$
வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கு தங்களது குழந்தையுடன் சரியாக நேரம் ஒதுக்க முடியவில்லை என்ற கவலை இருக்கும்.
மாறி வரும் வாழ்க்கை முறை, உலக பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் ஒரு வீட்டில் கணவன், மனைவி என இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் பிள்ளைகளுக்கு விதவிதமான உடைகள், அதிநவீன பொம்மைகள், தரமான பள்ளியில் கல்வி ஆகியவற்றை கொடுக்க முடிகிறது. ஆனால் குழந்தைகள் பெற்றோரிடம் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய அக்கறை, கவனிப்பு, பாசம், நேரம் ஆகியவை கிடைக்காமல் போகின்றன. இதுக்கு காரணம் பெற்றோர்கள் இருவரும் ஊழியர்களாக இருப்பதால் அளவுக்கு அதிகமான பணிச்சுமை காரணமாக குழந்தைகளுடன் நேரத்தை செலவிட ஒத்துழைப்பதில்லை.
அத்தகைய சூழ்நிலையில், குழந்தைகள் பெற்றோரிடமிருந்து விலகிச் செல்லத் தொடங்குகிறார்கள். இதனால் அவர்கள் பெரும்பாலும் வழிதவறிச் செல்கிறார்கள். நீங்கள் வேலை செய்யும் பெற்றோராக இருந்தால், தங்கள் குழந்தைகளை சரியான முறையில் வளர்ப்பதற்குப் பயன்படுத்த வேண்டிய சில பயனுள்ள குறிப்புகள் இதோ…
அதிகாலையில் எழுவது:
பெற்றோர்கள் அதிகாலையில் கண் விழிப்பதோடு மட்டுமின்றி, குழந்தைகளையும் எழுப்பிவிடலாம். இதனால் அவர்களுடன் செலவிட கூடுதலாக நேரம் கிடைக்கும். பொறுமையாக பள்ளிக்கு தயார் செய்வது முதல், பிடித்த உணவை சமைத்து கொடுப்பது, அன்று பள்ளியில் உள்ள விஷயங்கள் குறித்து கலந்தாலோசிப்பது, வீட்டு பாடங்களை சரி பார்ப்பது என பிள்ளைகளுக்கான விஷயங்களை செய்யலாம்.

மேலும் காலையில் நேரமாக எழுந்திருப்பது, குழந்தையின் பழக்கவழக்கங்களையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். குழந்தையுடன் உட்கார்ந்து யோகா செய்யுங்கள், தோட்டத்தில் நடைபோடுங்கள், செடிக்கு தண்ணீர் ஊற்றுங்கள். இது இயற்கையுடன் அவர்களை இணைக்க உதவும்.
வாரத்தில் ஒருநாள் இதைச் செய்யுங்கள்:
வாரத்தில் ஒரு நாள் தான் லீவு கிடைக்குது அதனால் ஓய்வெடுப்போம் என நினைக்காதீர்கள். கிடைக்கிற ஒரு நாளையும் உங்கள் பிள்ளைக்காக கொடுங்கள். அவர்களை எங்காவது வெளியே அழைத்துச் செல்லுங்கள். அவர்களுடன் சேர்ந்து ஒரு நல்ல திரைப்படத்தைப் பாருங்கள் அல்லது ஓவியம், நடனம், கைவினைப்பொருட்கள் போன்ற குழந்தை விரும்பும் எந்தச் செயலையும் ஒன்றாகச் செய்யுங்கள்.

இது குழந்தைகளை உங்களுடன் உணர்வுப்பூர்வமாக இணைக்கவும், அவர்களது எதிர்கால கனவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் நல்ல வாய்ப்பாக.
உங்களிடம் அரைமணி நேரம் இல்லையா?
சிறு குழந்தைகளின் மனதில் பல கேள்விகள் எழுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் கேள்விகள் கேட்கிறார்கள். அதுபோன்ற சமயங்களில் கோபப்படாமல் அவர்களின் கேள்விகளுக்கு நிதானமாக பதில் சொல்லுங்கள். குழந்தைகள் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். இது குழந்தைகள் உங்களுடன் இணைந்திருப்பதை உணரவைக்கும், மேலும் அவர்கள் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள தவறான நபரை நம்புவதையும் தவிர்க்க முடியும்.

இதையும் படிங்க: Bed wetting: குழந்தை படுக்கையை நனைப்பதை நிறுத்த… இதை முயற்சித்து பாருங்கள்!
எனவே அலுவலகத்தில் இருந்து எவ்வளவு அலைச்சலுடன் வீட்டிற்குள் நுழைந்திருந்தாலும் குழந்தைகளுடன் அரை மணி நேரமாவது பேசுங்கள், அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேளுங்கள்.
Image Source: Freepik