குழந்தை வளர்ப்பு என்பது கடமை என்பதையும் கடந்து கலையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளிடம் பெற்றோர் பேசக்கூடிய வார்த்தைகள் மிக, மிக கவனத்தில் கொள்ள வேண்டியது.
இதற்கு “குழந்தைகள் கெட்ட வார்த்தை அல்ல… கேட்ட வார்த்தையை தான் பேசுகிறார்கள்” என நடிகர் சூர்யா பசங்க படத்தில் சொல்லும் வசனம் மிகச்சிறந்த உதாரணம். எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடமும், குழந்தைகள் முன்பும் பேசக்கூடிய வார்த்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
முக்கிய கட்டுரைகள்

ஒரு குழந்தையின் வாழ்க்கையில் மொழி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் தெரிந்தோ தெரியாமலோ சில விஷயங்கள் குழந்தையின் மென்மையான மனதை காயப்படுத்துவதற்கு இதுவே காரணம்.
இதுகுறித்து பெற்றோர் பயிற்சியாளர் மைசா ஃபாஹூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கியமான 5 குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.
வெறும் நகைச்சுவை என்றால் போதாது:
பெரியவர்களைப் போலவே சில விஷயங்கள் குழந்தைகளை மோசமாக உணர வைக்கலாம் என்பத பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். “இதெல்லாம் சாதாரண வார்த்தைகள் தானே” என நீங்கள் கடந்து செல்பவை, உங்கள் குழந்தைகளின் மிஞ்சு மனதை புண்படுத்தும்.
எனவே குழந்தைகளிடம் போய் “சும்மா காமெடிக்காக தான் சொன்னேன்” என மழுப்புவதை விட்டு விட்டு, செய்த தவறுக்காக மன்னிப்பு கேளுங்கள். 'நான் நகைச்சுவையாகச் சொன்னேன், ஆனால் அந்த நகைச்சுவை தவறாகப் போய்விட்டது, மன்னித்துவிடு”என மனம் விட்டு பேசுங்கள்.
குழந்தைகள் இப்படி உணரக்கூடாது:
பல சமயங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதைச் செய்யக்கூடாது, இதைச் செய்யக்கூடாது என கத்தி கட்டளையிடுவார்கள். ஆனால் இதைச் செய்யும்போது, நீங்கள் உங்கள் எண்ணங்களை அவர் மீது திணிப்பதாக உங்கள் குழந்தை உணரலாம்.
இதை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்வதை விட, நீங்கள் எப்படி உணருகிறீர்களோ, அது சரி என்று சொல்லுங்கள். ஆனால் எந்தவொரு கருத்தையும் உருவாக்கும் முன், உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி மனம் விட்டு பேச வேண்டும்.
நான் சொல்லவே இல்ல:
உங்கள் வாயிலிருந்து இதுபோன்ற விஷயங்களைக் கேட்டதும் குழந்தை எரிச்சலடையலாம். இது குழந்தைகளுக்கு தேவையில்லாமல் பொய் சொல்லும் பழக்கத்தை நீங்களே கற்று கொடுத்தது போல் ஆகிவிடும். தப்பித்தவறி தவறான அல்லது கடுமையான வார்த்தையை பயன்படுத்திவிட்டீர்கள் என்றால், அதனை ஒத்துக்கொள்ள தயாராக இருங்கள்.
அதை விடுத்து குழந்தைகளிடம் “நான் அப்படி சொல்லவே இல்லை”, “நீ தப்பாக புரிந்து கொண்டாய்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.
அதற்கு பதிலாக நீங்கள் என்ன நினைத்து பேச வந்தீர்கள், அது எதனால் தவறானது என்பது குறித்து விளக்கம் கொடுங்கள். நம்ப குழந்தை தானே இதுக்கெல்லாம் போய் விளக்கம் கொடுக்கனுமான்னு” தட்டிக்கழிப்பதும் தவறானதே.
நாடகத் தன்மை வேண்டாம்:
பெற்றோரின் வாயிலிருந்து இதுபோன்ற விஷயங்கள் உணர்ச்சிவசப்பட்ட குழந்தைகளை உள்ளிருந்து பலவீனப்படுத்தும்.
அதற்கு பதிலாக நீங்கள் அவர்களிடம், 'நீ வருத்தமாக இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். எந்த விஷயம் உன்னதைத் தொந்தரவு செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவ முடியுமா? எனக்கேளுங்கள்.
கத்தி கதறுவதால் பயனில்லை:
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம், “நீ ஒழுக்கமாக நடந்திருந்தால்… நான் ஏன் சத்தம் போடப்போகிறேன்” என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இந்த வார்த்தை உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை குறைக்கக்கூடியது.
அத்தகைய சூழ்நிலையில், குழந்தையின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள, அவரிடம் 'இன்னைக்கு நான் உன்னைப் பற்றி வருத்தப்பட்டேன், இருந்தாலும் நான் உன்னுடன் உரத்த குரலில் பேசியிருக்கக்கூடாது. இதைப் பற்றி நான் மிகவும் வருத்தப்படுகிறேன், இனி உன்னுடைய பிரச்சனைகளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்” என பொறுமையாக விளக்கம் கொடுங்கள்.
Image Source: Freepik