$
How To Protect Skin From Holi Colours: ஹோலி பண்டிகை கோலாகலமாகத் தொடங்கி விட்டது. ஹோலி என்றாலே நிறம் தான் நினைவுக்கு வரும். ஆனால் சமீப காலங்களில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக நீரிழப்பு மற்றும் வெப்பத்தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் வெப்பம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். இந்த நன்னாள் வெப்பமான நாள்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
எனினும் ஹோலியை வெளியில் நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் விளையாடுவது உடலின் வெப்பநிலையை உயர்த்தலாம். இது நீரிழப்பை ஏற்படுத்தலாம். ஹோலியில் வெப்பம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க சில புத்துணர்ச்சியூட்டும் பானங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஹோலியில் நிறங்களில் உள்ள இரசாயனங்களால் முடி உதிர்தல் சுவாசப் பிரச்சனை போன்றவை அதிகரிக்கும். இதில் ஹோலியில் சருமம் மற்றும் கண்களைப் பாதுகாக்கும் முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Summer Nail Care: கோடைக் காலத்திலும் நகங்களைப் பராமரிக்கணும். எப்படி தெரியணுமா?
ஹோலி பண்டிகைக்கு கண்கள் மற்றும் சருமத்தைப் பராமரிக்கும் முறை
கோடைக் காலத்தில் முக்கியமாகக் கொண்டாடப்படுவது ஹோலி ஆகும். இந்த நேரத்தில் உடலின் வெப்பநிலையைத் திறம்படக் கட்டுப்படுத்துவது அவசியமாகும்.
ஹோலியில் கண்களைப் பராமரிக்கும் முறை
- ஹோலி பண்டிகையில் பயன்படுத்தும் கலர் பொடியை ஆர்கானிக் மற்றும் இயற்கை வண்ணங்களாகத் தேர்வு செய்யலாம். அதாவது மஞ்சள், பீட்ரூட் மற்றும் பூக்கள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட பொடிகளைப் பயன்படுத்தலாம்.
- கண்கள் மென்மையாக இருப்பதால், இந்த பொடியைத் தவிர்ப்பது ஒவ்வாமை எதிர்வினைகள் மற்றும் எரிச்சல் போன்ற அபாயத்தைத் தவிர்க்கலாம்.
- ஹோலியின் போது நீரேற்றமாக இருப்பது அவசியம். இது கண்களில் ஈரப்பதத்தைத் தவிர்ப்பதுடன், கண்களுக்கு எரிச்சலை உண்டாக்கலாம். தண்ணீர், பழச்சாறுகள், பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது நீரேற்றத்தைத் தரும்.
- கண்ணாடி அல்லது சன் ஸ்கிரீனைப் பயன்படுத்துவதன் மூலம் கண்களில் பொடி உள்நுழைவதைத் தவிர்க்கலாம். இதன் மூலம் எரிச்சல், அசௌகரியம் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Oil For Lips: கருப்பான உதட்டை இளஞ்சிவப்பு நிறமாக மாற்ற தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க
ஹோலி பண்டிகையில் சருமத்தைப் பராமரிக்கும் முறை
- பொதுவாக கோடைக்காலம் என்றாலே சருமத்திற்கு கூடுதல் பாதுகாப்பு தருவது அவசியமாகும்.
- எனவே நிறங்களுக்கு எதிராக சருமத்திற்கு பாதுகாப்புத் தடையை உருவாக்க வேண்டும். இதற்கு தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவலாம்.
- ஹோலியில் கலர் பொடியிலிருந்து தோலில் எரிச்சல், அரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளைத் தவிர்க்க, சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம்.
- ஹோலி விளையாட சுத்தமான மற்றும் சுகாதாரமான இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். சேறு, அழுக்குப் பகுதிகளைத் தவிர்த்து, சருமத்தில் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
இவ்வாறு ஹோலி பண்டிகையின் போது கண்கள் மற்றும் சருமத்தைப் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Home Made Skin Toner: அழகான, மென்மையான சருமத்திற்கு வீட்டிலேயே இந்த ஸ்கின் டோனரை செய்யுங்க
Image Source: Freepik