Sat Sep 12, 2026 | 12:07 AM IST

Expert

எமோஷனல் ஸ்ட்ரெஸ் இருக்கும் போது உங்க உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த குறிப்புகளை பின்பற்றுங்க.. நிபுணர் பரிந்துரை

உணர்ச்சி ரீதியாக மன அழுத்தம் ஏற்படும் உறவை கையாளும் போது, உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இதில் உணர்ச்சி மன அழுத்தத்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளையும், அதை சமாளிக்கும் முறைகள் குறித்தும் ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய பிஸியான காலகட்டத்தில், பலரும் உடல் ரீதியான பிரச்சனைகள் மட்டுமல்லாமல், மன ரீதியான பிரச்சனைகளையும் சந்திக்கின்றனர். ஆம். உண்மையில், உணர்ச்சி மன அழுத்தம் மனதை மட்டும் பாதிக்கக்கூடியது மட்டுமல்ல. உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடியதாகும். இது உடலில் ஆழமான அடையாளத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. ஒரு கடினமான அல்லது துஷ்பிரயோக உறவில் சிக்கிக் கொள்ளும்போது, உடல் அமைப்பு பெரும்பாலும் அதிகமாக வேலை செய்கிறது.

இதன் காரணமாக, நீரிழப்பு, பதட்டம், மோசமான தூக்கம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்நிலையில், உடல் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது உணர்ச்சி ரீதியான ஆதரவைக் கண்டறிவது போலவே முக்கியமானதாகும். அவ்வாறு, உணர்ச்சி ரீதியாக அழுத்தத்தைச் சந்திக்கும் நபர்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்க ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி காண்போம்.

உணர்ச்சி மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, உணர்ச்சி ரீதியாக மன அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான எளிய வழிகளைப் பகிர்ந்துள்ளார். மேலும் சுய பாதுகாப்பு என்பது சுயநலமல்ல; அது உயிர்வாழ்வது என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த பதிவும் உதவலாம்: ப்ரெய்ன் ஹெல்த் ரொம்ப முக்கியம் பாஸ்! அதுக்கு முதல்ல நீங்க செய்யக்கூடிய இந்த விஷயங்களை உடனே ஸ்டாப் பண்ணுங்க

நன்கு நீரேற்றமாக இருப்பது

மன அழுத்தத்தில் இருப்பது உடலை விரைவாக நீரிழப்பு செய்கிறது. முகர்ஜியின் கூற்றுப்படி,”பதட்டத்தில் இருக்கும்போது, அனுபவிக்கும் தாகத்தின் அளவைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மேலும் மக்கள் தண்ணீர் குடிக்க மறந்துவிடுவார்கள்". இந்நிலையில், ஒரு பாட்டிலை கையில் வைத்திருப்பது நல்லது. உடலை நன்கு நீரேற்றமாக வைத்திருப்பது மனம் நன்றாக உணர்வதற்கான முதல் படியாகும்.

பழங்கள் சாப்பிடுவது

மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, சமைப்பது அல்லது உணவு தயாரிப்பது கூட அதிகமாக உணரலாம். பழங்களைக் குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பதை ஊட்டச்சத்து நிபுணர் அறிவுறுத்துகிறார். இதனால், அவற்றை எளிதாகப் பெறலாம். மேலும் இது விரைவான ஊட்டச்சத்தை வழங்குகின்றன. எனவே மன அழுத்தத்தைக் கையாள்பவர்கள் பழங்கள் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

ஆக்ஸிஜனேற்ற ஊக்கிகளைச் சேர்ப்பது

ஆம்லா மற்றும் மஞ்சள் போன்ற சாறுகள் எளிமையான மற்றும் சக்தி வாய்ந்தவையாகும். இந்த சாறுகளில் ஒவ்வொன்றும் தினமும் 60 மில்லி குடிக்க ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கிறார். இவை ஆக்ஸிஜனேற்றிகளை வழங்குகிறது. மேலும் இந்த சாறு அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. ஏனெனில் நோயெதிர்ப்பு சக்தி பெரும்பாலும் மன அழுத்த காலங்களில் குறைகிறது.

புரதத்தைத் தவிர்க்க கூடாது

உடல் வலிமையாக இருக்கவும், தெளிவாக சிந்திக்கவும் புரதம் அவசியமாகும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 50 கிராம் சாப்பிடுவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். அசைவ உணவு உண்பவராக இருந்தால், புரோட்டீன் பவுடர்களைப் பயன்படுத்தலாம் அல்லது முட்டை, மீன் மற்றும் கோழியிலிருந்து இயற்கையாகவே பெறலாம். புரத உணவு உட்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கவும் மற்றும் உடல் மன அழுத்தத்தை சிறப்பாகக் கையாளவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மகிழ்ச்சியான இதய நோய்க்குறி பற்றி தெரியுமா? இதன் காரணங்கள் மற்றும் அறிகுறிகள்.. மருத்துவர் சொன்னது

தூக்கத்தை ஆதரிப்பது மற்றும் மனதை அமைதிப்படுத்துவது

நல்ல, தரமான ஓய்வு பெரும்பாலும் உணர்ச்சி மன அழுத்தத்தினால் முதலில் பாதிக்கப்படக்கூடியதாகும். இதற்கு, மெக்னீசியம் கிளைசினேட், மெலடோனின் மற்றும் எல்-தியானைன் போன்ற சப்ளிமெண்ட்ஸ் உதவுகிறது. நிபுணர் அஞ்சலி முகர்ஜி மனதை அமைதிப்படுத்த மெக்னீசியத்தையும் சிறந்த ஓய்வுக்கு இயற்கையான தூக்க உதவிகளையும் பரிந்துரைக்கிறார்.

ஆதரவு அமைப்புகளை உருவாக்குவது

உடல் ஆரோக்கியம் உணர்ச்சி பாதுகாப்புடன் கைகோர்த்து செல்கிறது. ஊட்டச்சத்து நிபுணர் வெளிப்புற ஆதரவு அமைப்புகளை - நண்பர்கள், உறவினர்கள், சிகிச்சையாளர்கள் அல்லது உதவி எண்களை - உருவாக்குவதை ஊக்குவித்தார். கடினமான காலங்களில் இதை சார்ந்து இருக்க முடியும்.

உணர்ச்சி வலியை அனுபவிக்கும்போது, உடலுக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. எனவே நீர்ச்சத்துடன் இருப்பது, பழங்கள் போன்ற எளிதான உணவுகளை சாப்பிடுவது மற்றும் தூக்கத்தை ஆதரிப்பது போன்றவை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: உங்கள் மூளை ஆரோக்கியத்தை சிதைக்கும் 10 தினசரி பழக்கங்கள் - மருத்துவர் எச்சரிக்கை..

Image Source: Freepik

Read Next

குளிர்ந்த நீரில் குளிப்பது கவனம், நினைவாற்றலை மேம்படுத்துமா? மருத்துவர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 19, 2025 10:09 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content