பண்டிகை காலத்தில் முகம் பளிச்சினு இருக்க தினமும் நைட் இத செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
பண்டிகை காலத்தில் முகம் பளிச்சினு இருக்க தினமும் நைட் இத செய்யுங்க

 

சரும பராமரிப்பைப் பொறுத்த ஆரோக்கியமான உணவுமுறையுடன் நீரேற்றமாக இருப்பதும் அவசியமாகும். இன்னும் சிலர் சில இயற்கையான எளிய வீட்டு வைத்திய முறைகளைக் கையாள்வதன் மூலம் பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான தோற்றத்தைப் பெறுகின்றனர். அதன் படி, ஆரோக்கியமான உணவுமுறை, சரும பராமரிப்பு முறைகள் போன்றவற்றை சரியாக கையாள வேண்டும். மேலும், பகல்நேர தோல் பராமரிப்பு வழக்கத்துடன் இரவு நேர சரும பராமரிப்பு செய்வது சருமத்தைப் பளபளப்பாக வைக்க உதவுவதுடன், புத்துணர்ச்சியூட்டும் திறனை அதிகரிக்கிறது.

 

இந்த பதிவும் உதவலாம்: சருமத்தைப் பொலிவாக்க உதவும் சூப்பர் டிடாக்ஸ் ட்ரிங்! இப்படி செய்யுங்க

 

ஏன் இரவு நேர சரும பராமரிப்பு முக்கியமானது?

 

சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க, நாம் பெரும்பாலும் காலை சரும பராமரிப்பு நடைமுறைகளையே கையாள்கிறோம். காலை சரும பராமரிப்புடன் ஒப்பிடுகையில் இரவுநேர தோல் பராமரிப்பு வழக்கம் சமமாக, இல்லையென்றாலும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதன் படி, பளபளப்பான சருமத்திற்கு இரவு நேர பராமரிப்பு முக்கியமானதாகும். ஏனெனில், இரவு நேர பராமரிப்பு முறையானது கரும்புள்ளிகள் மற்றும் கறைகளை குறைப்பதுடன், சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது சருமத்தின் ஆரோக்கியமான நிலையை மீட்டெடுக்க உதவுகிறது. இது தவிர, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் பிரகாசத்தை அதிகரிக்கவும், மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கவும் உதவுகிறது.

 

 

இரவு நேர சரும பராமரிப்பு முறைகள்

 

நல்ல இரவு நேர பழக்கங்கள் சருமத்தை பராமரிக்க உதவும். சருமத்தை ஒரே இரவில் புத்துயிர் பெறுவதற்கு உதவும் இரவு நேர சரும பராமரிப்பு வழிமுறைகளைக் காணலாம்.

 

சுத்தப்படுத்துதல்

 

சருமத்தை இரவு தூங்கும் முன்பாக முதலில் சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம்  மேக்-அப் நிறைந்த அல்லது பகலில் சருமத்தில் படியக்கூடிய அழுக்கு, எண்ணெய் மற்றும் மாசு போன்றவற்றை நீக்கலாம். எனவே சுத்தம் செய்வது இரவு நேர தோல் பராமரிப்பு வழக்கத்தின் மிக முக்கியமான பகுதியாகும். இதில் முகத்தை சுத்தம் செய்ய எளிதான விருப்பமாக முகத் துணிகளைப் பயன்படுத்தலாம். மேலும் மென்மையான, கிரீமி க்ளென்சரைத் தொடர்ந்து எண்ணெய் சுத்தப்படுத்தியைத் தேர்வுசெய்யலாம். குறிப்பாக, சுத்தம் செய்த பின், உலர்ந்த காட்டன் பேடைப் பயன்படுத்தி சருமத்தைத் துடைத்து, அனைத்தும் அகற்றப்பட்டதா என்பதை சரிபார்க்கலாம். ஏனெனில், நாம் பயன்படுத்தும் சில பராமரிப்புப் பொருள்கள் சிறந்த சுத்தமான சருமத்தில் நன்றாக உறிஞ்சிவிடும்.

