Skin Cancer: தோலில் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் சாதாரணமா எடுக்காதீங்க!

  • SHARE
  • FOLLOW
Skin Cancer: தோலில் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் சாதாரணமா எடுக்காதீங்க!


தோல் புற்றுநோயை கண்டறிவது எப்படி?

தோல் புற்றுநோயை பல வழிகளில் கண்டறியலாம். தோல், முகம், உதடுகள், காதுகள், கழுத்து, மார்பு, கைகள், கால்கள் என உடலின் பல்வேறு பகுதிகளில் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது. உள்ளங்கைகள், விரல் நகங்கள், கால் நகங்கள், பிறப்புறுப்பு பகுதிகள் மற்றும் சூரிய ஒளி படும் பகுதிகளிலும் இது ஏற்படுகிறது. இதற்கான சிகிச்சையானது பிரச்சனை எங்கு உள்ளது மற்றும் எவ்வளவு பெரியது என்பதைப் பொறுத்தது.

இதையும் படிங்க: புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க வேண்டுமானால், இதைக் கண்டிப்பாக செய்யுங்கள்

தோல் புற்றுநோய் வகைகள்

3 வகையான தோல் புற்றுநோய் உள்ளது. அது பாசல் செல் கார்சினோமா, ஸ்குவாமஸ் செல் கார்சினோமா, மெலனோமா. பாசல் செல் கார்சினோமா ஆகியவை ஆகும். பாசல் செல் கார்சினோமா என்பது தோலின் அடித்தள செல்களில் ஏற்பட தொடங்குகிறது.

இது பொதுவாக தோலின் மேற்பரப்பிலும் காணப்படும். ஸ்குவாமஸ் செல் கார்சினோமா மேல்தோலின் வெளிப்புற அடுக்கில் உள்ள செல்களை பாதிக்கிறது. சூரிய ஒளியில் வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிரால் இது ஏற்படுகிறது. மெலனோமா உங்கள் உடலில் எங்கும் ஏற்படலாம். இது தோலின் நிறமி செல்களில் இருந்து உருவாகிறது. ஆண்களுக்கு மார்பு மற்றும் முதுகிலும், பெண்களில் கால்களிலும் இவை அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தோல் புற்றுநோய் அறிகுறிகள்

உங்களுக்கு பாசல் செல் கார்சினோமா வகை புற்றுநோய் இருந்தால், அது மெதுவாக வளரும். இது ஒரு பாதிப்பில்லாத பரு, வடு அல்லது புண் போன்ற தோற்றமளிக்கும். இதை அறிய பல வழிகள் உண்டு. பெரிய, ஆழமான மற்றும் சாதாரண பருக்கள் காலப்போக்கில் மறைந்துவிடும். ஆனால் தோல் புற்றுநோயாக இருந்தால் பருக்கள், தழும்புகள் அதிகரிக்கும்.

மச்சம் தவிர மற்ற அறிகுறிகளைக் கவனிப்பது முக்கியம். சில நேரங்களில் தோல் புற்றுநோயின் முதல் அறிகுறி சிவப்பு, பழுப்பு தோல் வெடிப்பு போன்று ஏற்படும். தோலில் ஏற்படும் மச்சம் அல்லது புள்ளி மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

தோல் புற்றுநோய் எப்போதும் தோலில் தோன்றாது. நுரையீரலுக்கு அருகில் மெலனோமா தொற்று ஏற்பட்டு மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தும். உச்சந்தலையில் தலைவலி மற்றும் பார்வை மாற்றங்களை ஏற்படுத்தும். தோல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். ஆனால் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பு வரை சந்திக்க நேரும். புற்றுநோயின் அறிகுறிகளை அடிக்கடி பரிசோதிப்பது நல்லது.

இதையும் படிங்க: தோல் புற்றுநோய்: கவனிக்க வேண்டிய 7 அறிகுறிகள்

சூரிய புற ஊதா கதிர்வீச்சின் அதிகப்படியான வெளிப்பாடு, சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சு ஆகியவை மிகப்பெரிய ஆபத்து காரணியாகும், எனவே வெயிலில் அதிகமாக சுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

image source: freepik

Read Next

cervical cancer symptoms : கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது என்ன? அதை எப்படி தடுப்பது?

Disclaimer

குறிச்சொற்கள்