Doctor Verified

Pumpkin Seeds For Brain: மூளைத் திறனை அதிகரிக்க இந்த ஒரு விதையை எடுத்துக்கோங்க

  • SHARE
  • FOLLOW
Pumpkin Seeds For Brain: மூளைத் திறனை அதிகரிக்க இந்த ஒரு விதையை எடுத்துக்கோங்க


இந்த சூழ்நிலையில் மூளைத் திறனை மேம்படுத்த சில ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கையாள வேண்டும். அந்த வகையில் பூசணி விதைகள் பெரிதும் உதவுகிறது இதில் ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா அவர்கள் மூளை ஆரோக்கியத்திற்கு பூசணி விதை நன்மைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Herbs For Kidney Health: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்க இந்த மூலிகைகளை எடுத்துக்கோங்க

மூளைத்திறன் மேம்பாட்டிற்கு பூசணி விதைகளின் நன்மைகள்

  • பூசணி விதைகளில் தாமிரம், மக்னீசியம், துத்தநாகம் மற்றும் இன்னும் பிற அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை மூளைக்கு உகந்த ஊட்டச்சத்துக்களாகும். மேலும் இவை மூளை செல்கள் சேதமடைவதைத் தடுக்க உதவுகிறது.
  • இதில் நிறைந்துள்ள மக்னீசியம் சத்துக்கள், மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவும் கனிமமாகும். மேலும் இது நரம்பியக் கடத்தல் உள்லிட்ட பல்வேறு உயிர்வேதியியல் செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • மக்னீசியம் சத்துக்கள் நரம்பு செல்களின் சரியான செயல்பாட்டிற்கு உதவுவதுடன், மூளையில் சமிக்ஞைகளைக் கடத்த உதவுகிறது.
  • வேலையில் கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளவர்கள் அல்லது விரைவாக விஷயங்களை மறப்பவர்கள் போன்றோர் பூசணி விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை மூளையின் திறனை அதிகரிப்பதுடன், நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
  • இந்த விதைகளில் உள்ள அமினோ அமிலங்கள், புரோட்டீன்கள் போன்றவை மூளையின் சிந்திக்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது.
  • இதில் உள்ள வைட்டமின் பி-12 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • அமினோ அமிலங்கள் மற்றும் பி-காம்ப்ளக்ஸ் நிறைந்த பூசணி விதைகளை உட்கொள்வது மூளை கவனத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் மக்னீசியம் போன்றவை மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.
  • அடிக்கடி சோர்வு மற்றும் பலவீனத்தை உணர்பவர்கள் பூசணி விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.

பூசணி விதைகளை எடுத்துக் கொள்வது மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனினும் வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் பூசணி விதைகளை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: எந்த நேரத்தில் பழங்கள் சாப்பிடுவது நல்லது? ஆயுர்வேதம் கூறும் கருத்து இதோ

Image Source: Freepik

Read Next

Papaya Leaves Benefits : சருமம் முதல் எடையிழப்பு வரை; பப்பாளி இலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

Disclaimer