Home Remedies To Lighten Dark Elbows: உடலின் மற்ற பகுதிகளில் உள்ள தோல்களைக் காட்டிலும், முழங்கை, கால்கள் போன்ற பகுதியில் தோல் கருமையாகக் காணப்படும். குறிப்பாக முழங்கைகளைச் சுற்றியுள்ள தோல் நிறம் மற்ற பகுதிகளை விட பல மடிப்புகளுடனும், தடிமனாகவும் இருக்கும். மேலும், இந்த பகுதியில் தோல் வறண்டு, கரடு முரடானதாகக் காணப்படும். எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், எண்ணெய் சுரக்க மற்றும் சருமத்தை ஈரப்பதமாக்கலாம். இது நாளடைவில் முழங்கைகளைக் கருமையாக்கும்.
இது தவிர, மற்ற காரணிகளாக இறந்த சரும செல்கள், மெலனின் அதிகரிப்பு, மரபணு காரணிகள், உடல் பருமன், ஹார்மோன் சமநிலையின்மை போன்றவையாகும். எனவே சரியான நேரத்தில் இதற்கு சிகிச்சையளிப்பது நல்லது. இல்லையெனில், குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் இதை எளிதாக்குவது கடினமாகும். இதில், முழங்கை கருமை நீங்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Dark Neck Remedies: கழுத்துப் பகுதி கருப்பா இருக்கா? தேனை இந்த வழிகளில் பயன்படுத்துங்க.
முழங்கை கருமை நீங்க வீட்டு வைத்தியம்
வீட்டிலேயே உள்ள சில பொருள்களைக் கொண்டு முழங்கை கருமையை நீக்கலாம்.
தேங்காய் எண்ணெய்
பெரும்பாலும் தோல் வியாதிகளுக்கு குணப்படுத்த உதவும் இயற்கையான பொருளாக தேங்காய் எண்ணெய் உள்ளது. இதில் அதிகளவு வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இவை சரும சேதத்தை சரி செய்ய உதவுகிறது. இது கருமையை விரைவாக நீங்க உதவும். மேலும், தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஊடுருவி நீரேற்றம் செய்து, சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
- தேங்காய் எண்ணெயைக் கொண்டு முழங்கைகளைத் தினமும் சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரு முறை செய்வதன் மூலம் சிறந்த முடிவுகளைப் பெறலாம்.
- தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சைச் சாறு இரண்டையும் 1:1 என்ற விகிதத்தில் கலந்து, முழங்கையின் கருமையான பகுதியில் தடவலாம். இதை சாதாரண நீரில் கழுவுவதற்கு முன் முழங்கையை மசாஜ் செய்ய வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Fatty Liver Home Remedies: கல்லீரலில் உள்ள கொழுப்பை அகற்ற உதவும் இயற்கையான வீட்டு வைத்திய முறைகள்
சர்க்கரை
சர்க்கரை சிறந்த எக்ஸ்ஃபோலியன்ட் ஆகும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்க உதவுகிறது. இது வறட்சியை ஏற்படுத்தாமல், சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.
- இதற்கு முதலில் ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரையை சரிபாதியாக எடுத்து பேஸ்ட்டை உருவாக்கவும்.
- இது கருமையான முழங்கைகளில் தடவி 5-10 நிமிடங்கள் காய்ந்த வரை வைக்கவும். இறந்த செல்களை நீக்க, மெதுவாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
- இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம், சருமம் விரைவில் பளபளப்பாக மாறும்.

தயிர்
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் லேசான ப்ளீச்சிங் தன்மை கொண்டதாகும். இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த உதவுகிறது. பல்வேறு தோல் பராமரிப்பு வைத்தியங்களுக்கு தயிர் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை கருமையான முழங்கைகளில் பயன்படுத்துவது சிறந்த தீர்வைத் தரும்.
- இதில், தயிருடன் வினிகர் கலந்து கெட்டியான பேஸ்ட்டாக உருவாக்க வேண்டும். இதை முழங்கையில் தடவி காய்ந்த வரை வைக்கலாம். பின், இதை தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பாடி லோஷனைப் பயன்படுத்தலாம்.
- மற்றொரு முறையாக தயிரை, கடலை மாவுடன் கலந்து மாஸ்க் ஆக தயாரிக்கலாம். இவற்றை கருமையான் பகுதியில் வைக்கலாம். இது இறந்த செல்களை வெளியேற்றுவது மட்டுமல்லாமல், வறட்சியைப் போக்கவும் உதவுகிறது. இந்த கலவையை கருமையான பகுதியில் தடவி, ஸ்க்ரப் செய்து பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pink Lips Home Remedies: அழகான பிங்க் நிற உதட்டைப் பெற இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்க
எலுமிச்சை
இது அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட சிட்ரஸ் பழமாகும். இதில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள் சருமத்தை ஒளிரச் செய்கிறது. மேலும், கருமையான செல்கள் அடுக்கிலிருந்து விடுபடத் தேவையான இயற்கையான எக்ஸ்ஃபோலியன்டாக எலுமிச்சை செயல்படுகிறது.
- இந்த முறையில் எலுமிச்சையை பாதியாக வெட்டி, முழங்கையை 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். மேலும், 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு சாதாரண நீரில் முழங்கையை கழுவ வேண்டும். இதை உலர்த்திய பிறகு ஈரப்பதமூட்டும் லோஷனைப் பயன்படுத்தலாம்.
- மற்றொரு முறையாக, எலுமிச்சையுடன் தேன் கலந்து மாஸ்க் ஆக தயாரிக்கலாம். இதை அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து கழுவலாம்.
இந்த வகை எளிய வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி முழங்கைகளின் கருமைகளை நீக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Acid Reflux Drink: நெஞ்செரிச்சலுக்கு காலையில் இந்த ஒரு ஜூஸ் குடிங்க போதும்
Image Source: Freepik