Does Sleeping Naked Increase Testosterone: தற்போது பெரும்பாலான மக்கள் தூங்கும் போது வசதியாக இருக்க ஆடை அணியாமல் தூங்க விரும்புகிறார்கள். அதே சமயம், இறுக்கமான ஆடைகளில் சரியாக தூங்குவது கடினம், இது தோல் எரிச்சலை ஏற்படுத்தும். ஆடை அணியாமல் தூங்குவது, ஆரோக்கியத்திற்கு நல்லது என பல ஆய்வுகள் கூறுகின்றனர். ஆடை இல்லாமல் தூங்குவதால், உடலை நிதானப்படுத்தி நல்ல தூக்கத்திற்கு வழிவகும்.
இதற்கிடையில், ஆடையின்றி உறங்குவது ஆண்களின் கருவுறுதலை அதிகரிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். இது குறித்து கருவுறுதல் நிபுணரும் மகளிர் மருத்துவ நிபுணருமான டாக்டர் தனுஸ்ரீ பாண்டே பட்கோன்கர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில், இது குறித்து அவர் ஆழமாக பேசியுள்ளார். இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : ஆண்மையை மேம்படுத்த வேண்டுமா? உங்களுக்கான 5 மாத்திரைகள் இங்கே
ஆடை இல்லாமல் தூங்குவது ஆண்களின் கருவுறுதலை அதிகரிக்குமா?

இது குறித்து கருவுறுதல் நிபுணரும் மகளிர் மருத்துவ நிபுணருமான டாக்டர் தனுஸ்ரீ கூறுகையில், பிறப்புறுப்பு பகுதியில் வெப்பநிலை அதிகரித்தால் பிரச்சினைகளும் அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். நீங்கள் தூங்கும் போது மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிந்தால், அது உங்கள் உடல் பாகங்களில் வெப்பத்தை உண்டாக்கும்.
அதிகப்படியான வெப்பம் காரணமாக, விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரம் இரண்டும் மோசமடையக்கூடும். எனவே, இரவில் தூங்கும் போது இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. நீங்கள் பகலில் கூட மிகவும் இறுக்கமான பேன்ட் அல்லது உள்ளாடைகள் அணிவதை தவிர்க்கவும். இல்லையெனில், இது உங்கள் விந்தணு எண்ணிக்கையையும் பாதிக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Male Fertility Supplements: ஆண்மை அதிகரிக்க வேண்டுமா? இந்த மாத்திரைகளை ட்ரை பண்ணுங்க..
இறுக்கமான ஆடைகளை அணிந்து தூங்குவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறதா என்பது குறித்து எந்த ஆராய்ச்சியும் வெளிவரவில்லை. ஆனால், ஆடை அணியாமல் தூங்குவதால் உடலுக்கு பல நன்மைகளை அளிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில், விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதும் அடங்கும். இது நேரடியாக வேலை செய்யாது, ஆனால் உடலை நிதானமாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் உடல் தளர்வாக இருந்தால், உங்கள் விந்தணு எண்ணிக்கையும் நன்றாக இருக்கும் என்பது உண்மை.
இரவில் ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்:

- ஆடை இல்லாமல் தூங்குவது ஈஸ்ட் தொற்று அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் யோனி ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
- இரவில் ஆடை இல்லாமல் தூங்குவது உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, இது எடையை குறைக்கவும் உதவுகிறது.
- இது உங்கள் முழு உடலையும் ரிலாக்ஸ் செய்து, நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : ஆண்கள் பின்பற்ற வேண்டிய 6 ஹைஜீன் பழக்கங்கள்!
- ஆடை இல்லாமல் தூங்குவது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது பல நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
- இரவில் வசதியான ஆடைகளை அணிந்து மட்டுமே தூங்க முயற்சி செய்யுங்கள். இது உங்களுக்கு நன்றாக தூங்க உதவும், மேலும் குறைந்த விந்தணு எண்ணிக்கையின் அபாயத்தையும் குறைக்கும்.
Pic Courtesy: Freepik