Sat Sep 12, 2026 | 01:56 AM IST

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஃபாலோப் பண்ண வேண்டிய சுய பராமரிப்பு முறைகள்

Self Care During Cancer Treatment In Tamil: ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நான்காம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஊக்குவிப்பதே ஆகும். அவ்வாறு புற்றுநோயின் வகைகள், அதனைக் கண்டறிதல், புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புற்றுநோய்க்கு எதிரான செயல்பாடுகளை வலுப்படுத்துதல் போன்றவை இந்த நாளில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

புற்றுநோய் என்றால் என்ன?

உடலில் உள்ள எந்த உறுப்பையும், திசுக்களையும் பாதிக்கும் நோய்களில் புற்றுநோயும் ஒன்றாகும். இதில் உடலில் உள்ள உயிரணுக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், அதன் பரவலும் அசாதாரண வளர்ச்சியாக இருக்கலாம். உடலின் உறுப்பு மற்றும் திசுக்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வேகமாகப் பரவும் திறனைக் கொண்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த பயம், பதட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை மேற்கொள்பவர்களாக இருப்பின், அவர்கள் சுய கவனிப்பு செய்வது முக்கியம் ஆகும். அதிலும் குறிப்பாக புற்றுநோயாளிகள் தங்கள் உடல் மற்றும் மனதின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் வகையில் ஆரோக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Skin Cancer Prevention: தோல் புற்றுநோய் வராமல் தடுக்க நீங்க செய்ய வேண்டியது இது தான்.

புற்றுநோயாளிகளுக்கு சுய பாதுகாப்பு முறைகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல சுய பாதுகாப்புக்கான கூறுகளைத் தெரிந்து கொள்வதன் மூலம், அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியும். இதில் புற்றுநோயாளிகளுக்கான சுய பாதுகாப்பு முறைகள் சிலவற்றைக் காணலாம்.

ஆரோக்கியமான உணவு

நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது புற்றுநோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதன் படி, புற்றுநோயின் வகைகளைப் பொறுத்து அதற்கேற்ப உணவு முறைகளைக் கையாள்வது குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம். புரதங்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், கொழுப்புகள், நீர்ச்சத்து போன்றவை ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்கதாகும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் புற்றுநோயால் பாதிக்கபப்ட்டவர்கள் ஆரோக்கியமான உணவு முறையைக் கையாள வேண்டும்.

உடற்பயிற்சி செய்வது

ஓய்வு மற்றும் குறைவான உடல் செயல்பாடு போன்றவையே நாள்பட்ட நோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகிறது. மேலும் இதன் மூலம் புற்றுநோயாளிகளின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். எனினும் உடற்பயிற்சி திட்டத்தை மேற்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. முடிந்தவரை சுறுசுறுப்பாக இருப்பது அவசியமாகும்.

மன அழுத்தத்தைக் கையாள்வது

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்துடன் மன அழுத்தத்தை அங்கீகரிப்பது அவசியமாகும். பயம், பதட்டம் போன்றவற்றால் புற்றுநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், மன அழுத்தம் மற்றும் உணர்ச்சிகளைச் சமாளிக்க புற்றுநோயால் பாதிக்கப்பவர்களின் அனுபவங்களைக் கண்டறிந்து கையாளலாம்.

இந்த சுய பராமரிப்பு முறைகளைக் கையாள்வது புற்றுநோயாளிகள் தங்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு வழிவகுப்பதாக அமையும்.

இந்த பதிவும் உதவலாம்: World Cancer Day 2024: புற்றுநோயில் இத்தனை வகை இருக்கா? இந்த அறிகுறிகள் எல்லாம் லேசுல விட்ராதீங்க

Image Source: Freepik

Read Next

World Cancer Day 2024: உலக புற்றுநோய் தினம் தீம், வரலாறு மற்றும் முக்கியத்துவம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content