How does polio affect a child: சிறுவயதிலேயே குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் சரியான நேரத்தில் பெறுவதை உறுதி செய்வது அவசியமாகும். அதன் படி, சிறு குழந்தைகளைப் பாதிக்கும் போலியோவை எதிர்த்துப் போராட போலியோ தடுப்பூசி மிக முக்கியமான ஒன்றாகும். இது மிகவும் தொற்று வைரஸ் நோயாகும். இது பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த வைரச் ஒருவர் மூலம் ஒருவருக்கு முக்கியமாக மலம்-வாய் வழி, உணவு அல்லது அசுத்தமான நீர் மூலம் பரவுகிறது. பிறகு வைரஸ் குடலில் பெருகி, நரம்பு மண்டலத்தை அடைந்து பக்கவாதத்திற்கு வழிவகுக்கலாம். இதன் முக்கியத்துவத்தை பல பெற்றோர்களும் அறியும் வகையிலேயே ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி உலக போலியோ தினம் கையாளப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கான போலியோ அறிகுறிகள் சிலவற்றைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Seasonal Diseases: பருவகால நோய்களிலிருந்து உங்க குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது?
குழந்தைகளுக்கு போலியோ இருப்பதைக் கண்டறிவது எப்படி?
குழந்தைகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஒரு பொதுவான நோயாக போலியோ அமைகிறது. இதில் குழந்தைகளுக்கு போலியோ இருப்பதற்கான அறிகுறிகளைக் காணலாம்.
காய்ச்சல்
பல்வேறு காரணங்களால் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படலாம். சில சமயங்களில் குளிர்ந்த உணவுகள், பானங்கள் அல்லது வானிலை மாற்றங்கள் போன்றவற்றால் காய்ச்சல் ஏற்படுகிறது. ஆனால், சில நேரங்களில் இது ஒரு உடல்நல பிரச்சனையாகக் கருதப்படுகிறது. போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடிக்கடி அதிக காய்ச்சலை சந்திக்கின்றனர். இது போலியாவிற்கான ஒரு பொதுவான மற்றும் முதல் அறிகுறியாகக் கருதப்படுகிறது. இதைத் தவிர்க்க குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட வேண்டும்.
கழுத்து மற்றும் முதுகில் விறைப்பு
சிலருக்கு அதிக நேரம் உட்காருவதால் கழுத்து மற்றும் முதுகில் வலி ஏற்படலாம். குழந்தைகளில் தசை வலி அல்லது விறைப்பு அதிலும் குறிப்பாக முதுகு மற்றும் கழுத்தில் ஏற்படுவது போலியோவின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.
சோர்வு
குழந்தைகள் பொதுவாக அங்குமிங்கும் ஓடி, வெளியில் விளையாட விரும்புவர். ஆனால், அவர்கள் பொதுவான பலவீனத்தை அனுபவித்து, எளிதில் சோர்வடைந்தால், கவனமாக இருப்பது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Bedwetting: உங்கள் குழந்தை படுக்கையை நனைக்கிறதா.? இது எப்போது பிரச்னையாக மாறும்.?
தசை பலவீனம்
குழந்தைகளில் போலியோ இருப்பதற்கான முக்கிய அறிகுறியாக தசை பலவீனம் ஏற்படுவதைக் குறிக்கிறது. இது பக்கவாதத்திற்கு வழிவகுக்கலாம். குறிப்பாக, கால்களில் தசை பலவீனம் ஏற்படலாம்.
தலைவலி
ஐஸ்கிரீம் அல்லது உறைந்த உணவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு போலியோ இருப்பது தலைவலியை ஏற்படுத்தலாம். இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைரஸ் அறிகுறியாகக் கருதப்படுகிறது.
போலியோவை குணப்படுத்த முடியுமா?
போலியோவுக்கு சிகிச்சை முறை ஏதும் இல்லை. ஆனால், சில பராமரிப்பு முறைகள் மூலம் நிர்வகிக்க முடியும். அதன் படி, தசை வலிமையை பராமரிப்பதற்கு ஓய்வெடுப்பது, வலி நிவாரணி போன்றவற்றை மேற்கொள்ளலாம். சில சந்தர்ப்பங்களில் கடுமையான தசை பலவீனம் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவு தேவைப்படுகிறது.
போலியோவைத் தடுப்பதற்கான முதன்மை வழியாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் வாய்வழி போலியோ தடுப்பூசி மற்றும் செயலிழக்கச் செய்யப்பட்ட போலியோ தடுப்பூசி போன்றவை குழந்தைகளுக்கு போலியோ வைரஸூக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. இதில் வாய்வழி போலியோ தடுப்பூசி வாய் வழியாகவும், செயலிழந்த போலியோ தடுப்பூசி ஊசி மூலமும் செய்யப்படுகிறது. எனவே வழக்கமான கை கழுவுதல் போன்ற நல்ல சுகாதார பழக்கங்களைக் கடைபிடிப்பதன் மூலம் வைரஸ் பரவுவதைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பெற்றோர்களே உஷார்! குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் ஜங்க் ஃபுட்! எப்படி தவிர்ப்பது?
Image Source: Freepik