வண்ணங்களின் திருவிழாவான ஹோலியைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றன. ஹோலி பண்டிகை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே, பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் போன்றவற்றில் ஹோலி கொண்டாட்டங்கள் தொடங்கிவிடுகின்றன. ஹோலியில் வண்ணங்களுடன் விளையாடுவது வேடிக்கையானதாக இருந்தாலும், வண்ணங்களுக்கு தீங்கு ஏற்படக்கூடும் என்ற அச்சம் உள்ளுக்குள் இருக்கும்.
ஏனெனில் முகத்தில் பூசப்படும் வண்ணப்பொடியானது ஹேர்பலா அல்லது கெமிக்கல் கலந்ததா என யாராலும் பார்த்ததும் கண்டுபிடிக்க முடியாது.

சிலருக்கு ஹோலி கலர்களால் சருமத்தில் தடிப்பு, அரிப்பு, சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
அத்தகைய சூழ்நிலையில், ஹோலிக்கு முந்தைய தோல் பராமரிப்பு பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இந்த எளிய விஷயங்களை மனதில் வைத்திருப்பதன் மூலம், உங்கள் சருமத்தை பெரிய சேதத்திலிருந்து காப்பாற்றலாம்.
பாதாம் எண்ணெய்:
பாதாம் எண்ணெய் சருமத்தை பல்வேறு வழிகளில் பாதுகாக்க பயன்படுகிறது. ஹோலி விளையாடுவதற்கு முன், பாதாம் எண்ணெயை உங்கள் முகம், கழுத்து, கை ஆகிய பகுதிகளில் தேய்த்துக் கொள்ளலாம்.
பாதாம் எண்ணெயில் நிறைந்துள்ள வைட்டமின் ஈ, சருமத்தில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது, இதனால் நிறங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது. இது தவிர, ஹோலி விளையாடும் முன் பாதாம் எண்ணெயை முகம் மற்றும் உடம்பில் தடவி வந்தால், சருமத்தில் எண்ணெய் ஒட்டாது.
தேங்காய் எண்ணெய்:

பாதாம் எண்ணெயைப் போலவே தேங்காய் எண்ணெயும் சருமத்திற்கு நல்லது. ஹோலி விளையாட செல்லும் முன் தேங்காய் எண்ணெயை நன்கு தடவவும். இந்த எண்ணெயை சருமத்திலும் முடியிலும் தடவலாம். இதன் காரணமாக, ஹோலி கலர்களால் முடிக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.
பெட்ரோலியம் ஜெல்லி:
பல்வேறு வகையான பெட்ரோலியம் ஜெல்லிகள் சந்தையில் கிடைக்கின்றன. பெட்ரோலியம் ஜெல்லி சருமத்தில் ஒரு தடையை உருவாக்குகிறது, இதனால் நிறங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது. அதனால் தான் ஹோலி விளையாடுவதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தலாம்.
டோனரை மறக்காதீர்கள்:

ஹோலி எப்போது வந்தாலும் பரவாயில்லை, இன்றிலிருந்தே உங்கள் முகத்தில் டோனரைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். டோனரைப் பயன்படுத்துவதன் மூலம், சருமத்துளைகளை அடக்க முடியும். இதன் காரணமாக, சருமம் நிறங்களை விரைவாக உறிஞ்சாது, மேலும் இறந்த சருமத்தில் எந்தவிதமான பிரச்சனைகளும் ஏற்படாது.
சன்ஸ்கிரீன் லோஷன்:
ஹோலி பண்டிகை பொதுவாக வெயில் காலத்தில் ஆரம்பமாகிறது. இப்போதே சூரியன் சுட்டெரிக்க தொடங்கிவிட்டதால், ஹோலி விளையாட செல்லும் முன்பு சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்ள மறக்காதீர்கள்.
ஏனெனில் ஹோலி வண்ணங்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், சூரிய ஒளியுடன் எதிர்வினை புரிந்து மோசமான சரும பிரச்சனைகளை உருவாக்ககூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக வாட்டர் ஃப்ரூப்சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தினால், கலர்களை தண்ணீரில் கலந்து முகத்தில் பீய்ச்சினாலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.
Image source: Freepik