முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தோல் புற்றுநோய் இன்று மக்களைப் பாதிக்கிறது. தோல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும்.
உலகில் உள்ள புற்றுநோய் வகைகளில் தோல் புற்றுநோய் முன்னணியில் உள்ளது. முன்னதாக, இந்தியாவில் தோல் புற்றுநோய் மிகவும் சிலருக்கு மட்டுமே காணப்பட்டது, ஆனால் தற்போது இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது.
தோல் புற்றுநோய் பல வடிவங்களைக் கொண்டுள்ளது:
இதுவரை, இரண்டு வகையான தோல் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு எந்த வகையான தோல் புற்றுநோய் உள்ளது என்பது புற்றுநோய் உருவாகும் செல்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
மெலனோசைடிக் அல்லாத தோல் புற்றுநோய்கள் (NMSC)
இது தோலின் மேல் அடுக்கான மேல்தோலில் இருந்து உருவாகின்றன. இதில் பாசல் செல் கார்சினோமா மற்றும் ஸ்குவாமஸ் செல் கார்சினோமா ஆகியவை மிகவும் பொதுவான வகைகளாகும்.
மெலனோசைடிக் தோல் புற்றுநோய் (MSC)
இந்த வகை புற்றுநோயானது தோலில் மெலனினை உற்பத்தி செய்யும் செல்களான மெலனோசைட்டுகளிலிருந்து உருவாகின்றன.
இதையும் படிங்க: Lung Cancer: இந்த அறிகுறிகள் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வர வாய்ப்பா?
தோல் புற்றுநோயின் ஆபத்துகள் என்ன?
- 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
- அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பவர்களுக்கும், சூரிய ஒளியில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளதாவர்களுக்கும் தோலில் புற்றுநோய் செல்கள் வளரக்கூடும்.
- தோல் புற்றுநோய் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- நிலக்கரி, தார் மற்றும் பிற ஹைட்ரோகார்பன்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களும் தோல் புற்றுநோயை உருவாக்கலாம்.
- குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, HPV போன்ற வைரஸ் நோய்கள் மற்றும் லிச்சென் பிளானஸ், DLE, ஆக்டினிக் மற்றும் கெரடோசிஸ் போன்ற சில தோல் நோய்கள் ஆபத்து காரணிகள்.

இதையும் படிங்க: புற்றுநோயை கூட கட்டுப்படுத்துமாம்… இந்த டீயின் நன்மைகள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!
தோல் புற்றுநோயைத் தடுப்பது எப்படி?
தோல் புற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. அவை:
- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்கவும்; முடிந்தவரை நிழலைத் தேடுங்கள்.
- பருத்தி துணியால் செய்யப்பட்ட முழு கை இருண்ட பாதுகாப்பு ஆடைகளை அணியவும்.
- சூரியனின் யுவி கதிர்களிடம் இருந்து பாதுகாப்பு கொள்ள பெரிய சைஸ் தொப்பிகள் மற்றும் தலைக்கவசங்கள், சன்கிளாஸ்களை அணியுங்கள்.
- சூரிய ஒளிக்கு குறைந்தது 15 நிமிடங்களுக்கு முன் உங்கள் உடலின் வெளிப்படும் பகுதிகளில் தாராளமாக சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். UVA மற்றும் UVB கதிர்களில் இருந்து போதுமான பாதுகாப்பை வழங்கும் SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட கலவையைப் பயன்படுத்தவும். SPF 50 சிறந்த வழி.
- இரும்பு, கால்சியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ணுங்கள், இவை நல்ல ஆக்ஸிஜனேற்றமாகும், அவை சூரிய ஒளியில் ஏற்படும் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும்.
Image Source: Freepik