$
Prevention Tips Of Child Conjunctivitis: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கன்ஜக்டிவிடிஸ் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். எனினும், இது பள்ளி செல்லும் குழந்தைகளை அதிகம் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. கன்ஜக்டிவிடிஸ் எனப்படும் கண் காய்ச்சல் பொதுவான தொற்று நோயாகும். இது கண்களின் விழி வெண்படலத்தைப் பாதிப்பதாக அமைகிறது. இது கண்ணின் வெள்ளைப் பகுதி மற்றும் கண் இமைகளின் உட்புறத்தை உள்ளடக்கிய மெல்லிய திசு ஆகும். இவை தீவிரமாக இல்லாவிட்டாலும், அசௌகரியம் மற்றும் தற்காலிகமான பார்வை பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
கன்ஜக்டிவிடிஸ் நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?
குழந்தைகளுக்கு ஏற்படும் கன்ஜக்டிவிடிஸ் நோயிலிருந்து பாதுகாப்பதற்கான சில முக்கியமான குறிப்புகளைக் காண்போம்.
கண்கள் தொடுவது அல்லது தேய்ப்பதை தவிர்த்தல்
குழந்தைகள் அடிக்கடி கண்களைத் தொடுவதையோ அல்லது தேய்ப்பதையோ தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தொற்று அபாயத்தை அதிகரிக்கலாம். குழந்தைகளுக்கு ஏதேனும் கண்களில் அசௌகரியம் அல்லது அரிப்பு ஏற்பட்டால், அந்தப் பகுதியை மெதுவாகத் துடைக்க சுத்தமான துணிகளைப் பயன்படுத்துமாறு குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Child Asthma Treatment: குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவை நிர்வகிப்பது எப்படி?
வழக்கமான கண் பரிசோதனைகள் செய்தல்
வழக்கமான கண் பரிசோதனைகளைச் செய்வதன் மூலம், கண் தொடர்பான பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். கண் மருத்துவர் அல்லது ஆப்டோமெட்ரிஸ்ட், கன்ஜக்டிவிடிஸ் அல்லது வெண்படல அழற்சியை உடனடியாகக் கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

நல்ல சுகாதாரத்தை ஊக்குவித்தல்
கன்ஜக்டிவிடிஸ் பரவுவதைத் தடுப்பதற்கான சரியான நடைமுறைகளைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, குழந்தை கண்களைத் தொட்ட பிறகு, டிஸ்யூ பேப்பர்களைப் பயன்படுத்திய பிறகு அல்லது கன்ஜக்டிவிடிஸ் அறிகுறிகளைக் கொண்ட மற்றவர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு சோப்பு மற்றும் தண்ணீரால் அடிக்கடி கைகளைக் கழுவும் படி அறிவுறுத்த வேண்டும்.
சமூக விலகலைப் பயிற்சி செய்தல்
கண்காய்ச்சலின் அறிகுறிகளை வெளிப்படுத்தும் நண்பர்களிடமிருந்து, பாதுகாப்பான தூரத்தைக் கடைபிடிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில், கன்ஜக்டிவிடிஸ் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடி தொடர்பு அல்லது சுவாச நீர்த்துளிகள் போன்றவற்றின் மூலம் பரவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Juvenile Arthritis Symptoms: குழந்தைகளைப் பாதிக்கும் இளம் மூட்டுவலியின் முக்கிய அறிகுறிகள்
தனிப்பட்ட பொருள்களை கிருமி நீக்கம் செய்தல்
கன்ஜக்டிவிடிஸ் தூண்டுதல்கள் பொதுவான பயன்படுஹ்தப்படும் துண்டுகள், கண் கண்ணாடிகள், மற்றும் தலையணை உறைகள் போன்ற பொருள்களின் மூலம் பரவுகிறது. இந்தநோய்த்தொற்று அபாயத்தைக் குறைக்க இந்த பொருள்களைத் தவறாமல் கிருமி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், குழந்தைகள் பள்ளிகளில் சக நண்பர்களின் தனிப்பட்ட பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஓய்வு மற்றும் மீட்பு
குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்பு, நோய்த்தொற்றைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு சரியான ஓய்வு மற்றும் மீட்பு அவசியமாகும். எனவே, அவர்கள் போதுமான தூக்கத்தைப் பெறுவதை உறுதி செய்வது. சீரான உணவு முறையைக் கையாள்வது உள்ளிட்டவற்றைச் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருத்தல்
குழந்தைகளுக்கு வெண்படல அழற்சியின் அறிகுறிகளான கண் அரிப்பு, சிவத்தல், அதிகப்படியான கண்ணீர், அல்லது கண்ணில் இருந்து வெளியேற்றம் போன்றவை ஏற்பட்டால், அவர்களை வீட்டிலேயே வைத்து, சுகாதார நிபுணரிடம் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இது நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், குழந்தைகள் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதையும் உறுதிப்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Newborn immunity: பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது?
Image Source: Freepik