Thu Oct 29, 2026 | 11:50 AM IST

Bone Cancer Test: எலும்பு புற்றுநோயைக் கண்டறிய உதவும் சோதனைகள் என்னென்ன தெரியுமா?

Bone Cancer Test: எலும்பு புற்றுநோயைக் கண்டறிய உதவும் சோதனைகள் என்னென்ன தெரியுமா?Bone Cancer Test: எலும்பு புற்றுநோயைக் கண்டறிய உதவும் சோதனைகள் என்னென்ன தெரியுமா?

Bone Cancer Detection And Symptoms: இந்தியாவில் எலும்பு புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. எலும்பு புற்றுநோய் என்பது எலும்புகளில் சாதாரண செல்கள் கட்டுப்பாட்டை மீறி வளரும் போது ஏற்படுவதாகும். எலும்பு புற்றுநோய் ஏற்பட்டால், எலும்புகளில் உள்ள கட்டியை அழித்து, உடலின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவுகிறது. இந்த புற்றுநோய் எந்த எலும்பிலும் தொடங்கலாம். பெரும்பாலான நேரங்களில் இது கைகள் மற்றும் கால்களை அதிகம் பாதிக்கிறது.

இந்த வகை புற்றுநோய்கள், பெரியவர்களை மட்டுமல்லாமல், குழந்தைகளையும் பாதிக்கிறது. இது மிகவும் தீவிரமான நோயாகும். எலும்பு புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் காட்ட இறுதியாக எந்தெந்த சோதனைகள் அதைக் கண்டறிய செய்யப்பட வேண்டும் என்பது குறித்து சிலருக்கு தெரிவதில்லை. எலும்பு புற்றுநோயினைக் கண்டறிய எந்தெந்த மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்பதைக் காணலாம்.

எலும்பு புற்றுநோயின் வகைகள்

எலும்பு புற்றுநோய் எந்த நபருக்கும் 20 வயதிலேயே தொடங்கலாம். ஒரு நபரின் எலும்புகள் வளரும் காலத்தில் ஊட்டச்சத்து கிடைக்காத போது புற்றுநோயை உண்டாக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Kidney Cancer Symptoms: சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!

இந்த எலும்பு புற்றுநோயின் பொதுவான வகைகளில் ஆஸ்டியோசர்கோமா, காண்ட்ரோசர்கோமா மற்றும் ஈவிங் சர்கோமா போன்றவை அடங்கும். இது தவிர, எலும்பு புற்றுநோயில் ஃபைப்ரோசர்கோமா, லிமியோசர்கோமா, வீரியம் மிக்க ஃபைப்ரஸ் ஹிஸ்டியோசைட்டோமா, ஆஞ்சியோசர்கோமா மற்றும் கோர்டோமா போன்றவையும் அடங்கும்.

எலும்பு புற்றுநோய் அறிகுறிகள்

எலும்பு புற்றுநோய் ஆனது உடலின் எந்த பகுதியிலும் எலும்பை பாதிக்கும் ஒன்றாகும். எனினும், இந்தியாவில் எலும்பு புற்றுநோய்கள் கைகள் மற்றும் கால்களில் ஏற்படுகின்றன. இதன் அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.

  • எலும்புகளில் நிலையான வலி ஏற்படுதல்
  • வீக்கம் மற்றும் கட்டிகள்
  • சிறிய வேலைக்குப் பிறகு கடினமாக உணர்தல்
  • கைகள், கால்கள் அல்லது எலும்பில் மீண்டும் மீண்டும் முறிவு ஏற்படுதல்
  • கைகள் மற்றும் கால்களில் அடிக்கடி உணர்வில்லாமல் போகுதல்

எலும்பு புற்றுநோயைக் கண்டறிய உதவும் சோதனைகள்

எலும்பு புற்றுநோயினைக் கண்டறிய எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ போன்ற மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்தப் பரிசோதனைகள், ஒருவருக்கு எலும்பு புற்றுநோய் இருப்பதை உறுதி செய்யப்படாவிட்டால், எலும்பு புற்றுநோயை உறுதி செய்யக்கூடிய டயாப்ஸியையும் மருத்துவர் பரிந்துரைப்பர்.

இந்த பதிவும் உதவலாம்: Bone Cancer: எலும்பு புற்றுநோய் அறிகுறிகள், ஆபத்து காரணிகள் மற்றும் சிகிச்சை

எலும்பு புற்றுநோய் சிகிச்சை

எலும்பு புற்றுநோய்க்கான சிகிச்சை முறையில் முதலில் அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் மூலம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதி, உடலில் இருந்து வெட்டப்ப்பட்டு அகற்றப்படுகிறது..

ஆனால், காலப்போக்கில் இதன் சிகிச்சை முறைகள் மாறி, நோயாளியின் எந்த உடல் பாகத்தையும் அகற்ற வேண்டியதில்லை. தற்போதைய தொழில்நுட்பத்தின் படி, எலும்பு புற்றுநோய் நிலை, விளைவு மற்றும் அதன் வகைக்கு ஏற்ப சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

எலும்பு புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் வழிகள்

கீமோதெரபி

இந்த முறையில், எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிறப்பு வகை மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்த மருந்துகள் புற்றுநோய் செல்களை அழிக்க விரைவாக செயல்படுகின்றன. புற்றுநோயைத் தவிர, பல நோய்களுக்கும் கீமோதெரபி சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

கதிரியக்க சிகிச்சை

இந்த சிகிச்சை முறையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை இயந்திரங்களின் உதவி கொண்டு அழிப்பர். எனினும், சில நேரங்களில் இயந்திரங்களின் அதிக கதிர்வீச்சு, உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை அழிக்கக் கூடும் அபாயம் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Bone Cancer Symptoms: எலும்பு புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறிகள்

Image Source: Freepik

Read Next

→ Pancreatic Cancer Awareness Month: இளம் வயதினரை குறிவைக்கும் கணைய புற்றுநோய்! மருத்துவரின் கருத்து என்ன?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.