$
இஸ்லாமிய மதத்தில், ஆண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சுன்னத்து கல்யாணம் செய்வார்கள். இதை ஏன் செய்கிறார்கள் தெரியுமா? இதனால் எவ்வளவு நன்மைகள் ஏற்படும் தெரியுமா? மதம் சார்ந்த சடங்காக இதை பார்க்காமல், இதில் உள்ள அறிவியல் கருத்துகளை இங்கே பகுத்தறிவோம். சுன்னத் என்பது ஆண் குறியின் முன்னே உள்ள தோலை நீக்கும் ஒரு சடங்கு ஆகும். இவ்வாறு செய்வதால் ஆண்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று அறிவியில் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஆண்கள் சிறுநீர் கழிக்கும்போது, முழு சிறுநீரும் வெளியேறாமல், கொஞ்சம் சிறுநீரக பாதையிலேயே தங்கி விடுகிறது. இதனால் சிறுநீரகம் சார்ந்த தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால், சுன்னத் செய்தவர்களுக்கு, இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாது. ஏனெனில் சிறுநீர் பாதையில் சிறுநீர் தேங்குவதற்கு வாய்ப்பில்லை. மேலும் சுன்னத் செய்த ஆண்களுக்கு எந்த நோய்த்தொற்றுகளும் ஏற்படாது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இதையும் படிங்க: ஆண்மையை மேம்படுத்த வேண்டுமா? உங்களுக்கான 5 மாத்திரைகள் இங்கே
சுன்னத்து செய்த ஆண்களுக்கு, சிறுநீரகத்திலோ, ஆன்குறியிலோ புற்றுநோய் ஏற்படுவதில்லை. சுன்னத் செய்யாத ஆண்களுக்கு 2.2 சதவீதம் புற்றுநோய் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் பாலியல் ரீதியாக பரவும் நோய்களில் இருந்து சுன்னத் செய்த ஆண்கள் தப்பிக்கின்றனர். வாயை சுற்றியும், ஆண்குறியிலும் புண்கள் ஏற்படாது. எய்ட்ஸ் நோய் கூட வராது. ஆனால் எய்ட்ஸ் நோய் உள்ளவர்களிடம் உடலுறவு வைத்துக்கொண்டால் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் எய்ட்ஸ் வரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

குறிப்பாக இதனால் பெண்களுக்கும் பயன் உண்டு. அதாவது சுன்னத் செய்த ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டால், அவர்களுக்கு கருப்பை வாய் புற்று நோய் ஏற்படும் அபாயம் இருக்காது. ஆகையால் இது ஆண்களுக்கு மட்டுமல்ல, அவர்களது மனைவிக்கும் நன்மை பயக்கும். இது போன்ற விஷயங்களை, ஆன்மீகத்தை தாண்டி இதில் உள்ள அறிவியல் கருவை நான் பார்க்க வேண்டும்.
Image Source: Freepik