Junk Food Effects: உங்க குழந்தை அதிகம் ஜங்க் ஃபுட் சாப்பிடுமா? இது தெரிஞ்சா இனி கொடுக்கவே மாட்டீங்க

  • SHARE
  • FOLLOW
Junk Food Effects: உங்க குழந்தை அதிகம் ஜங்க் ஃபுட் சாப்பிடுமா? இது தெரிஞ்சா இனி கொடுக்கவே மாட்டீங்க

குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

குழந்தைகள் நொறுக்குத் தீனி சாப்பிடுவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்துக் காணலாம்.

பற்சிதைவு

நொறுக்குத் தீனிகள், குழந்தைகளின் பற்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். ஏனெனில் நொறுக்குத் தீனிகள் பெரும்பாலும் பற்களில் ஒட்டிக் கொண்டிருப்பதால், பற்கள் படிப்படியாக மோசமடையத் தொடங்குகின்றன. இவை பற்சொத்தையை உண்டாக்கலாம். மேலும், சாக்லேட், பிஸ்கட் போன்றவற்றில் நிறைய சர்க்கரை உள்ளது. இது பற்சிதைவை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Baby Bath Powder: குழந்தைகளுக்குக் கெமிக்கல் சோப்புக்குப் பதில், வீட்டிலேயே தயாரித்த இந்த குளியல் பொடியைப் பயன்படுத்துங்க

உடல் பருமன்

குழந்தைகள் நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிடுவதால், சிறு வயதிலேயே உடல் பருமன் பிரச்சனையைச் சந்திக்கின்றனர். ஏனெனில் ஜங்க் ஃபுட்டில் உடலுக்கு தீங்கு தரும் கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது உடல் எடையை அதிகரிப்பதுடன், பல்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கிறது.

தலைவலி பிரச்சனை

நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது குழந்தைகளுக்கு தலைவலி பிரச்சனையை அதிகரிக்கலாம். நொறுக்குத் தீனிகளில் உள்ள மோனோசோடியம் குளுட்டமேட் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் தலைவலியை அதிகரிக்கிறது. பல நேரங்களில், குழந்தைகள் அதிக நொறுக்குத் தீனிகள் சாப்பிடும் போது, எரிச்சல் அடைகிறார்கள் மற்றும் தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஊட்டச்சத்து குறைபாடு

ஜங்க் ஃபுட்களைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது உடலில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தலாம். இது குழந்தையின் உடலை பலவீனமாக்குகிறது. மேலும் குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து, எளிதாக நோய்த்தொற்றுக்கள் உடலுக்குள் சென்று பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: குழந்தை மன அழுத்தத்தில் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

நீரிழிவு நோய் ஆபத்து

நொறுக்குத் தீனிகள் அதிகமாக உட்கொள்வது உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதன் காரணமாக, சிறு வயதிலேயே நீரிழிவு நோய் உண்டாவதற்கான ஆபத்து காரணியை கணிசமாக அதிகரிக்கிறது.

ஜங்க் ஃபுட் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு தீங்குகளைத் தருகிறது. எனவே ஜங்க் ஃபுட்டுக்கு மாற்றாக, உலர் பழங்கள், பச்சை காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை குழந்தைகளின் உணவில் சேர்க்கவும். மேலும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இது நோய்த்தொற்றுக்கள் தாக்குதலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Stop Crying Baby: குழந்தையின் அழுகையை நிறுத்த பெற்றோருக்கான சில உதவிக்குறிப்புகள்

Image Source: Freepik

Read Next

Childhood Obesity: குழந்தையின் உடல் பருமனை சரி செய்வது எப்படி? 

Disclaimer

குறிச்சொற்கள்