Skin Cancer: தோல் புற்றுநோய் என்பது ஒரு சிக்கலான பிரச்சனையாகும், இதனால் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் தோல் புற்றுநோயால் இறக்கின்றனர். இந்த புற்றுநோய் உடலில் மோசமாக பரவுகிறது, இது சில நேரங்களில் குணப்படுத்த கடினமாக இருக்கும்.
இந்த தோல் புற்றுநோயை குணப்படுத்த பலரும் திண்டாடி வரும் நேரத்தில், 14 வயது சிறுவன் ஒருவன் இதை சரிசெய்யும் பிரத்யேக சோப்பை கண்பிடித்து அசத்தியுள்ளான். சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த 14 வயது சிறுவன் இந்த அசத்தல் கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளான். இதுகுறித்த முழுத் தகவலை பார்க்கலாம்.
இதையும் படிங்க: மார்பக புற்றுநோய் பற்றிய கட்டுக் கதைகளை இனி நம்ப வேண்டாம் - உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்
தோல் புற்றுநோயை குணப்படுத்த சோப்
Heman Bekele என்ற சிறுவன் தான் இந்த சோப்பை தயாரித்துள்ளான். இவர் வர்ஜீனியாவில் உள்ள WT Woodson பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். டென்ட்ரிடிக் செல்களை செயல்படுத்த உதவும் சோப்பாக இது இருக்கிறது. இந்த செல் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகிறது.
இந்த சோப்பின் விலை மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த சோப்பின் விலை வெறும் $0.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இதன் இந்திய மதிப்பு ரூ.41க்கு கிடைக்கிறது.
கேன்சர் சோப்பு எவ்வாறு செயல்படுகிறது?

இந்த சோப் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படும். இது 3 பொருட்களை கலந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சாலிசிலிக் அமிலம், கிளைகோலிக் அமிலம் மற்றும் ட்ரெட்டினோயின் கெரடோலிடிக் எனப்படும் இரசாயணங்கள் உள்ளன.
டென்ட்ரிடிக் செல்கள் வெள்ளை இரத்த அணுக்களுடன் இணைந்து செயல்படுகின்றன மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியில் நல்ல விளைவைக் கொண்டுள்ளன, இது புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
புற்றுநோயில் உயிரிழக்கும் மில்லியன் கணக்கான மக்கள்
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, தோல் புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். 2020 ஆம் ஆண்டில், இந்த புற்றுநோயின் மொத்தம் 1.5 மில்லியன் வழக்குகள் உலகம் முழுவதும் பதிவாகியுள்ளன. அதில் 1,20,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தரவுகளின்படி, பெரும்பாலான தோல் புற்றுநோய்கள் சூரிய ஒளி அல்லது வெப்பத்தின் அதிகப்படியான வெளிப்பாடு காரணமாக இருக்கிறது. எனவே, இந்த புற்றுநோயைத் தவிர்க்க, சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்பை குறைப்பது அவசியம்.
மேலும் படிக்க: Bladder Cancer: சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்
இந்த தோல் புற்றுநோயை குறைக்க பலரும் போராடி வரும் நிலையில், சிறுவன் கண்டுபிடித்த இந்த சோப் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இதன் விலை குறைவு என்பதால் பலரிடமும் இந்த கண்டுபிடிப்புக்கு வரவேற்புகள் குவிந்து வருகிறது.
Image Source: FreePik