Dehydration Remedies: கோடையில் நீரிழப்பைத் தவிர்க்க இந்த வீட்டு வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Dehydration Remedies: கோடையில் நீரிழப்பைத் தவிர்க்க இந்த வீட்டு வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க

ஆனால், இது சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் ஆபத்தை விளைவிக்கலாம். முக்கியமாக உடல் உறுப்புகளை பாதிக்கும் நிலை ஏற்படலாம். மேலும் வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். எனவே அதீத வெப்பத்தால் ஏற்படும் நீரிழப்பைத் தவிர்க்க சில ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். இதில் நீரிழப்பைத் தவிர்க்க உதவும் வீட்டு வைத்திய முறைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Headache Hacks: தீராத தலைவலியால் அவதியா? உடனே நிவாரணம் பெற சூப்பர் வீட்டு வைத்தியம்!

நீரிழப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்

  • குறைந்தளவு நீர் உட்கொள்ளல்
  • அதிக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு
  • நீரிழிவு, தொற்றுநோய் அல்லது ஆல்கஹால் அருந்துதல் போன்றவற்றால் அதிகப்படியான சிறுநீர் கழித்தல்
  • உயர் இரத்த சர்க்கரை அளவு

இவை அனைத்தும் நீரிழப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாகும்.

நீரிழப்பைத் தடுக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்

கோடைகாலத்தில் ஏற்படும் நீரிழப்பைச் சமாளிக்க சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம்.

மோர்

இது ஒரு நீரேற்றம் மற்றும் தாதுக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை நிரப்ப உதவுகிறது. எனவே கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தவிர்க்க, ஒரு டீஸ்பூன் காய்ந்த இஞ்சி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மோர் குடித்து வருவது, உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். கூடுதல் நன்மைகளைப் பெற நாள்தோறும் 3 முதல் 4 கப் அளவு மோர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

ஆரஞ்சு சாறு

நீரிழப்பைக் கட்டுப்படுத்த பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாளைக்கு 1-2 கிளாஸ் அளவு சர்க்கரை இல்லாத ஆரஞ்சு சாற்றைக் குடிப்பதன் மூலம் வீட்டிலேயே நீரிழப்பைக் கட்டுப்படுத்தலாம். இதில் ஆரோக்கியமான அளவு மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளும், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நிறைந்துள்ளன. அதன் படி நீரேற்றத்திற்கு ஆரஞ்சு சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Uric Acid Level Remedies: யூரிக் அமிலத்தால் இத்தனை பிரச்சனையா? தவிர்க்க என்ன செய்வது?

தயிர் & பாலாடைக்கட்டி

உணவில் தயிர் மற்றும் பாலாடைக்கட்டி சேர்த்துக்கொள்வது, உடலுக்குத் தேவையான நீரேற்றத்தைத் தருகிறது. ஏனெனில், இதிலுள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவை மீட்டெடுப்பதன் மூலம் நீரேற்றத்திற்கு உதவுகிறது. இதில் தயிரில் வெந்தயப் பொடியைச் சேர்த்து எடுத்துக் கொள்வது நீரிழிவுக்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் படி, ஒவ்வொரு நாளும் குறைந்தது 1 அல்லது 2 கப் சாப்பிட வேண்டுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

    எலுமிச்சை நீர்

    இது ஒரு முக்கிய கோடைக்கால பானமாகும். இது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் மற்றும் கடுமையான வெப்பத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறத். இது உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அளவை மீட்டெடுக்கிறது.வீட்டிலேயே நீரிழப்பைத் தவிர்க்க எலுமிச்சைத் தண்ணீரை ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை குடிக்கலாம்.

    ஆப்பிள் சாறு

    கோடைக்காலத்தில் நீரிழப்பைத் தவிர்க்க உதவும் பானங்களில் ஆப்பிள் சாறும் அடங்கும். இதில் நல்ல அளவிலான மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆப்பிள் சாற்றில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் இழந்த தாதுக்களை மீட்டெடுக்க உதவுகிறது. இதற்கு நாள்தோறும் 1 முதல் 2 முறை குடிக்கலாம்.

    இந்த பதிவும் உதவலாம்: Heat Rashes Remedies: கோடையில் ஏற்படும் வியர்க்குருவை நீக்க இந்த ஐந்து பொருள்களை மட்டும் யூஸ் பண்ணுங்க

    வாழைப்பழங்கள்

    நீரிழப்பின் போது உடலில் இருந்து பொட்டாசியம் எலக்ட்ரோலைட்டுகள் இழக்கப்படுகிறது. இதற்கு வாழைப்பழம் சிறந்த தேர்வாக அமைகிறது. வாழைப்பழங்களை சாப்பிடுவது பொட்டாசியத்தின் சிறந்த ஆதாரமாக இருப்பதால், நீரிழப்பைத் தவிர்க்க வாழைப்பழங்களை உட்கொள்ளலாம்.

    பார்லி நீர்

    இது நீரிழிவை எதிர்த்துப் போராடுவதுடன், உடல் இழக்கப்பட்ட திரவங்களை மாற்றி நீரேற்றமாக வைக்க உதவுகிறது. இது முக்கிய தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் பொட்டாசியம் சத்துக்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, வயதானவர்களுக்கு ஏற்படும் நீரிழப்பைத் தவிர்க்க இந்த நீர் பெரிதும் உதவுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 4 முறை பார்லி நீரைக் குடிக்கலாம்.

    barley water benefits

    தேங்காய் தண்ணீர்

    வீட்டிலேயே எளிதாக கிடைக்கக் கூடிய நீரிழப்புக்கு சிறந்த தீர்வாக அமைவது தேங்காய் தண்ணீர் ஆகும். இதில் அதிகளவு எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளது. மேலும் இதில் இரும்பு மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. சாதாரண நீரை விட தேங்காய் நீர் உடலை மிக விரைவாக நீரேற்றமடையச் செய்ய அனுமதிக்கிறது.

    இந்த பானங்களை அருந்துவதன் மூலம் உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தவிர்க்கலாம்.

    இந்த பதிவும் உதவலாம்: Skin Itching Remedies: கொளுத்தும் வெயிலில் சருமத்தில் எரிச்சலா? சிம்பிளான இந்த வீட்டு வைத்தியங்கள் போதும்

    Image Source: Freepik

    Read Next

    Eye Health Tips: உஷ்ணத்தால் உங்க கண் எரிச்சலுடன் நீர் வடிகிறதா? அப்போ இந்த விஷயங்களை செய்யுங்க!

    Disclaimer