Stem Cell Transplant Treatment For HIV: உடலில் HIV நோயின் தாக்கம் அதிகரிக்கும் போது, அது AIDS ஆக உருமாருகிறது. மேலும் பாதுகாப்பற்ற உடலுறவு, பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம் செலுத்துதல், போதை மருந்து மற்றும் ஊசி பயன்படுத்துவது போன்றவற்றால் இது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு ஈஸியாக பரவுகிறது.
HIV, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது, இதன் காரணமாக கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் ஏற்படும் AIDS, குணப்படுத்த முடியாத நோயாகவே இன்றும் கருதப்படுகிறது. இந்த நோயால் இது வரை 85.6 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 40.4 மில்லியன் பேர் HIV/AIDS நோயால் இறந்துள்ளனர். உலகளவில், 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 39 மில்லியன் மக்கள் HIV-யால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக AIDS சிகிச்சைக்காக விஞ்ஞானிகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எய்ட்ஸ் சிகிச்சைக்கான சில முயற்சிகள் நல்ல பலனைக் காட்டுவதாக சில மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நல்ல முடிவுகள்.!
HIV-க்கு சிகிச்சையளிப்பதற்கான முயற்சிகள் ஓரளவு வெற்றியை அடைந்து வருவதாகத் தெரிகிறது. இருப்பினும் உலகளவில் இது குணப்படுத்த முடியாத நோயாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை, மூன்று பேர் HIV நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு HIV பாதித்த பெண் ஒருவருக்கு இந்த நோய்க்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க, ஸ்டெம் செல் மாற்று தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் தொற்றுநோயைக் குணப்படுத்துவதில் வெற்றி கிடைத்தது. HIV நோயால் குணமடைந்த முதல் பெண் மற்றும் மூன்றாவது நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
HIV-யில் ஸ்டெம் செல் சிகிச்சை..
பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன் சிகிச்சைக்காக, HIV வைரஸுக்கு எதிராக இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஒரு நன்கொடையாளர் கண்டுபிடிக்கப்பட்டார்.
நோயாளிகளுக்கு புற்றுநோய் நோயெதிர்ப்பு செல்களைக் கொல்ல முதலில் கீமோதெரபி கொடுக்கப்பட்டது. இந்த செயல்முறைக்குப் பிறகு, ஸ்டெம் செல்கள் அதில் இடமாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த பெண்ணின் உடலில் HIV வைரஸுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு சக்தி உருவானது என்று சான் பிரான்சிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் AIDS நிபுணர் ஸ்டீவன் டீக்ஸ் கூறியுள்ளார்.
HIV-க்கும் சிகிச்சை.!
இந்த ஸ்டெம் செல் சிகிச்சை முறையின் மூலம், எதிர்காலத்தில் HIV தொற்றை குணப்படுத்தப்படும் என நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த தொழில்நுட்பம் வெற்றி பெற்றால் இனி AIDS குணப்படுத்த முடியாத நோயாக இருக்காது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
Image Source: Freepik