$
Symptoms Of Child Growth Hormone Deficiency: வளர்ச்சி ஹார்மோன் என்பது சோமாடோட்ரோபின் என அழைக்கப்படுகிறது. இவை மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வெளியிடப்படும் ஹார்மோன் ஆகும். இவை உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றின் உதவியுடனே குழந்தையின் உயரம் அதிகரிக்கிறது.
சரியான வளர்ச்சி ஹார்மோன் இருப்பது, எலும்புகள் மற்றும் தசைகளும் சிறப்பாக வளர உதவுகிறது. உயரம் குன்றிய குழந்தைகளுக்கு இதன் குறைபாடே காரணமாகும். மேலும், இதனால் குழந்தை பலவீனமடைவதுடன், அவர்களது ஒட்டு மொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். இது குறித்து புனேவில் உள்ள அங்குரா மருத்துவமனையின் குழந்தை உட்சுரப்பியல் நிபுணர், ஆலோசகர் டாக்டர் கொச்சுராணி ஆபிரகாம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Child Conjunctivitis Protection: குழந்தைகளுக்கு ஏற்படும் கன்ஜக்டிவிடிஸ் நோயிலிருந்து பாதுகாப்பது எப்படி?
வளர்ச்சி ஹார்மோனின் பங்கு
மயோ கிளினிக்கின் கூற்றுப்படி, “குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்க, வளர்ச்சி ஹார்மோன் உடலின் பல பாகங்களில் வேலை செய்கிறது. இது குழந்தையின் வளர்ச்சி, தசை மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகிறது. மேலும், இதில் கொழுப்பு விநியோகமும் தேவைக்கேற்ப நடக்கிறது. எலும்புகளில் உள்ள வளர்ச்சித் தகடுகள் இணைக்கப்பட்டவுடன், குழந்தையின் உயரம் அதன் பிறகு அதிகரிக்காது. எனினும் உயரம் அதிகரித்த பிறகும் வளர்ச்சி ஹார்மோன் வெளியிடப்படுகிறது. உடலில் மெட்டபாலிசத்தை சீராக பராமரிக்க மற்றும் உடல் கட்டமைப்பை பராமரிக்க உதவுகிறது. இவை தவிர, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சாதாரணமாக பராமரிக்க, வளர்ச்சி ஹர்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. கருவுக்கு பிறகு போதிய வளர்ச்சி ஹார்மோன் இல்லாவிட்டால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். இது உடல் கொழுப்பு மற்றும் உயர் இரத்த சர்க்கரை உட்பட பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.” எனக் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளில் வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டின் அறிகுறிகள்
குழந்தைகளில் வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு குழந்தைகளுக்கு மோசமான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த குறைபாட்டின் அறிகுறிகள் குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகே தோன்றத் தொடங்குகின்றன.
- வயதை விட இளமையான தோற்றம்
- தாமதமான பற்கள்
- மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும் போது, உயரத்தில் மெதுவான வளர்ச்சி
- மோசமான முடி மற்றும் நகங்கள்
- குழந்தைகளுக்கு குறைந்த இரத்த சர்க்கரை அளவு ஏற்படுவது
- புதிதாக பிறந்த குழந்தைகளில் மிகச்சிறிய ஆண்குறி இருப்பது.
வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டினால், குழந்தைகள் பெரும்பாலும் உயரம் குன்றி காணப்படுவர். எலும்பு எக்ஸ்ரே, உடல் அறிகுறிகள் மற்றும் சில சிறப்புப் பரிசோதனைகள் மூலம் வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டைக் கண்டறியலாம். எனினும் வளர்ச்சி ஹார்மோனை அதிகரிக்க, இயற்கையான வழிகள் இல்லை. எனினும், இந்த சிக்கலை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் தேவையான தீர்வுகளை எடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Childhood Asthma: குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்பட காரணம் என்ன? சரிசெய்வது எப்படி?
Image Source: Freepik