Childhood Obesity: வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பது என்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. 2019 ஆம் ஆண்டில், 5 வயதுக்குட்பட்ட 38.2 மில்லியன் குழந்தைகள் அதிக எடை அல்லது பருமனாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிக எடைக்கான காரணம் என்ன?
முக்கிய கட்டுரைகள்
தற்போது குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க காரணம் அவர்கள் உட்கொள்ளும் கலோரியை விட குறைவான கலோரிகளை செலவிடக்கூடிய செயல்பாடுகளில் மட்டுமே ஈடுபடுவதாகும்.
- கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுதல்
- நகரமயமாக்கல், போக்குவரத்து முறை, வீட்டிற்குள்ளேயே அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் டி.வி. பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது.
- சோடா, ஐஸ்கிரீம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனி வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாக்லெட் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுதல்.
- உடல் செயல்பாடுகள் அதிகமுள்ள விளையாட்டுக்களை தவிர்ப்பது.

ஓவர் எடையால் உடலுக்கு வரும் நோய்கள்:
உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களுக்கு உடல் பருமன் மிக முக்கிய காரணியாக உள்ளது.
- நீரழிவு, கீழ்வாதம், எண்டோமெட்ரியல், மார்பகம், கருப்பை, புரோஸ்டேட், கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம் மற்றும் பெருங்குடல் ஆகியவற்றில் புற்றுநோய், இருதய நோய்கள் ஏற்பட உடல் பருமன் காரணமாக இருப்பது அதிகாரப்பூர்வ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
- குழந்தைகள் சுவாசிப்பதில் சிரமம், எலும்பு முறிவுகள், உயர் இரத்த அழுத்தம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உளவியலான பிரச்சனைகளுக்கும் குழந்தைகள் காரணமாகின்றனர்.
இப்படி உடல் பருமனால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க பயனுள்ள டாப் 5 குறிப்புகளை பிரபல ஊட்டச்சத்து நிபுணரான சைனி சுரேந்திரன் பகிர்ந்துள்ளார்.
1. சிறிய தட்டுக்கள்:
பெரியவர்கள் சாப்பிடக்கூடிய பெரிய அளவிலான தட்டுக்களில் குழந்தைகளுக்கு உணவு பரிமாறக்கூடாது. அதற்கு பதிலாக குழந்தையின் வயதிற்கு ஏற்றார் போல் சிறிய அளவிலான தட்டுக்கள் மற்றும் தண்ணீர் குவளைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் தட்டு நிறைய உணவை பறிமாறிவிட்டு அனைத்தையும் முழுவதுமாக சாப்பிட்டே ஆக வேண்டும் என குழந்தைகளை கட்டாயப்படுத்தக்கூடாது. மாறாக சிறிது, சிறிதாக இரண்டு முறை பரிமாறி குழந்தைகளை சாப்பிடவைக்கலாம்.
2. சலிப்பூட்டும் உணவுகள்:
குழந்தைகளுக்கு பிடிக்காத உணவுகளை தவிர்ப்பதற்கு பதிலாக, அதனை சுவாரஸ்யமான புதிய உணவாக தயார் செய்து கொடுக்கலாம். உதாரணத்திற்கு கீரையை சாதத்துடன் கலந்து கொடுத்தால் எந்த குழந்தைகளும் சாப்பிடமாட்டார்கள். ஆனால் கீரை வடை அல்லது ஸ்டஃப்டு பரோட்டாவாக செய்து கொடுக்கும் போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
3. முளைகட்டிய தானியங்கள்:
முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயிறு வகைகளை குழந்தைகள் சாப்பிடவே மாட்டார்கள். இதையும் அவர்களுக்கு பிடித்தமான உணவுடன் கலந்து கொடுக்கலாம். அதாவது பெல் பூரி செய்யும் போது அத்துடன் சிறிதளவு முளைகட்டிய தானியங்களை கலந்து கொடுக்கலாம். அதனை மகிழ்ச்சியுடன் குழந்தைகள் சாப்பிடுவதோடு, அவர்களை ஆரோக்கியமான உணவுமுறைக்கு மாற்றிய திருப்தியும் பெற்றோருக்கு கிடைக்கும்.
4. ஃப்ரைடு ரைஸ் மேஜிக்:
ஃப்ரைடு ரைஸ் குழந்தைகளுக்கு பிடித்தமான மற்றொரு உணவாகும். எனவே வீட்டில் ஃப்ரைடு ரைஸ் செய்து கொடுக்கும் போது பொடியாக நறுக்கிய விதவிதமான காய்கறிகள், பன்னீர், கொண்டை கடலை போன்றவற்றை கலந்து கொடுக்கலாம்.
5.ஓவர் முட்டை உடம்புக்கு ஆகாது:
புரதம், கால்சியம் நிறைந்திருப்பதால் தாய்மார்கள் தங்களது குழந்தைகளின் உணவில் முட்டையை அதிக அளவில் சேர்க்க விரும்புகிறார்கள். சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு தினமு2 முட்டைகள் கொடுப்பது நல்லது. ஆனால் உடல் ரீதியாக ஆக்டீவாக செயல்படாமல், வீட்டிலேயே திரை முன் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு தினமும் அதிக எண்ணிக்கையிலான முட்டைகளை கொடுப்பது ஆபத்தானது. ஏனெனில் அதிக முட்டையால் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகரித்து உடல் பருமன் மேலும் அதிகரிக்கக்கூடும்.