Holi safety tips: ஹோலி கலரிலிருந்து சருமம், முடி, கண்களை பாதுகாக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

How to protect your skin hair and eyes from holi colors: வண்ணங்கள் மற்றும் வேடிக்கைகள் நிறைந்த பண்டிகையான ஹோலி நெருங்கி விட்டது. மகிழ்ச்சி நிறைந்த இந்த பண்டிகையில் முடி, தோல் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படலாம். எனினும், முன்கூட்டியே நாம் செய்யும் சில பழக்கங்களின் உதவியுடன் இந்தப் பிரச்சனைகளைத் தடுக்க முடியும்.
  • SHARE
  • FOLLOW
Holi safety tips: ஹோலி கலரிலிருந்து சருமம், முடி, கண்களை பாதுகாக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

Skin, hair, eye prevention tips from holi colors: ஹோலி என்பது வண்ணங்கள், வேடிக்கைகள், விளையாட்டுக்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். வண்ணங்களின் திருவிழாவாக விளங்கும் ஹோலி பண்டிகையில் கொண்டாட்டங்களுக்கு எல்லையே இல்லை. இந்த பண்டிகையில் வேடிக்கை மற்றும் கேளிக்கைகளுக்கு மத்தியில் நம் முடி, சருமம் மற்றும் கண்கள் பெரும்பாலும் கடுமையான செயற்கை வண்ணங்கள், நீர் தெளிப்புகள், தற்செயலாக ரசாயனங்களுக்கு ஆளாக நேரிடலாம். எனவே ஹோலியின் போது கண்கள், முடி மற்றும் சருமத்தைப் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகும்.

பண்டிகை உணர்வைத் தழுவிக்கொண்டே சில ஆரோக்கியமான நடவடிக்கைகளை நமது அன்றாட வழக்கத்தில் இணைக்க வேண்டும். இது ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சிகரமான முறையில் கொண்டாட்டத்தை உறுதி செய்வதற்கு வழிவகுக்கிறது. ஹோலி பண்டிகையின் போது சருமம், முடி மற்றும் கண்களைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இதில் ஹோலியில் கலர் பொடியை வைத்து விளையாடும் போது சருமம், கண்கள் மற்றும் முடியைப் பராமரிப்பதற்கான சில வழிமுறைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Holi Hair Care: ஹோலிக்கு முன்னும்,பின்னும் கூந்தலை பாதுகாப்பது எப்படி?

ஹோலியில் சருமம், முடி, கண்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்

கண் பாதுகாப்பு முறைகள்

பாரம்பரிய ஹோலி வண்ணங்கள் ஒரு காலத்தில் மஞ்சள், சந்தனம் மற்றும் பூக்களின் சாறுகள் போன்ற இயற்கையான பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எனினும், இன்று பல வண்ணங்களில் கன உலோகங்கள், செயற்கை சாயங்கள் மற்றும் நச்சு இரசாயனங்கள் உள்ளது. இவை கண் சிவத்தல், எரிச்சல், தொற்றுக்கள் மற்றும் நீண்ட காலத்தில் சேதத்தைக் கூட ஏற்படுத்தலாம். எனவே ஹோலியின் போது கண் சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு, கண் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அவசியமாகும்.

ஹோலி வண்ணங்களால் கண்களில் ஏற்படும் சிக்கல்கள்

செயற்கை நிறங்களுடன் ஹோலி வண்ணங்கள் தொடர்பு கொள்வதால் கண் தொற்றுக்கு வழிவகுக்கலாம்.

  • வண்ணங்களில் நிறைந்திருக்கும் கடுமையான இரசாயனங்கள் உடனடி எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
  • உலர்ந்த நிறத்தின் சிறிய துகள்கள், கண்களின் மேற்பரப்பைக் கீறலாம். இது கார்னியல் சிராய்ப்பு எனப்படுகிறது.
  • வண்ணங்களின் செயற்கை நிறங்களுடன் தொடர்பு கொள்வது கண் தொற்றுக்கு வழிவகுக்கலாம்.
  • சில ரசாயன அடிப்படையிலான நிறங்கள் ஒவ்வாமை எதிர்வினைகளைத் தூண்டி, வீக்கம் மற்றும் அரிப்பை ஏற்படுத்தலாம்.

