Pumpkin Seeds Benefits For Male: பூசணி விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளைத் தருகிறது. இதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல்வேறு ஆரோக்கிய பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகும். இதனை ஆண்கள் உட்கொள்வது மிகவும் சிறப்பு மிக்கதாகும். அதிலும் நீரிழிவு நோய் அல்லது வேறு சில கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்களுக்கு பூசணி விதைகள் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் பூசணி விதைகளின் நன்மைகள் மற்றும் ஆண்களுக்கு பூசணி விதைகள் தரும் பயன்பாடுகள் குறித்து காணலாம்.
பூசணி விதைகளின் ஊட்டச்சத்துக்கள்
பூசணி விதைகளில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் இரும்பு, கால்சியம், வைட்டமின் பி2, பீட்டா கரோட்டீன் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலில் கொழுப்பின் அளவை பராமரிப்பதுடன், இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு பூசணி விதைகள் பயனுள்ளதாக அமைகிறது. ஆண்களுக்கு பூசணி விதை தரும் நன்மைகள் குறித்து ஆரோக்யா ஹெல்த் சென்டரின் டாக்டர் எஸ்.கே.பாண்டே அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Sleeping Naked Benefits: ஆடை இல்லாமல் தூங்குவது ஆண்களுக்கு கருவுறுதல் தன்மையை அதிகரிக்குமா?
ஆண்களுக்கு பூசணி விதைகளின் நன்மைகள்
ஆண்கள் பூசணி விதையை எடுத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
ஆற்றல் மட்டத்தை அதிகரிக்க
ஆண்கள் பூசணி விதைகளை உட்கொள்வது உடலில் இரத்தம் மற்றும் ஆற்றல் அளவை உருவாக்க உதவுகிறது. மேலும், இதன் பல்வேறு ஆரோக்கிய பண்புகள் ஆண்களின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
பூசணி விதைகளில் நார்ச்சத்துக்கள், கொழுப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும், இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உடலில் கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இத்துடன் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது. இதிலுள்ள மெக்னீசியம் சத்துக்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
விந்தணுக்களை ஆதரிக்க
பூசணி விதைகளை உட்கொள்வது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. என்னும் மருத்துவரின் ஆலோசனையின் படி இதை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Spinach Benefits: குளிர்காலத்தில் ஆண்கள் தவறாமல் இதை சாப்பிடனும்., ஏன் தெரியுமா?
புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்க
மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கங்களால் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இந்த விதைகளில் உள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செலினியம், மக்னீசியம், நார்ச்சத்து போன்றவை புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. இதன் வழக்கமான நுகர்வின் மூலம் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம்.
நீரிழிவு நோய்க்கு
பூசணி விதைகள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனைத் தொடர்ந்து உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. ஆண்களுக்கு சர்க்கரை நோய் பிரச்சனை அதிகரிப்பதால், இந்த பிரச்சனையின் ஆபத்தைக் குறைக்க பூசணி விதைகளை உட்கொள்ளலாம்.
பூசணி விதைகளில் புரதம், நிறைவுறா கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனினும், எந்தவொரு மருந்தையும் எடுத்துக் கொள்ளும் முன்பாக, மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Men Health: எச்சரிக்கை…ஆண்களை பாதிக்கும் ஹார்மோன் மாற்றம்; அறிகுறிகள் இதோ!
Image Source: Freepik