 

டோனர் பயன்பாடு

 

டோனர் ஒரு ஃபேஷியல் டானிக் ஆகும். இது நாம் பயன்படுத்தக் கூடிய முக்கிய பொருட்களை உறிஞ்சுவதற்கு சருமத்தை மேலும் மேம்படுத்த உதவுகிறது. சரும பராமரிப்பு வழக்கத்தில் ரெட்டினோலைச் சேர்த்தால் சருமத்தை ஈரப்பதமாக்க ஹைட்ரேட்டிங் டோனரைப் பயன்படுத்தலாம். டோனர் பயன்படுத்துவது முகத்தில் எஞ்சியிருக்கும் அசுத்தங்களை அகற்ற உதவுகிறது மற்றும் துளைகளை முழுமையாக வெளியேற்றுகிறது. எனவே தான் சருமத்தை ஆற்றவும், விரிந்த துளைகளை சுருக்கவும் நீரேற்றத்தைத் தரக்கூடிய டோனர் பயன்படுத்தப்படுகிறது.

 

இந்த பதிவும் உதவலாம்: Face Serum: இரவில் முகத்தில் சீரம் தடவுவது நல்லதா? சீரம் எப்போது பயன்படுத்தனும்?

 

ஃபேஸ் சீரம் பயன்பாடு

 

சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும், முகப்பரு, கருவளையம், பருக்கள் அல்லது சுருக்கங்கள் போன்றவற்றை நீக்குவதற்கும் ஈரப்பதமூட்டும் ஃபேஸ் சீரம் பயன்படுத்த வேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்படும் சீரத்தில் ரெட்டினோல், வைட்டமின் சி அல்லது நியாசினமைடு உள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம். சில பிரபலமான சீரம்கள் சருமத்தை நீரேற்றமாக வைக்கும் ஹைலூரோனிக் அமிலம் அல்லது வைட்டமின் சி அல்லது ஈ போன்ற ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக, சீரம் எவ்வளவு பயன்படுத்த வேண்டும், சருமத்திற்கேற்ப எந்த சீரம் பயன்படுத்த வேண்டும் என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

 

 

 

 

கண் கிரீம் தடவுதல்

 

முகத்தின் கண்களுக்குக் கீழே உள்ள பகுதிகளை ஈரப்பதமாக்காமல் ஒரு சிறந்த இரவு தோல் பராமரிப்பு வழக்கம் முழுமையடையாது. கண் கிரீம்கள் பெரும்பாலான மாய்ஸ்சரைசர்களை விட இலகுவானதாகவும், கண்களுக்குக் கீழே பயன்படுத்தக் கூடியதாகும். இரவு நேர சரும பராமரிப்பில் முதலில் லேசான கிரீம் சேர்ப்பது நல்லது. ஹைட்ரேட்டிங் கண் கிரீம் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரே இரவில் தோல் தடையை சரிசெய்யலாம். இதற்கு மோதிர விரலில் ஒரு புள்ளி அளவிலான கண் கிரீம் எடுத்து, பின்னர் சிறிய வட்ட வடிவில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

 

நைட் கிரீம்/ஜெல் பயன்பாடு

 

சரும பராமரிப்பு வழக்கத்தின் மற்றொரு இன்றியமையாத பகுதியாக சருமத்தை நீரேற்றமாக வைப்பதாகும். எனவே இரவில் முகத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது சருமத்தை நீரேற்றமடையச் செய்வதுடன், சரும செல்களின் மீளுருவாக்கத்தை அதிகரிக்கிறது. சரும வகையின் அடிப்படையில் நைட் ஜெல் அல்லது நைட் க்ரீமைப் பயன்படுத்தலாம். இவை சருமத்தை ஈரப்பதமாக வைத்து ஒரே இரவில் சருமத்தை சரி செய்யும்.

 

இரவு நேர சரும பராமரிப்புக்கு இந்த வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: Turmeric milk for skin: எந்த கறையும் இல்லாத பளபளப்பான சருமத்தைத் தரும் கோல்டன் பால்!

 

Image Source: Freepik

Read Next

குளிர் காலத்தில் அழகு அதிகரிக்க இத குளிக்குற தண்ணியோட கலக்குங்க!

Disclaimer

குறிச்சொற்கள்