How does junk food affect children's health: இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக, ஜங்க் ஃபுட் மீதான நாட்டம் இன்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் ஜங்க் ஃபுட் உட்கொள்வதை அதிகளவு விரும்புகின்றனர். இவ்வாறு ஜங்க் ஃபுட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்பதை அறிந்ததுண்டா?
பெரும்பாலும் குழந்தைகளுக்கு உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாகவே காணப்படும். இந்நிலையில் இது போன்ற உணவுகளை அளிப்பது, அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான மற்றும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துகிறது. பீஸ்ஸாக்கள், பர்கர்கள் மற்றும் நூடுல்ஸ் போன்றவை மிகவும் சுவையாக இருப்பினும், ஜங்க் உணவுகள் ஆபத்தான நிலையை உருவாக்குகிறது. அதிலும் குறிப்பாக, நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Immue Boosting Foods: குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை சாப்பிட கொடுக்கவும்..
குழந்தைகளுக்கு ஜங்க் ஃபுட் தரும் விளைவுகள்
குழந்தைகள் அதிகளவு ஜங்க் ஃபுட் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது.
வளர்ச்சிதை மாற்ற ஆரோக்கிய பாதிப்பு
அதிக பதப்படுத்தப்பட்ட ஜங்க் ஃபுட் உணவுகளை உட்கொள்வது, குழந்தைகளின் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இந்த உணவுகள் உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் இளம் வயதிலேயே நீரிழிவு நோய் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது. இந்த அபாயங்களைக் குறைக்க ஜங்க் ஃபுட் தருவதை தவிர்த்து, ஆரோக்கியமான காய்கறிகள், பழங்கள், மெல்லிய புரதங்கள் மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்த முழுமை உணவுகளை ஊக்குவிக்க வேண்டும்.
கொழுப்பு கல்லீரல் நோய்
அதிகப்படியான சர்க்கரைகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த ஜங்க் ஃபுட் உணவுகள் உட்கொள்வதால், குழந்தைகளுக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது. இந்த வெற்று கலோரிகள் கல்லீரலின் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை பாதித்து, வீக்கம் மற்றும் கொழுப்பு குவிவதை ஊக்குவிக்கிறது. இதைத் தவிர்க்க, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதிகப்படியான நொறுக்குத் தீனிகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.
ஊட்டச்சத்து குறைபாடுகள்
நொறுக்குத் தீனிகளில் ஊட்டச்சத்து மதிப்பைக் குறைவாக உள்ளது. மேலும், வளர்ந்து வரும் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை இழக்க வைக்கிறது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்களைக் குறைபாடுகளைத் தவிர்க்கவும், அவர்களின் வளர்ச்சியை போதுமான அளவு ஆதரிக்கவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: பொதுவாக குழந்தைக்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை தாய்ப்பால் கொடுப்பது நல்லது?
நீண்டகால ஆரோக்கிய பாதிப்புகள்
ஜங்க் ஃபுட் நிறைந்த சுவையாக இருப்பினும், அதன் பின்விளைவுகளாக குழந்தைப் பருவத்திற்கு அப்பால், பிற்காலத்தில் இதய நோய், கல்லீரல் அழற்சி மற்றும் சில புற்றுநோய்கள் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே பெற்றோர்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஆரம்பத்திலேயே உருவாக்குவதன் மூலம், குழந்தைகள் நோயற்ற வாழ்க்கையை வாழ்ந்திட முடியும்.
கண் ஆரோக்கிய பாதிப்பு
இந்த விளைவுகளைத் தவிர, ஜங்க் ஃபுட் ஆனது குழந்தைகளின் பார்வையில் குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது பார்வைக் குறைபாட்டிற்கு வழிவகுக்கலாம். பெரும்பாலும் குழந்தைகளுக்கு எந்த நோயும் அண்டாமல் இருக்க சரியான நரம்பியல் மற்றும் நோயெதிர்ப்பு வளர்ச்சியை ஆதரிக்க தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால், வாழ்க்கையின் எந்த நேரத்திலும் ஊட்டச்சத்து குறைபாட்டால் கண் பார்வை குறைபாடு பிரச்சனைகள் ஏற்படலாம்.
குழந்தைகளின் கண்களை ஜங்க் ஃபுட் பாதிப்பதற்கு சில முக்கிய காரணிகள் உள்ளன. இதில் முக்கியமாக, குப்பை உணவில் உள்ள அதிக சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது கண்களின் கட்டமைப்பை சேதப்படுத்தி மங்கலான பார்வை, கிளைகோமா போன்றவற்றை ஏற்படுத்தலாம். இதனால், நிரந்தர பார்வை இழப்பு அல்லது குருட்டுத்தன்மை ஏற்படவும் வாய்ப்புண்டு.
இது போன்ற ஏராளமான பிரச்சனைகளை ஜங்க் ஃபுட் உட்கொள்வதால் குழந்தைகள் நிகழ்காலத்தில் மட்டுமல்லாமல், அவர்களின் பிற்காலத்திலும் சந்திக்கின்றனர். இதைத் தவிர்க்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் பொருட்டு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Bedwetting: உங்கள் குழந்தை படுக்கையை நனைக்கிறதா.? இது எப்போது பிரச்னையாக மாறும்.?
Image Source: Freepik