Skin Cancer Prevention: தோல் புற்றுநோய் வராமல் தடுக்க நீங்க செய்ய வேண்டியது இது தான்.

  • SHARE
  • FOLLOW
Skin Cancer Prevention: தோல் புற்றுநோய் வராமல் தடுக்க நீங்க செய்ய வேண்டியது இது தான்.


இந்த தோல் புற்றுநோய்க்கான முக்கிய காரணம் தோல் பதனிடுதல் அல்லது சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்வீச்சு போன்ற மூலங்களின் வெளிப்பாடு ஆகும். இந்த தோல் புற்றுநோயைத் தடுக்க முடியாது எனினும், இதன் ஆபத்தைக் கணிசமாகக் குறைக்கலாம். தோல் புற்றுநோயினைத் தடுக்க உதவும் சில படிகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mouth Cancer Foods: உஷார்! இந்த உணவெல்லாம் காலையில் சாப்பிட்டா வாய் புற்றுநோய் கன்ஃபார்ம்

தோல் புற்றுநோய்க்கான தடுப்பு முறைகள்

அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் தோல் புற்றுநோயைத் தடுக்கலாம்.

பாதுகாப்பான ஆடைகள் அணிவது

எப்போதும் வெளியில் செல்லும் போது பாதுகாப்பான ஆடைகளை அணிய வேண்டும். அதாவது சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க தோல் முழுதாக மறைக்கப்பட்ட கை சட்டைகள், பேன்ட்கள் மற்றும் அகலமான விளிம்புகளியக் கொண்ட தொப்பிகளை அணியலாம்.

சூரிய ஒளி நேரம்

உடல் ஆரோக்கியத்திற்கு சூரிய ஒளி தேவையான ஒன்றாக இருப்பினும் அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, 10 மணி முதல் 4 மணி வரை சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்கலாம். இந்த கால கட்டத்தில் வெளியில் இருந்தால் நிழலின் கீழ் இருப்பது நன்மையைத் தரும்.

சன்ஸ்கிரீன் பயன்பாடு

தோலின் அனைத்து பகுதிகளிலும் ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லது. இதை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் தோலில் அனைத்து பகுதிகளிலும் தடவலாம் அல்லது நீச்சல் அல்லது வியர்வைக்குப் பிறகும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pancreatic Cancer Prevention: சைலன்ட் கில்லரான கணைய புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க இத செய்யுங்க

சருமத்தைப் பரிசோதிப்பது

சருமத்தில் மச்சங்கள் அல்லது பிற தோல் அசாதாரண மாற்றங்கள் ஏற்படும் போது சுய பரிசோதனை செய்ய வேண்டும். எனவே, புதிய அல்லது மாறும் புள்ளிகளைக் கண்டால் உடனடியாக தோல் மருத்துவரை அணுகுவது அவசியம் ஆகும்.

நீரேற்றமாக இருப்பது

எப்போதும் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். இது தோல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுவிக்க உதவுகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உடலுக்குத் தேவையான அளவு நீர் அருந்த வேண்டும். நன்கு நீரேற்றப்பட்ட சருமம் சேதமடையும் வாய்ப்பு குறையலாம்.

கண் பாதுகாப்பு

கண்களில் மெலனோமா என்ற கண் புற்றுநோய் ஆபத்து உட்பட, சூரிய ஒளியில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்களில் இருந்தும் கண்களைப் பாதுகாப்பது அவசியம். முடிந்தவரை சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க வெளியில் செல்லும் போது சன்கிளாஸ் அணியலாம்.

தோல் புற்றுநோய் வராமல் தடுக்க இது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். மேலும், விரிவான தோல் பரிசோதனைக்காக தோல் மருத்துவரிடம் வழக்கமான சரும பரிசோதனைகளுக்குத் திட்டமிட வேண்டும். குறிப்பாக முந்தைய தோல் புற்றுநோய் கண்டறிதல் காரணமாக, உங்களுக்கு அதிக ஆபத்து இருப்பின், அதை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் வெற்றிகரமான விளைவுகளைத் தரலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Tattoos Cause Cancer: டாட்டூ போட்டால் புற்றுநோய் வருமா? மருத்துவர் தரும் விளக்கம்

Image Source: Freepik

Read Next

Kidney Cancer Treatment: சிறுநீரகப் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன தெரியுமா? மருத்துவர் தரும் விளக்கம்.

Disclaimer