ஹோலியைப் பாதுகாப்பாக அனுபவிக்க கண் பாதுகாப்பு குறிப்புகள்

  • ஹோலிக்கு முன்னதாக கண்களைப் பாதுகாப்பதற்கு கண்ணாடிகளால் பாதுகாக்க வேண்டும். சன்கிளாஸ்கள், நீச்சல் கண்ணாடிகள் போன்றவற்றை அணிவது ஒரு தடையாகச் செயல்பட்டு, கண்களுடன் நேரடி தொடர்பைத் தடுக்கிறது.
  • கண்களைச் சுற்றி தேங்காய் எண்ணெய், பெட்ரோலியம் ஜெல்லி அல்லது மாய்ஸ்சரைசரை மெல்லிய அடுக்கில் பயன்படுத்தலாம். இது வண்ணத்துகள்கள் தோலில் ஒட்டுவதைத் தடுக்கிறது. இது ஹோலிக்குப் பிறகு வண்ணங்களைக் கழுவுவதை எளிதாக்குகிறது.
  • ஹோலிக்கு முன்னும், பின்னும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீரேற்றமாக இருப்பது கண்கள் வறண்டு போவதைத் தடுக்க உதவுகிறது. இதனால் இவை எரிச்சலுக்கு ஆளாகலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Holi Safety Tips: ஹேப்பியா, ஹெல்தியா ஹோலி கொண்டாட… இந்த டிப்ஸ்கள பாலோப் பண்ணுங்க!

  • உலர் பொடிகள் எளிதில் கண்களுக்குள் பறந்து சென்று எரிச்சலை ஏற்படுத்தலாம். எனவே, பார்வையைப் பாதிக்காத நீர் சார்ந்த அல்லது இயற்கை வண்ணங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பிரகாசமான, மலிவான வண்ணப் பொடிகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் பெரும்பாலும் ஈயம், பாதரசம் மற்றும் குரோமியம் போன்ற நச்சுப் பொருட்கள் உள்ளது. இந்த இரசாயனங்கள் ஒவ்வாமை அல்லது கடுமையான கண் தொற்றுக்கு வழிவகுக்கலாம்.

ஹோலியின் போது சருமம், முடி பராமரிப்பு முறைகள்

ஹோலி பண்டிகையின் போது முடி, சருமம் போன்றவற்றைப் பராமரிப்பது அவசியமாகும்.

  • பகலில் ஹோலியைக் கொண்டாட விரும்புபவர்கள், சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது சருமத்தை டானிங் மற்றும் வெயிலில் எரிவதிலிருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக, நீண்ட நேரம் வெயிலில் இருப்பின் ஹோலியை பாதுகாப்பாக கொண்டாடலாம்.
  • சருமத்தின் வண்ணங்களை நீக்குவதற்கு, கடுமையான சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மாற்றாக, கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் போன்றவற்றை ஒரு பேஸ்டாகப் பயன்படுத்தலாம். இது சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், எரிச்சலைத் தடுக்கவும் உதவுகிறது.
  • தலைமுடியை வண்ணங்களிலிருந்து பாதுகாக்க, முன்கூட்டியே தாராளமாக எண்ணெயைத் தடவிக் கொள்ளலாம். இது வண்ணங்கள் தலைமுடியில் ஒட்டாமல் தடுக்கவும், அதைக் கழுவுவதை எளிதாக்கவும் உதவுகிறது. முடிந்தவரை, வண்ண வெளிப்பாட்டைக் குறைக்க தலைமுடியை மேலே கட்டிக் கொள்ளலாம்.
  • ஹோலி விளையாடுவதற்கு முன்னதாக, முகம், கைகள், கால்கள் மற்றும் கழுத்தில் கடுகு, தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயை லேசான அடுக்கில் தடவ வேண்டும். இது சருமத்தில் நிறங்கள் மிக ஆழமாக ஊடுருவுவதைத் தடுக்க உதவுகிறது. இதனால், அதை எளிதாக அகற்றலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: நெருங்கி வரும் ஹோலி.! கலர் பொடிகளிடமிருந்து சருமத்தை காக்க இதை செய்யவும்..

Image Source: Freepik

Read Next

No Smoking Day 2025: புகைப்பிடித்தல் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

Disclaimer