Tea Health Benefits: இந்திய டீ வகைகளும், அதன் நன்மைகளும்! காலையில் எந்த தேநீர் பெஸ்ட்?

தேநீரையும் பலரின் மனித வாழ்வையும் பிரித்து பார்க்க முடியாது. அத்தகைய தேநீரில் எத்தனை வகைகள் இருக்கிறது மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
Tea Health Benefits: இந்திய டீ வகைகளும், அதன் நன்மைகளும்! காலையில் எந்த தேநீர் பெஸ்ட்?


Tea Health Benefits: தேநீரையும் பல இந்தியர்களின் வாழ்வியலையும் பிரித்து பார்க்கவே முடியாது. தேநீர் என்பது உலகம் முழுவதும் விரும்பி உட்கொள்ளும் பானங்களில் ஒன்றாகும். குளிர்ச்சியான சூழ்நிலை என்றாலும் சரி, சூடான சூழ்நிலை என்றாலும் சரி பலரும் தேடித்தேடி அருந்தும் ஒரே பானம் தேநீர்தான். அதேபோல் தேநீரை சரியாக உட்கொண்டால் அது பல உடல்நலப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும்.

தேநீர் என்றாலே பலரும் சில வகையை மட்டுமே நோக்கிச் செல்கிறார்கள். ஆனால் இந்தியத் தேநீரில் பல வகை இருக்கிறது. இதில் சில டீ-க்கள் உடலுக்கு ஆகச்சிறந்த நன்மைகளை வழங்கும்.

அதிகம் படித்தவை: Coffee Vs Tea: காலையில் எழுந்ததும் குடிக்க எது சிறந்தது? - காபியா? டீயா?

தேநீர் என்றால் என்ன?

அனைத்து டீக்களும் கேமெலியா சினென்சிஸ் தாவரத்திலிருந்து பெறப்பட்டவை, இது முதலில் சீனா மற்றும் இந்தியாவிலிருந்து கிடைத்ததாகவே கூறப்படுகிறது.

இதில் ஃபிளாவனாய்டுகள் எனப்படும் முக்கியமான, தனித்துவமான மற்றும் ஆரோக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவற்றில் காஃபின் மற்றும் தைனைன் உள்ளது, இது உங்கள் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மேலும் அதை மிகவும் சுறுசுறுப்பாக மாற்றுகிறது.

தேநீர் நன்மையை முழுமையாக பெற அதை சரியாக கையாள வேண்டியதும் முக்கியம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான். அதைப்போல் தான் தேநீரும். இதன் அதிக நுகர்வும் ஆபத்துதான். சரி, விஷயத்துக்கு வருவோம். இந்தியத் தேநீர் வகைகளும், அதன் நன்மைகளையும் விரிவாக பார்க்கலாம்.

தேநீர் வகைகள் மற்றும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகள்

எப்போதும் தேநீர்களை காய்ச்சியவுடன் குடிப்பது நல்லது. அதேபோல் தேநீரில் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை பயன்படுத்தலாம். முடிந்தவரை ஆரோக்கியமான முறையில் டீ குடிப்பது நல்லது. தேநீர் வகைகளையும் அதன் நன்மைகளையும் பார்க்கலாம்.

types-of-tea

பிளாக் டீ

பிளாக் டீயில் அதிக அளவு காஃபின் உள்ளது. இது டீக்களுக்கு அடிப்படை என்றே கூறலாம். இதை தயாரிப்பதும் எளிதானது. பிளாக் டீ தேயிலை சீனா, இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. பிளாக் டீ இலைகள் முற்றிலும் ஆக்ஸிஜனேற்றப்படுகின்றன. இந்த வகை தேநீர் பல நன்மை பயக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.

பிளாக் டீ ஆரோக்கிய நன்மைகள்

இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாக்கிறது

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது

இஞ்சி தேநீர்

இஞ்சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உங்கள் நுரையீரலை வலுப்படுத்தவும் மிகவும் உதவியாக இருக்கும் ஒரு மூலப்பொருளாக அறியப்படுகிறது. தினமும் ஒரு சூடான கப் இஞ்சி டீயை பருகி உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். மேலும், சுவை மேம்பாடு மற்றும் பிற ஆரோக்கிய நலன்களுக்காக இந்த சூடான பானத்தில் தேனை சேர்க்கலாம்.

இஞ்சி டீ ஆரோக்கிய நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

மூக்கு அடைப்பு மற்றும் தொண்டை பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கிறது

அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது

கிரீன் டீ

கிரீன் டீ வேகவைத்த தேயிலை இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, மேலும் இது ஈஜிசிஜியின் அதிக செறிவையும் கொண்டுள்ளது. இது எடை இழப்பை ஊக்குவிக்கும். மற்ற தேயிலைகளுடன் ஒப்பிடும்போது இந்த தேயிலை இலைகள் குறைவான ஆக்ஸிஜனேற்றம் கொண்டவை.

கிரீன் டீ ஆரோக்கிய நன்மைகள்

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

எடை இழப்புக்கு உதவுகிறது

புதினா டீ

புதினா இலைகளை வேகவைத்து வடிகட்டுவதன் மூலம் புதினா தேநீர் தயாரிக்கப்படுகிறது. இந்த தேநீரின் இலைகளில் மெந்தோல், மென்டோன் மற்றும் லிமோனென் போன்ற பல அத்தியாவசிய பண்புகள் உள்ளன.

புதினா டீ ஆரோக்கிய நன்மைகள்

செரிமானத்திற்கு உதவுகிறது

வாய் புத்துணர்ச்சி தரும்

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது

மஞ்சள் தேநீர்

நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக மஞ்சள் ஆன்மீக ரீதியாகவும், ஆயுர்வேத ரீதியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காயத்திற்குப் பிறகு மஞ்சள் பால் குடிக்கும் பழக்கமும் மிகவும் பழமையானது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது வீக்கத்தைத் தடுக்கிறது.

அதேபோல், மஞ்சள் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாகும். ஆயுர்வேதத்தின் படி, இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது,

இஞ்சி டீ

மாறும் பருவத்தில் பொதுவாக உட்கொள்ளப்படும் தேநீர் இஞ்சி டீ ஆகும். இது சளி மற்றும் இருமலை குணப்படுத்துகிறது மற்றும் தொண்டை புண் குணமாக இஞ்சி டீ பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க இஞ்சி தேநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இஞ்சி டீயில் ஜிஞ்சரால் என்ற கலவை உள்ளது, இது பல வகையான வயிறு தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. விரும்பினால் இஞ்சி டீயுடன் தேன் சேர்த்து அருந்தலாம்.

கெமோமில் தேநீர்

கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் கெமோமில் டீயும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கெமோமில் டீயில் ஃபிளாவோன்கள் உள்ளன, அவை ஒரு வகை ஆக்ஸிஜனேற்றமாகும்.

ஹெல்த்லைனில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, சாப்பாட்டுடன் கெமோமில் தேநீர் அருந்துபவர்களின் மொத்த கொழுப்பு, ட்ரைகிளிசரைடு மற்றும் LDL கொழுப்பு அளவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கண்டுள்ளனர். கெமோமில் டீயைக் குடிப்பதன் மூலமும் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்.

image source: freepik

Read Next

Winter Morning Drink: குளிர்காலத்தில் தினமும் காலையில் இந்த பானங்களை குடியுங்கள்..

Disclaimer

குறிச்சொற்கள்