Easy way to stop emotional eating: இன்றைய நவீன காலத்தில் நாம் மேற்கொள்ளும் சில ஆரோக்கியமற்ற நடவடிகைக்கள் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிப்பதாகவே அமைகிறது. குறிப்பாக, உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் நீண்ட நேரம் வேலை நேரம் உள்ளிட்டவை உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன், மன ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கிறது. இது அதீத மன அழுத்தம் ஏற்படுவதற்கான ஒரு பொதுவான காரணியாக அமைகிறது. பொதுவாக, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சாக்லேட் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இன்னும் சிலர், மன அழுத்தத்தின் காரணமாக சர்க்கரை நிறைந்த உணவுகளையோ அல்லது குப்பை உணவையோ அதிகம் சாப்பிடுகின்றனர். இது போன்ற ஆரோக்கியமற்ற உணவுகள் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் உணர்வுகளையே வழங்குகிறது. இதன் காரணமாக, நாம் நினைத்ததை விட அதிகம் சாப்பிடுகிறோம். ஆனால் இது எடை அதிகரிப்பு, இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட ஏராளமான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்த பதிவும் உதவலாம்: Obesity: நீங்க குண்டாக உணவு மட்டும் தான் காரணமா? மருத்துவர் கூறும் காரணங்கள் இங்கே!
மன அழுத்தத்திற்கான தீர்வு
பெரும்பாலானோர் மன அழுத்தத்தின் காரணமாக அதிகம் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தத்தை விரைவாகக் குறைக்கலாம் என நம்புகின்றனர். இது அவர்களுக்குப் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை அறிவதில்லை. மேலும், உணர்ச்சி ரீதியாக, இது உங்களை குற்ற உணர்ச்சியிலும் வருத்தத்திலும் சிக்க வைக்கிறது. இது மன அழுத்தத்தை மேலும் மோசமாக்கலாம். சுய பராமரிப்பு மற்றும் சரியான உணவு போன்றவற்றின் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
சமீபத்தில் ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மன அழுத்த உணவுப்பழக்கத்தின் அபாயங்களை எடுத்துக்காட்டும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல், அதில் அவர் இந்தப் பழக்கத்தை நிர்வகிப்பதற்கான தீர்வையும் வழங்கியுள்ளார்.
மன அழுத்தம் எவ்வாறு சாப்பிட தூண்டுகிறது?
நிபுணர் லவ்னீத் பத்ரா அவர்களின் கூற்றுப்படி,”ஸ்ட்ரெஸ் ஈட்டிங் என்பது வெறும் உணர்ச்சிவசப்படுவது மட்டுமல்ல. இது ஹார்மோன் சார்ந்தது” என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,”ஒரு மன அழுத்தம் நிறைந்த நாளுக்குப் பிறகு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகளுக்கான ஏக்கத்தை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அது ஹார்மோன்கள் குறித்து பேசக்கூடியதாகும். நாள்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக உடலில் கார்டிசோல் அளவு அதிகரிக்கப்பட்டு, அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை உணவுகளுக்கான ஏக்கத்தை அதிகரிக்கிறது. இது எடை அதிகரிப்பு மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது” என்று கூறியுள்ளார்.
லோவ்னீத் பத்ராவின் கூற்றுப்படி, உடலில் அதிகளவிலான கார்டிசோல் இருப்பது கொழுப்பு இழக்கப்படுவதைத் தடுக்கிறது. இதன் காரணமாக தொப்பை கொழுப்பு ஏற்படுகிறது. மன அழுத்தத்தின் போது எடுத்துக் கொள்ளக்கூடிய ஆரோக்கியமற்ற உணவுகள் செரோடோனின் குறைபாட்டுடன் தொடர்புடையதாகும். இதனால், ஒருவருக்கு ஆறுதல் உணவுகள் தேவைப்படுகிறது. மேலும் மோசமான தூக்கம் அதிக கார்டிசோலுக்கு வழிவகுக்கலாம். இது அதிக பசிக்கு வழிவகுப்பதுடன், உடைக்க கடினமான ஒரு சுழற்சியாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Weight Gain Reason: உடற்பயிற்சி செய்தும், குறைவாக சாப்பிட்டும் உடல் எடை அப்படியே இருக்கா? காரணம் இதுதான்!
கார்டிசோலை நிர்வகிப்பது மற்றும் ஸ்ட்ரெஸ் ஈட்டிங்கை நிறுத்துவது எப்படி?
லோவ்னீத் பத்ரா அவர்கள், மன அழுத்த உணவுகளைத் தவிர்ப்பதற்கான ஒரே தீர்வாக உடலை மீட்டெடுக்கவும், மீண்டும் ரீசார்ஜ் செய்யவும் உதவும் அழற்சி எதிர்ப்பு உணவைப் பின்பற்றுவதே என்று வெளிப்படுத்தியுள்ளார். மேலும் மன அழுத்தத்தின் போது சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
அதன் படி, பருப்பு, சியா மற்றும் இலைக் கீரைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்தவும், மன அழுத்த ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த வெண்ணெய், வால்நட், தேங்காய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தவிர்க்க வேண்டியவை
உடலில் கார்டிசோல் அதிகரிப்பு காரணமாக பசியைத் தூண்டுவது ஆரோக்கியமற்ற உணவுகளுடன், காஃபின், ஆல்கஹால் உட்கொள்ளலையும் அதிகரிக்கின்றனர். காஃபின், ஆல்கஹால் அருந்துவதைக் குறைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும் முடிந்தவரை மன அழுத்தத்தைத் தூண்டும் காரணிகளைத் தவிர்ப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Stress Eating:ஜாக்கிரதை… மன அழுத்தத்தில் இதைச் செய்தால் கல்லீரல் பாதிக்கப்படும்!
Image Source: Freepik