World AIDS Day 2023: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒற்றுமையைக் காட்டவும், இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் (World AIDS Day) கொண்டாடப்படுகிறது.
AIDS எப்படி பரவும் தெரியுமா?
AIDS (Acquired Immune Deficiency Syndrome) ஒரு பொது சுகாதார சீரழிவு ஆகும். இது HIV-யால் ஏற்படுகிறது. இது HIV பாதிக்கப்பட்ட நபருடன் பாதுகாப்பற்ற உடலுறவு, நரம்பு வழியாக ஊசிகளைப் பகிர்ந்துகொள்வது, அசுத்தமான இரத்தமாற்றம், ரேசர் பிளேடுகளைப் பகிர்வது போன்றவற்றால் ஏற்படுகிறது.
AIDS இருந்தால் இதுவும் இருக்கும்
நிமோனியா, வயிற்றுப்போக்கு, சோர்வு, எடை இழப்பு மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் HIV நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அவதிப்படுவார். இந்த நிலையில் அவர்களது நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும். இதனை சிகிச்சை மற்றும் மருந்துகளால் கட்டுப்படுத்தலாமே தவிர, முழுமையாக குணப்படுத்த முடியாது.
யாரெல்லாம் ஆபத்தில் உள்ளனர்?
AIDS நோயின் மரணம் தவிர்க்க முடியாதது. AIDS பாதிப்பு இந்தியாவில் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், கடந்த இரண்டு வருடங்களாக இது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இரத்த பெறுபவர்கள், போதைக்கு அடிமையானவர்கள், கைதிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் இந்த நோயின் விளிம்பில் நிற்கிறார்கள்.
விழிப்புணர்வு அவசியம்
அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் கூட்டாக அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் நோய் கண்டறிதல் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பரவல் அபாயகரமான வரம்பை அடையும் முன், போதுமான பொது சுகாதார விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
Image Source: Freepik