Uric Acid Level Remedies: யூரிக் அமிலத்தால் இத்தனை பிரச்சனையா? தவிர்க்க என்ன செய்வது?

  • SHARE
  • FOLLOW
Uric Acid Level Remedies: யூரிக் அமிலத்தால் இத்தனை பிரச்சனையா? தவிர்க்க என்ன செய்வது?

யூரிக் அமிலம் என்றால் என்ன?

ப்யூரின்கள் சில உணவுகளில் இயற்கையாக நிகழும் பொருள்களாகும். இந்த ப்யூரின் நிறைந்த உணவுகளின் செரிமானத்தின் ஒரு துணை தயாரிப்பே யூரிக் அமிலம் ஆகும். இது உடலில் உருவாகி உடைக்கப்படுகிறது. இது சிறுநீரங்கள் வழியாக வடிகட்டி, சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது. எனினும் உடல் சரியாக யூரிக் அமிலத்தை அகற்ற முடியாவிட்டாலோ அல்லது அதிகப்படியான பியூரின் எடுத்துக் கொள்ளும் போதோ இது ரத்தத்தில் குவிகிறது. இதனால் உடல் நலத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Itchy Skin Remedies: கோடைக்காலத்தில் சரும அரிப்பைத் தடுக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் இதோ

யூரிக் அமிலத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் வழிகள்

சர்க்கரை பானங்களைத் தவிர்ப்பது

பழச்சாறுகள் மற்றும் சோடா உள்ளிட்ட சர்க்கரை பானங்களை எடுத்துக் கொள்வது உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கலாம். மேலும், உயர்-பிரக்டோஸ் கார்ன் சிரப் பல சர்க்கரை பானங்களில் உயர் யூரிக் அமில அளவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் மூலிகை தேநீர், தண்ணீர் மற்றும் புதிய பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளலாம். இது நீரேற்றமாக வைக்க உதவுகிறது.

குறைந்த பியூரின் உணவுகளை உட்கொள்வது

அதிகளவு பியூரின்கள் நிறைந்த உணவை உட்கொள்வது யூரிக் அமில அளவை அதிகரிக்கச் செய்யலாம். எனவே குறைந்த ப்யூரின் உணவை உட்கொள்வது யூரிக் அமில அளவைக் கணிசமாக குறைக்க உதவுகிறது. அதன் படி, குறைந்தளவு பியூரின் கொண்ட பழங்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் வெள்ளரி, கேரட், இலை கீரைகள் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறைந்த கொழுப்பு நிறைந்த தயிர், பால், சீஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது

அதிகளவு நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகளை உட்கொள்வது அதிக யூரிக் அமில அளவு கொண்டவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும். ஏனெனில், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் இரத்த ஓட்டத்தில் இருந்து அதிகப்படியான யூரிக் அமிலத்தை உறிஞ்சி அகற்ற உதவுகிறது. எனவே, முழு தானியங்கள், பருப்பு வகைகள், நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Bloating Home Remedies: வயிறு உப்புசத்தால் அவதியா? இந்த 6 பொருளில் ஒன்னு போதும்

உடல் எடையை பராமரித்தல்

உடலில் அதிக யூரிக் அமிலம் இருப்பதற்கான காரணம் அதிக எடையுடன் இருப்பதும் காரணமாகும். ஏனெனில், தசை செல்களை விட கொழுப்பு செல்களே அதிகளவு யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. அதிக உடல் எடையுடன் இருக்கும் போது சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டுவதை கடினமாக்குகிறது. எனவே ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம் யூரிக் அமிலத்தைக் குறைக்கலாம்.

இன்சுலின் அளவை பராமரிப்பது

அதிக இன்சுலின் அளவு இருப்பதும் யூரிக் அமில உற்பத்தியை அதிகமாக்கலாம். இன்சுலின் அளவுகள் அதிகமாக இருப்பின், மருத்துவ ஆலோசனையுடன் வாழ்க்கைமுறை மாற்றங்களை மேம்படுத்தி, அதை சமநிலைப்படுத்த வேண்டும். இதற்கு ஆரோக்கியமான இன்சுலின் அளவைப் பராமரிப்பதன் மூலம் யூரிக் அமில அளவைக் குறைக்கலாம். மேலும் அதிகளவு இன்சுலின் அளவால் ஏற்படும் உடல்நலச் சிக்கல்களையும் தடுக்கலாம்.

உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் என்ன நடக்கும்?

அதிகளவு யூரிக் அமிலத்தால் ஹைப்பர்யூரிசிமியா என்ற நிலை ஏற்படலாம். இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த அதிகளவு யூரிக் அமில அளவுகள் மூட்டுகளில் யூரேட் படிகங்களை உருவாக்குகிறது. இதனால், கீல்வாதம் என்ற வலிமிகுந்த நிலை ஏற்படலாம். மேலும், ஹைப்பர்யூரிசிமியா காரணமாக சிறுநீரக நோய், சிறுநீரக கற்கள், இதய நோய், தடிப்புத் தோலழற்சி, வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறி போன்ற அபாயங்களை ஏற்படுத்தலாம். மேற்கூறிய வழிமுறைகளைக் கையாண்டு உடலில் யூரிக் அமிலத்தைக் குறைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Skin Itching Remedies: கொளுத்தும் வெயிலில் சருமத்தில் எரிச்சலா? சிம்பிளான இந்த வீட்டு வைத்தியங்கள் போதும்

Image Source: Freepik

Read Next

Prickly Heat Rash: வியர்க்குருவால் அவதியா? உடனே நிவாரணம் பெற இந்த வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!

Disclaimer