Child Frequent Urination: உங்க குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்க இதுதான் காரணம். அதுக்கு இந்த வீட்டுவைத்தியங்களை டிரை பண்ணுங்க.

  • SHARE
  • FOLLOW
Child Frequent Urination: உங்க குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்க இதுதான் காரணம். அதுக்கு இந்த வீட்டுவைத்தியங்களை டிரை பண்ணுங்க.


Home Remedies To Stop Child Frequent Urination: சில நேரங்களில் சிறு வயது குழந்தைகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். இந்த சூழ்நிலையைப் பெற்றோர்கள் கவனமாகப் புரிந்து கொள்வது அவசியம். குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்குப் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் இந்த பிரச்சனை குழந்தைகள் வளர வளர படிப்படியாகத் தானாகவே குறைந்து விடும். எனினும், இந்த அசாதாரணப் பழக்கத்தைப் புறக்கணிக்கக் கூடாது. எனவே குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணங்களையும், அதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள்

உங்கள் குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

அதிகப்படியான சிறுநீர்ப்பை

அதிகப்படியான சிறுநீர்ப்பை பிரச்சனையின் காரணமாக, குழந்தை தனது சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமல், அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தொடங்கலாம். இந்த பிரச்சனையின் போது, குழந்தையால் தனது சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாது.

இந்த பதிவும் உதவலாம்: பிள்ளைகளின் வறட்டு இருமலை போக்கும் 5 வீட்டு வைத்தியங்கள்!!!

வாழ்க்கை முறை

குழந்தை அதிகமாக குளிர்ச்சியான குளிர்பானங்கள் அல்லது காஃபின் போன்றவற்றைக் குடித்தால், குழந்தைக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உண்டாகலாம்.

நீரிழிவு நோய்

டையூரிடிக் எதிர்ப்பு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக, குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் ஏற்படலாம். இது நீரிழிவு நோயுடன் தொடர்புடையதாகும். இந்நிலையில் குழந்தை மீணும் மீண்டும் தாக்கத்தை உணர்கிறது.

சிறுநீர் பாதை நோய்த்தொற்று

சிறுநீர் பாதை நோய்த்தொற்று காரணமாக, குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையைச் சந்திக்கலாம். இந்த நோய்த்தொற்றினால், குழந்தை சிறுநீர் கழிக்கும் போது எரியும் மற்றும் வலியை உணர்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் உணவுகள்!

பொல்லாக்கிரியா

குழந்தைக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இந்நிலையில் குழந்தை சிறுநீர் கழிக்கும் போது வலியை உணர்கிறது. மேலும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறது. பல நேரங்களில் அரை மணி நேரத்திற்குள்ளாகவே குழந்தை சிறுநீர் கழிக்கத் தொடங்குகிறது.

குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தடுக்க உதவும் காரணங்கள்

சில வீட்டு வைத்தியங்களைக் கொண்டு குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்க முடியும்.

குழந்தைகளின் பழக்கத்தைப் புரிந்து கொள்ளுதல்

குழந்தை ஏதாவது சாப்பிட்ட பிறகு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தால், அதை அவரது உணவில் இருந்து நீக்குவது நல்லது. மேலும் ஆரோக்கியமான உணவை உண்பதற்கு குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.

தேங்காய் தண்ணீர்

பத்து வயது மேற்பட்ட குழந்தையாக இருந்தால், தேங்காய் தண்ணீரைச் சிறிய அளவில் கொடுக்கத் தொடங்க வேண்டும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Growth In Children: குழந்தைகள் வளர்ச்சிக்கான உணவுப் பட்டியல் இங்கே..

வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்தல்

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் குழந்தைகளின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். காலையில் முழுமையாக புத்துணர்ச்சி அடையச் செய்வது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தலாம்.

தயிர்

குழந்தைக்கு சிறுநீர்ப்பை பிரச்சனை ஏற்பட்டால் தயிர் கொடுக்கலாம். இது அவர்களின் வயிறு மற்றும் சிறுநீர்ப்பைக்கு நிவாரணம் அளிக்கும். மேலும் குழந்தையின் வயிற்றில் எந்த வித பிரச்சனையையும் ஏற்படாது.

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?

குழந்தைக்கு அடிக்கடி சிறுநீர் கழிப்பதில் சிக்கல் ஏற்படுவதையோ, நீரிழிவு நோயால் குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிப்பதையோ உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மேலும், குழந்தையின் முழு நிலை குறித்து மருத்துவரிடம் விரிவாகச் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்குப் புதிய முறையைக் கையாள நினைப்பவர்கள் நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று செய்வது நன்மையைத் தரும்.

இந்த பதிவும் உதவலாம்: சிறு பிள்ளைகளுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்னையைப் புறக்கணிக்க வேண்டாம்

Image Source: Freepik

Read Next

குழந்தைகளின் பிடிவாதத்தை கையாள்வது எப்படி?

Disclaimer