Daily Routine For Skin Whitening: இன்று பலரும் சரும ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பளபளப்பான சருமத்தைப் பெற வேண்டும் என்பது இன்று அனைவரின் விருப்பமாகும். இதில் ஆரோக்கியமான உணவு மற்றும் சரும பராமரிப்பு இரண்டுமே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதிகளவு ஜங்க் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வதால் ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் அபாயம் ஏற்படலாம்.
இதைத் தவிர்க்க இயற்கையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். இது தவிர, முகத்தைப் பொலிவுடன் வைக்க சில ஆரோக்கியமான காலை பழக்கங்களைக் கையாள வேண்டும். இது முகத்திற்கு இயற்கையான பொலிவைத் தரும். இதில் முகத்தைப் பொலிவாக்க வைக்க உதவும் காலை நேர பழக்கவழக்கங்கள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: முகத்திற்கு மறந்தும் இந்த பொருள்களை கடலை மாவு கூட சேர்த்து யூஸ் பண்ணாதீங்க.
முகத்தைப் பொலிவாக்க உதவும் காலை பழக்கவழக்கங்கள்
காலை நேரத்தில் இந்த ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கையாள்வது சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தருகிறது.
தண்ணீர் அருந்துவது
காலை எழுந்தவுடன், வெதுவெதுப்பான நீரை உட்கொள்வது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது உடலில் சேரும் நச்சுக்களை உடலிலிருந்து வெளியேற்றி, சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அருந்துவது வயிற்றைச் சுத்தப்படுத்தி, சருமத்தை மேம்படுத்த உதவுகிறது.
உடற்பயிற்சி செய்யுதல்
காலை எழுந்தவுடன், உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடல் மற்றும் மனதை சோர்வடையச் செய்யாமல் தளர்வாக வைக்க உதவுகிறது. மேலும் சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதற்கு ஆழ்ந்த சுவாசப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
முகத்தை சுத்தம் செய்வது
முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க முகத்தை அன்றாடம் சுத்தம் செய்வது அவசியமாகும். இது சருமத்தில் உள்ள செல்களை ஆழமாக சுத்தப்படுத்துவதுடன், சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும் இது சரும பராமரிப்புக்கு முதல் மற்றும் முக்கிய படியாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Sunscreen Facts: கோடை காலத்தில் சன்ஸ்கிரீனை எவ்வளவு, எப்படி பயன்படுத்த வேண்டும்?
சருமத்தை ஈரப்பதமாக்குதல்
சருமத்தை சுத்தம் செய்த பிறகு, சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும். உண்மையில் சருமத்தை சுத்தப்படுத்திய பிறகு சருமம் வறண்டு காணப்படலாம். இந்த சூழ்நிலையில் சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியமாகும். எனவே முகத்தைக் கழுவிய பிறகு சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
சன்ஸ்கிரீன் பயன்பாடு
வெளியில் செல்லும் போது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சருமத்திற்கு மிகுந்த பலனளிக்கும். இவை சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. இது சருமத்தைப் பாதுகாப்பதுடன், ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது. எனவே வெளியில் செல்லும் முன் சரியான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும்.
ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது
நாம் எப்போதும் ஆரோக்கியமான உணவுடன் நாளைத் தொடங்குவது மிகுந்த நன்மை தரும். இதன் மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் பெறலாம். ஆனால், ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். எனவே காலை உணவில் பழங்கள், காய்கறிகள், பழச்சாறுகள், உலர்ந்த பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
இந்த பழக்க வழக்கங்கள் சருமத்தைப் பளபளப்பாக் வைத்திருக்க உதவுகிறது. இதனுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Watermelon Seeds Benefits: முகத்தை ஜொலி ஜொலிக்க வைக்கும் தர்பூசணி விதை. இப்படி யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik