Doctor Verified

Spine Cancer Symptoms: முதுகெலும்பு புற்றுநோய் அறிகுறிகளும், அதன் சிகிச்சை முறைகளும்

  • SHARE
  • FOLLOW
Spine Cancer Symptoms: முதுகெலும்பு புற்றுநோய் அறிகுறிகளும், அதன் சிகிச்சை முறைகளும்


முதுகுத்தண்டு புற்றுநோயானது இரண்டு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஆகும். இதில் முதன்மை கட்டிகள் முதுகுத்தண்டு வடம் அல்லது முதுகுத்தண்டு பகுதியில் எழுகின்றன. அதே சமயம் இரண்டாம் நிலை கட்டிகள் அல்லது மெட்டாஸ்டேடிக், மற்றொரு இடத்திலிருந்து முதுகெலும்புக்கு பரவும் புற்றுநோயாகும். ஃபரிதாபாத் ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையின் மருத்துவ புற்றுநோயியல் துறையின் மூத்த ஆலோசகர் மற்றும் தலைவர் டாக்டர் மோஹித் ஷர்மா முதுகெலும்பு புற்றுநோய் குறித்த அறிகுறிகள், ஆபத்து காரணிகள் மற்றும் சிகிச்சை முறைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Lung Cancer Symptoms: தொடர் இருமல் புற்றுநோயை ஏற்படுத்துமா? நிபுணர்கள் கூறும் விளக்கம்

முதுகெலும்பு புற்றுநோய் எங்கு உருவாகிறது?

முதுகெலும்பு கட்டிகள், நரம்புகள், எலும்புகள் மற்றும் முதுகெலும்பை உருவாக்கும் பிற திசுக்களில் உருவாகலாம். இதில் 10%-ற்கும் குறைவான முதுகெலும்பு கட்டிகள், முதுகெலும்பில் தொடங்குகிறது. இவை தீங்கற்ற அல்லது புற்றுநோய் அல்லாத கட்டிகளாக இருக்கலாம். பெரும்பாலான முதுகெலும்பு கட்டிகள் மெட்டாஸ்டேடிக் எனப்படுகிறது. அதாவது இவை உடலின் வெவ்வேறு பகுதிகளில் புற்றுநோயிலிருந்து பரவுகிறது. முதுகுத் தண்டு வளரும் போது, அவை எலும்புகளை வலுவிலக்கச் செய்து முதுகுத்தண்டு மற்றும் நரம்புகளை அழுத்தி, நரம்பியல் காயங்கள் மற்றும் முதுகெலும்பு முறிவுகளை ஏற்படுத்தும்.

முதுகெலும்பு புற்றுநோய் அறிகுறிகள்

முதுகெலும்பு புற்றுநோய் கட்டியின் அளவு, வகை, இருப்பிடம், சுகாதார வரலாறு மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து முதுகெலும்பு புற்றுநோயின் அறிகுறிகள் மாறுபடும். அறிகுறிகள் படிப்படியாக அல்லது திடீரென்று சில நாள்கள் அல்லது சில மணி நேரங்கள் கூட தோன்றலாம். உடலின் மற்றொரு பகுதியிலிருந்து, முதுகெலும்புக்கு இடம் பெயர்ந்த முதுகெலும்பு கட்டிகள் வேகமாக வளரும்.

இந்த பதிவும் உதவலாம்: Bone Cancer: எலும்பு புற்றுநோய் அறிகுறிகள், ஆபத்து காரணிகள் மற்றும் சிகிச்சை

முக்கிய நரம்புகளுக்கு இடையில் உள்ள முதுகெலும்பு கட்டிகள், உடல் மற்றும் மூளைக்கு இடையே செய்திகளை அனுப்பும் திறனை சீர்குலைத்து இரு கால்கள் அல்லது கைகளிலும் கூச்ச உணர்வு, நடப்பதில் சிரமம் அல்லது சமநிலைப்படுத்துதல், குடல் மற்றும் சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழத்தல் போன்ற நரம்பியல் அறிகுறிகளை ஏற்படுத்தும். முதுகெலும்பு புற்றுநோயின் தெளிவான அறிகுறி வலி ஏற்படுவதாகும்.

  • கை மற்றும் கால் வலிகள்
  • முதுகு, கழுத்து அசௌகரியம்
  • உணர்வு இழப்பு
  • நடப்பதற்கு சிரமம்
  • தசை சோர்வு
  • பக்கவாதம்
  • நிற்கும் வலி அல்லது சிரமம்
  • குடல் அல்லது சிறுநீர்ப்பை செயலிழப்பு
  • முதுகெலும்பு குறைபாடுகள்
  • முதுகெலும்பு புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகள்

முதுகெலும்பு புற்றுநோய்க்கான காரணிகள் பெரும்பாலும் தெளிவாக இல்லை. ஊட்டச்சத்து, செயல்பாடு, உடல் எடை மற்றும் புகையிலை நுகர்வு போன்றவை புற்றுநோய் ஆபத்து காரணியாக உள்ளன. இந்த காரணிகள் ஒரு நபரின் புற்றுநோய் அபாயத்தில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தலாம். முதுகெலும்பு புற்றுநோய் தடுப்பு, நோயறிதல் மற்றும் சிகிச்சையில் பல்வேறு சுற்றுச்சூழல், மரபணு காரணிகளின் விளைவுகள் ஆராய்ச்சியாளர்களால் ஆராயப்படுகின்றன. சில நோயெதிர்ப்பு குறைபாடுகள் அல்லது நியூரோஃபைப்ரோமாடோசிஸ் 2 போன்ற மரபணு நிலைமைகள் உள்ளவர்களுக்கு மற்ற நபர்களை விட முதுகெலும்பு கட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

சிகிச்சை முறைகள்

முதுகெலும்பு கட்டியின் இருப்பிடம், மற்றும் வகையைப் பொறுத்து சிகிச்சை முறைகள் அமையலாம். அதன் படி, கட்டிக்கான சிகிச்சைகள் அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு சிகிச்சை அல்லது கீமோதெரபி/ நோய் எதிர்ப்புச் சிகிச்சை போன்றவற்றில் மாறுபடும். இவ்வாறே முதுகெலும்புக் கட்டிக்கான சிகிச்சை முறைகள் வேறுபடுகின்றன. முதுகெலும்பு கட்டியால் பாதிக்கப்பட்ட நோயாளி, அதன் வகை குறித்து ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Bone Cancer Symptoms: எலும்பு புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறிகள்

Image Source: Freepik

Read Next

Colon Cancer Symptoms: இளம் வயதினரைப் பாதிக்கும் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளும், காரணங்களும்

Disclaimer