Expert

மன ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் பாஸ்.. அதை மேம்படுத்த உதவும் டாப் 10 வழிகள்!

நல்ல மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அன்றாட வாழ்வில் சில முறைகளைக் கையாள்வது அவசியமாகும். இதில், மன அழுத்தத்தைக் குறைக்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எந்தெந்த வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
மன ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் பாஸ்.. அதை மேம்படுத்த உதவும் டாப் 10 வழிகள்!


உடல் ஆரோக்கியத்தைப் போல, மன ஆரோக்கியமும் மிகவும் இன்றியமையாததாகும். ஆனால், இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் மனநலம் சார்ந்த பிரச்சனைகளும் அடங்குகிறது. ஆம். உண்மையில், இன்று பலரும் பதட்டம், மன அழுத்தம், கவலை உள்ளிட்ட பல்வேறு மனநலம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இந்நிலையில், இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட அன்றாட வாழ்வில் சில வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

இதில் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வழிகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் & சுகாதார பயிற்சியாளரான ரேணு ரகேஜா அவர்கள் consciouslivingtips இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வழிகள்

இயற்கையில் நேரத்தை செலவிடுவது

நிபுணரின் கூற்றுப்படி, “இயற்கையின் வெளிப்பாடு பதட்டத்தைக் குறைக்கிறது மற்றும் உணர்ச்சி சமநிலையை ஆதரிக்கிறது”. இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது மனதுக்கு இலகுவான உணர்வை அளிக்கக்கூடியதாக அமைகிறது. இதன் மூலம் மன அழுத்தம் குறைவதை உணரலாம். மேலும், பதட்டத்திலிருந்து விடுபட வைக்கிறது.

CHECK YOUR

MENTAL HEALTH

Abstract tree and brain illustration

இந்த பதிவும் உதவலாம்: அதிகப்படியான மன அழுத்தத்தைத் தவிர்க்க வீட்டில் இருக்கும் இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க..

காலை சூரிய ஒளியை பெறுவது

தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை சூரிய ஒளியைப் பெறுவது மனநிலையையும், உடல் கடிகாரத்தையும் மீட்டமைக்க உதவுவதாக நிபுணர் கூறுகிறார். இவ்வாறு காலையில் சூரிய ஒளியைப் பெறுவது நல்ல மனநிலை மேம்பாட்டிற்கு உதவுகிறது. மேலும் இது கூடுதலாக உடலுக்கு வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் பெற வழிவகுக்கிறது.

வழிகாட்டப்பட்ட தியானம் செய்வது

பொதுவாக, வழிகாட்டப்பட்ட முறையில் தியானம் மேற்கொள்வது மனதை அமைதியாக்கி, உங்களை உள்நோக்கி வழிநடத்த உதவும் என நிபுணர் கூறுகிறார். தியானம் செய்வது மன அழுத்தத்தை நிர்வகிக்கவும், பதட்டத்தைக் குறைக்கவும் முடியும். எனினும், தவறான முறையில் தியானம் செய்வது மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, வழிகாட்டப்பட்ட முறையில் தியானம் செய்வது அவசியமாகிறது.

உடலை மெதுவாக வளர்ப்பது

“சூடான தேநீர் உங்கள் நரம்பு மண்டலத்திற்கு பாதுகாப்பு சமிக்ஞைகளை அனுப்புகிறது” என நிபுணர் பகிர்ந்துள்ளார். இது நேரடியாக சமிக்ஞைகளை அனுப்புவதில்லை என்றாலும், தேநீரில் உள்ள சில பொருட்கள் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உதாரணமாக, சில வகை தேநீர்களில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட்கள் நரம்பு செல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

சமூக ஊடக இடைவெளி எடுத்துக் கொள்வது

நிபுணர் பகிர்ந்துள்ளதாவது, “ஸ்க்ரோலிங் செய்வதிலிருந்து சிறிய இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மூளை உங்களுக்கு நன்றி தெரிவிக்கும்.” என குறிப்பிட்டுள்ளார். பொதுவாக, சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுவது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கலாம்.

புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது

“புதிய கற்றலில் ஈடுபடுவது நரம்பியல் பாதைகளை வலுப்படுத்துகிறது மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது” என நிபுணர் பகிர்ந்துள்ளார். பொதுவாக, புதிய விஷயங்களைக் கற்பது அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நரம்பியல் பாதைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. எனவே தினந்தோறும், புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: தியானம் செய்வதால் டிஜிட்டல் மன அழுத்தத்தை எப்படி குறைக்கலாம்? நிபுணர் பரிந்துரை

உடலை நகர்த்துவது

“உடலை இயக்கம் செய்வது எண்டோர்பின்களை அதிகரிக்கிறது மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது - ஒரு சிறிய நடை கூட உங்கள் மனநிலையை மீட்டெடுக்கும்.” என்கிறார் நிபுணர். உண்மையில், உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது மன அழுத்தத்தைக் குறைப்பதில் பெரிதும் பங்கு வகிக்கின்றன.

View this post on Instagram

A post shared by Renu Rakheja | Nutritionist & Health Coach (@consciouslivingtips)

நீங்கள் நம்பும் ஒருவருடன் இணைவது

நிபுணரின் கூற்றுப்படி, ஆதரவான இணைப்பு மன அழுத்தத்தைக் குறைத்து மீள்தன்மையை உருவாக்குகிறது. தினமும் சிறிது நேரமாவது நமக்குப் பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.

மனநிலையை மேம்படுத்தும் முழு உணவுகளை உண்ணுவது

நாம் எடுத்துக் கொள்ளும் உணவுமுறையின் மூலம் நல்ல மனநிலையை மேம்படுத்தலாம். அதன் படி, ஒமேகா-3, நார்ச்சத்து மற்றும் வண்ணமயமான பழங்கள் போன்றவை மூளை மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. இவை மன அழுத்தத்தைக் குறைக்கவும், பதட்டத்திலிருந்து விடுபடவும் வைக்கின்றன.

மென்மையாக இருப்பது

“நீங்கள் உங்களுடன் பேசும் விதம் நீங்கள் நினைப்பதை விட முக்கியமானது” என நிபுணர் கூறுகிறார். அவரின் கூற்றுப்படி, நல்ல மனநிலையானது உற்சாகமாக பேசுவதை ஊக்குவிக்கிறது. எனவே மன அழுத்தத்தைக் குறைப்பது அவசியமாகும்.

இந்த 10 எளிய பழக்கவழக்கங்கள் நீங்களே சரிசெய்வது பற்றியது அல்ல - அவை அன்பு, இருப்பு மற்றும் நிலைத்தன்மையுடன் உங்களைச் சந்திப்பது பற்றியது என நிபுணர் கூறுகிறார். அவரின் கூற்றுப்படி, ஒரு சிறிய மாற்றம் கூட ஒரு அலையை உருவாக்கலாம்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: மன அழுத்தம் குறைய.. வார இறுதியில் இதை மட்டும் செய்யுங்கள்..

Image Source: Freepik

Read Next

எமோஷனல் ஸ்ட்ரெஸ் இருக்கும் போது உங்க உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த குறிப்புகளை பின்பற்றுங்க.. நிபுணர் பரிந்துரை

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Oct 27, 2025 22:14 IST

    Published By : கௌதமி சுப்ரமணி