உங்க குடல் ஆரோக்கியத்திற்கு நிபுணர் சொன்ன இந்த 4 செயல்முறையை ஃபாலோ பண்ணுங்க

Simple steps to improve gut health: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு சில ஆரோக்கியமான செயல்முறையைக் கையாள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. இதில் குடல் ஆரோக்கியத்திற்கு நாம் செய்ய வேண்டிய முக்கிய செயல்முறை குறித்து ஊட்டச்சத்து நிபுணர் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இதில் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
உங்க குடல் ஆரோக்கியத்திற்கு நிபுணர் சொன்ன இந்த 4 செயல்முறையை ஃபாலோ பண்ணுங்க


Easy ways to improve your gut health: உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் நல்ல குடல் ஆரோக்கியம் சரும ஆரோக்கியம் மற்றும் மூளை ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக, மோசமான குடல் செயல்பாட்டின் காரணமாக சோர்வு, வயிற்று வலி, தோல் பிரச்சினைகள் மற்றும் தன்னுடல் தாக்கக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் பெரும்பாலும் ஏற்படலாம். எனவே, ஆரோக்கியமான குடலைப் பராமரிப்பது மிகவும் அவசியமானதாகும்.

எனவே ஆரோக்கியமான குடலைப் பராமரிப்பதற்கு சிறந்த செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது போன்றவை முக்கியமாகும். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்கள் சமீபத்தில் தனது இன்ஸ்டகிராம் பதிவில் ஒரு எளிய, பயனுள்ள 4-படி செயல்முறையை வீட்டிலேயே குடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும் வகையில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நச்சு நீக்கம், செரிமானத்தை மேம்படுத்துதல், வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Gut In Summer: கோடையில் செரிமான பிரச்னை வராமல் இருக்க.. இந்த உணவுகளை சாப்பிடவும்..

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் படிகள்

அஞ்சலி முகர்ஜி அவர்கள் பதிவிட்டுள்ளதன் படி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்ய வேண்டிய நான்கு செயல்முறைகளைக் காணலாம்.

படி 1: நச்சுக்களை அகற்றி, தொற்றுகளை நிவர்த்தி செய்வது

குடலை குணப்படுத்துவதற்கான முதல் படியாக அமைவது, நச்சுக்களை அகற்றுவதுடன், வயிற்றில் உள்ள எந்தவொரு தொற்றுநோயையும் நிவர்த்தி செய்வதைக் குறிக்கிறது. ஏனெனில், பலர் அறியாமலேயே நோய்க்கிருமி (கெட்ட) பாக்டீரியாக்களால் ஏற்படும் குடல் தொற்றுகளால் பாதிக்கப்படைகின்றனர். இந்நிலையில் நச்சு நீக்கம் செய்வது அவசியமாகும். உணவுமுறை மாற்றங்கள் அல்லது இந்த தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை குறிவைத்து அகற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட சப்ளிமெண்ட்களைப் பயன்படுத்துவதே நச்சு நீக்கம் எனப்படுகிறது. இதனால் செரிமானப் பாதை சுத்தப்படுத்தப்படுகிறது.

படி 2: செரிமானத்தை மேம்படுத்துவது

தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு, செரிமானப் பாதை ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும். எனவே செரிமானத்தை மேம்படுத்த வைட்டமின்கள், மூலிகைகள் மற்றும் புரோபயாடிக்குகள், செரிமான நொதிகள் அல்லது செரிமான பண்புகளைக் கொண்ட கரிம தாவரங்கள் போன்ற சப்ளிமெண்ட்களைச் சேர்க்க வேண்டும் என அஞ்சலி முகர்ஜி கூறினார். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உகந்த செரிமானத்தை ஆதரிக்கும் மற்றும் கெட்ட பாக்டீரியாக்கள் செழிக்க முடியாத சூழலை உருவாக்குகிறது.

படி 3: வீக்கத்தைக் குறைப்பது

நோய்த்தொற்றுக்கள் ஆனது குடலில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே பயனுள்ள குடல் குணப்படுத்துதலுக்கு சிகிச்சையளிப்பது அவசியமாகும். வீக்கம் என்பது பலரும் அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது அசௌகரியம் மற்றும் பிற வயிற்று பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். எனவே, வீக்கத்தைக் குறைத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உணவுமுறை சரிசெய்தல்கள், அழற்சி எதிர்ப்பு உணவுகள், குறிப்பிட்ட சப்ளிமெண்ட்களைச் சேர்ப்பது போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அஞ்சலி முகர்ஜி பரிந்துரைக்கிறார்.

இந்த பதிவும் உதவலாம்: அதிகபட்ச குடல் ஆரோக்கிய நன்மைகளைப் பெற புரோபயாடிக்குகளை எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்? 

படி 4: நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஆதரிப்பது

தொற்றுகள் மற்றும் வீக்கத்தை சமாளிப்பதற்கு, அடுத்த முக்கிய படியாக அமைவது குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதாவது புரோபயாடிக்குகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும். இதற்கு தயிர் மற்றும் கேஃபிர் போன்ற புளித்த உணவுகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வளர்க்கும் ப்ரீபயாடிக் உணவுகளை சேர்க்க வேண்டும். இந்த உணவுகள் புரோபயாடிக்குகளைச் செழித்து வளர உதவும் ஒரு செழிப்பான சூழலை உருவாக்க உதவுகிறது.

View this post on Instagram

A post shared by Anjali Mukerjee (@anjalimukerjee)

இறுதியாக, குடலை சீல் வைப்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கிறார். குடல் ஊடுருவக்கூடியதாக மாறி, கிருமிகள் மற்றும் நச்சுகள் இரத்த ஓட்டத்தில் நுழைய அனுமதிக்கக்கூடிய லீக்கி குட் சிண்ட்ரோம் ஆனது குடல் புறணி சரியாக ஆதரிக்கப்படாத போது ஏற்படலாம். இதைத் தவிர்க்க, குடல் புறணியை வலுப்படுத்தவும், குணப்படுத்துவதை ஊக்குவிக்கவும் சில குறிப்பிட்ட உணவு நுட்பங்கள் மற்றும் சப்ளிமெண்ட்களைப் பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளார்.

இந்த படியின் போது, குடல் குணப்படுத்துதலுக்கான ஒரு முறையான அணுகுமுறையை வழங்குகிறது. இவை மேம்பட்ட செரிமானம், நச்சு நீக்க, வீக்கத்தைக் குறைப்பது மற்றும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை வலியுறுத்துகிறது. இறுதியாக, இதன் மூலம் ஆரோக்கியமான மிகவும் சீரான குடலுக்கு வழிவகுக்கிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஹெல்த்தியா எந்தப் பிரச்சனையும் இல்லாம இருக்கணுமா? இந்த 5 மூலிகைகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

தினமும் முருங்கைப் பொடி சாப்பிடுவது நல்லதா? அதை எப்படி எடுத்துக் கொள்வது? மருத்துவர் தரும் குறிப்புகள் இதோ

Disclaimer