Morning and night skin care routine for glowing skin: அன்றாட வாழ்க்கையில் பலரும் சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதாவது, சரும வறட்சி, சருமத்தில் வெடிப்பு, மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழலாம். இந்நிலையில், சரும பிரச்சனைகளைத் தவிர்க்க பலரும் பலவகையான முயற்சிகளைக் கையாள்கின்றனர். சருமத்தைப் பராமரிப்பது என்பது முகத்தை சுத்தப்படுத்துவது மற்றும் ஈரப்பதமாக்குவது மட்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், உண்மையில் சருமத்தைப் பராமரிப்பது என்பது மற்ற செயல்முறைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சந்தையில் கிடைக்கும் தயாரிப்புகளின் எண்ணிக்கையைக் கொண்டு ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிப்பது என்பது சில சமயங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இந்நிலையில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த இயற்கையான வழிமுறைகளைக் கையாள்வது அவசியமாகும். இதில் சருமத்தைப் பராமரிக்க காலை மற்றும் இரவு நேரங்களில் செய்ய வேண்டிய சில சரும பராமரிப்பு முறைகள் குறித்து நிபுணரான அபி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Skin Care Routine: குளிர்காலத்தில் சருமத்தை இப்படி பாராமரிக்கவும்!
காலை, இரவு சரும பராமரிப்பு பழக்கங்கள்
சரும பராமரிப்பு நிபுணரான அபி அவர்கள் தனது சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைப்பதற்கு உதவும் காலை மற்றும் இரவு நேர பராமரிப்புகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது குறித்து விரிவாகக் காண்போம்.
சருமத்தை கழுவுதல்
முகத்திற்கு ஸ்பிரிங் வாட்டரைக் கொண்டு கழுவ வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஸ்பிரிங் வாட்டர் என்பது நிலத்தடி நீர்நிலையிலிருந்து பெறக்கூடிய நீராகும். இது பொதுவாக நிலத்தடி நீரின் மிகப்பெரிய வைப்புத்தொகையாகும். நீருற்று நீரில் அதிகளவிலான தாதுக்கள் உள்ளது. இது சருமத்தில் உள்ள நச்சுகளை அகற்றுவதற்கும் சுத்திகரிப்பு செய்வதற்கும் உதவுகிறது.
டோனர் பயன்பாடு
சரும பொலிவை அதிகரிக்க, சருமத்தைக் கழுவிய பிறகு டோனரைப் பயன்படுத்த வேண்டும். இது சருமத்தை சுத்தம் செய்யப் பயன்படுத்தக்கூடிய பொருளாகும். இது இயற்கையாகவே முகத்தைப் பரமரிக்க உதவுகிறது. மேலும், இது சருமத்திற்கு எந்த வித பக்கவிளைவுகளையும் உண்டாக்குவதில்லை. கூடுதலாக, இது எளிதான முறையில் தயாரிக்கக் கூடியது.
வைட்டமின் சி சீரம் மற்றும் கண் சீரம் பயன்பாடு
வைட்டமின் சி சீரம் சருமத்தில் ஆழமாக ஊடுருவி நீரேற்றத்தை அளிக்கிறது. இது முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை எளிதில் குறைக்க உதவுகிறது. வைட்டமின் சி சீரம் பயன்படுத்துவது சருமத்தின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், கண் பகுதி பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கு கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயலில் உள்ள பொருள்களின் சக்தி வாய்ந்த செறிவுடன் கண் சீரம் உருவாக்கப்படுகிறது.
சன்ஸ்கிரீன் பயன்பாடு
சீரம் பயன்படுத்திய 15 நிமிடங்களுக்குப் பிறகு, SPF மற்றும் மினரல் பவுடரைப் பயன்படுத்தலாம். இது நாள் முழுவதும் சருமத்தை பாதுகாப்பதாக நிபுணர் கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: சருமம் ஜொலிக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய ஸ்கின் கேர் டிப்ஸ் இதோ!
இரவு நேர சரும பராமரிப்பு வழக்கங்கள்
மேக்கப் அகற்றுதல்
முகத்தை நன்கு சுத்தம் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள மேக்கப் மற்றும் எச்சங்களை அகற்றலாம். தேவைப்பட்டால் இரண்டு முறை கூட சுத்தம் செய்யலாம்.
சீரம் பயன்படுத்துதல்
பிறகு பருத்தி பஞ்சு ஒன்றின் உதவியுடன், சருமத்தை சுத்தம் செய்து அதன் தேவைக்கேற்ப பெப்டைட் அல்லது ஸ்டெம் செல் சீரம் தேர்வு செய்யலாம். இது சருமத்தை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.
கண் கிரீம்
காலை பழக்க வழக்கத்தை போலவே, இரவு நேரத்திலும் கண்கருவளையங்களைத் தடுக்க உதவும் கண் கிரீம் தடவலாம்.
இரவுநேர தயாரிப்புகள் ஆனது தட்பவெப்பநிலை மற்றும் சருமம் எப்படி உணர்கிறது என்பதைப் பொறுத்து மாறுபடும் என்று நிபுணர் கூறியுள்ளார்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Winter skin care: இந்த குளிர் சீசனில் சருமம் ஜொலி ஜொலிக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Image Source: Freepik