$
Brahma Muhurta Wake Up Benefits: பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுவதன் ஆரோக்கிய நன்மைகள் ஆயுர்வேதத்தில் விரிவாகக் கூறப்படுகிறது. இன்று பலரும் பிரம்ம முகூர்த்தத்தைப் பற்றிய விவரங்களை அறிவதில்லை. உண்மையில் இது ஒரு சிறப்பான நேரமாகும். இந்த நேரத்தில் எழுந்து நாம் செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்துவது வெற்றியைத் தரும் என்றே கூறலாம். குறிப்பாக, குழந்தைகள் பிரம்ம முகூர்த்தத்தின் போது எழுந்து படித்தால் மிகவும் அதீத நன்மைகளைத் தரும்.
இது தவிர, பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தியானம், யோகா, படிப்பது, வழிபாடு செய்வது போன்றவை மிகவும் பலனளிக்கும். ஆயுர்வேதத்தின் படி, பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது ஒரு நபருக்கு வலிமை, புத்திசாலித்தனம் மற்றும் நேர்மறை ஆற்றலைத் தருகிறது. இதில் ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையைச் சார்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா அவர்கள் ஆயுர்வேதத்தின் படி பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Face Glowing Tips: முகத்தை பளிச்சினு வைக்க இந்த ஆயுர்வேத வைத்தியங்களை டிரை பண்ணுங்க
பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் கிடைக்கும் பயன்கள்
ஆயுர்வேதத்தில் பிரம்ம முகூர்த்தத்திற்கென சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. டாக்டர் ஷ்ரே அவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இந்த நேரம் சரஸ்வதி யாம் என அழைக்கப்படுகிறது. பிரம்ம முகூர்த்த நேரம் என்பது இரவின் கடைசி மணி நேரம் அதாவது அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை ஆகும்.
இந்த நேரத்தில் சூரிய உதயம் நிகழும் என்பதால் மிகவும் நன்மை பயக்கும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் யோகா, படிப்பது போன்றவை மிகவும் நன்மை தரும். இவ்வாறு எழுவது பகலில் பல மணி நேரம் கிடைக்கும். ஆயுர்வேதத்தில் உள்ள அனைத்து மணி நேரங்களிலும், இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திருப்பது அந்த நாளையே நேர்மறையான எண்ணங்களுடன் தொடங்க வைக்கிறது. இதன் மூலம் அந்த நபர் நாள் முழுவதும் நன்றாக இருப்பதாக உணர்வர். இதில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் கிடைக்கும் பலன்கள் சிலவற்றைக் காண்போம்.
- பிரம்ம முகூர்த்தத்தின் போது எழுந்திருப்பது உடலின் ஆற்றல் மட்டத்தை அதிகரித்து, புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.
- பிரம்ம முகூர்த்தத்தில் உடலில் நல்ல ஹார்மோன்கள் வெளியாகி மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது.
- மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு பிரம்ம முகூர்த்த நேரம் சிறந்த நேரமாகும். இந்த நேரத்தில் எழுவது மனக்கவலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
- பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம் சரியான நேரத்தில் தூங்குவதையும் வழக்கமாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனையைத் தவிர்க்க முடியும்.
- பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திருக்கும் போது செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. இதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.
- ஆரோக்கியமற்ற தூக்க சுழற்சி முறைகள் காரணமாகவே பெரும்பாலான நோய்கள் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் தினமும் சரியான நேரத்தில் எழுவதால் பல்வேறு நோய்களிலிருந்து விடுபடலாம்.
பிரம்ம முகூர்த்தத்தில் தினந்தோறும் தவறாமல் எழுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். எனவே உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இந்த நேரத்தில் எழுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds For Brain: மூளைத் திறனை அதிகரிக்க இந்த ஒரு விதையை எடுத்துக்கோங்க
Image Source: Freepik