தைகளின் பருவ வளர்ச்சியின் இயல்பான பகுதியுடன் ADHD அறிகுறிகளில் சில ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் ADHD குறித்து மூத்த தொழில்சார் சிகிச்சையாளரும், லெக்சிகன் ரெயின்போ தெரபி மற்றும் குழந்தை மேம்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் இஷா சோனி அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

குழந்தைகளுக்கு ஏற்படும் ADHD அறிகுறிகள்

ADHD நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆரம்ப கால அறிகுறிகள் சிலவற்றைக் காண்போம்.

  • குழந்தைகள் என்ஜின் மூலம் இயக்கப்படுவது போல பயணத்திலேயே இருப்பர்
  • ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பது அல்லது விளையாடுவது போன்றவற்றில் கவனம் செலுத்தியது கடினம்
  • மிகவும் பதட்டமான மற்றும் அமைதியற்ற சூழ்நிலை
  • அடிக்கடி விளையாட்டில் மாறுதல்
  • நாள் முழுவதும் ஓய்வெடுப்பதில் கடினம்

இவை அனைத்தும் குழந்தைகளுக்கு ஏற்படும் ADHD-ன் அறிகுறிகளாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Child Asthma Treatment: குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவை நிர்வகிப்பது எப்படி?

இளமைப் பருவ ADHD-யின் அறிகுறிகள்

இந்த ADHD நோயானது குழந்தைப் பருவத்தில் கவனிக்கப்படாமல், இளமைப் பருவத்தில் அதாவது குடும்பம், பள்ளி, வேலை செல்வதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இளமைப் பருவத்தில் காணப்படும் அறிகுறிகளைக் காணலாம்.

  • தன் வேலைகளை ஒழுங்கமைப்பதில் சிரமம்
  • வகுப்பறையில் கவனக்குறைவு
  • அடிக்கடி பொருள்களை இழப்பது மற்றும் கவனக்குறைவாக இருப்பது
  • குறிப்பிடப்பட்ட நேரத்திற்காக காத்திருப்பது அவசியம்
  • அதிகமாக பேசுவது
  • அவசர முடிவு எடுப்பது
  • சுற்றியுள்ள பொருள்களைத் தொடர்ந்து நகர்த்துவது
  • சிந்திக்காமல் செயல்படுவது

இவை அனைத்தும் இளமைப் பருவ ADHD-ன் அறிகுறிகளாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Sleeping Problem For Babies: குழந்தைகளின் தூக்கமின்மைக்கு இதுதான் காரணம்!

ADHD வகைகள்

ADHD மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

  • அதிவேகத்தன்மை அல்லது மனக்கிளர்ச்சி: இவை மனக்கிளர்ச்சி மற்றும் அதிவேகத்தன்மை போன்ற நடத்தைகளுடன் தொடர்புடையவையாகும்.
  • கவனக்குறைவு: இந்த அறிகுறிகளில் கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் பணிகளை ஒழுங்கமைப்பதில் சிரமம் உள்ளிட்டவை அடங்கும்.
  • அதிவேகத்தன்மை மற்றும் கவனக்குறைவு இரண்டும் இணைந்தது.

இந்த அறிகுறிகளை வைத்து மட்டும் ஒரு குழந்தைக்கு ADHD உள்ளது என்பதை முடிவு செய்ய முடியாது. இந்த அறிகுறிகள் குறைந்தது ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து இருக்க வேண்டும். இவ்வாறு இருப்பின், உடனடியாக குழந்தை மருத்துவரை அணுகுவது நல்லது.

ஆனால், இதை உறுதிப்படுத்த எந்த மருத்துவ பரிசோதனையும் இல்லை. ஆயினும் இந்த சிகிச்சைக்கு பெற்றோரின் ஆலோசனை, நடத்தை சிகிச்சை, தொழில்சார் சிகிச்சை, உணர்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் குழந்தைக்கு உதவியாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Thyroid In Children: குழந்தைகளுக்கு தைராய்டு ஏற்படுவதற்கான காரணங்களும், அறிகுறிகளும்

Image Source: Freepik

Read Next

Baby Bath Powder: குழந்தைகளை குளிக்க வைக்க வீட்டிலேயே பாத் பவுடர் செய்யலாமே!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version