Honey For Dark Neck: கழுத்துப் பகுதி அடிக்கடி கருப்பாக பல்வேறு நிலைகள் காரணமாக இருக்கலாம். குறிப்பாக வலுவான சூரிய ஒளியின் காரணமாக கழுத்துப் பகுதி கருப்பாகும். மேலும் உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு, ஒவ்வாமை போன்றவற்றால் கழுத்தின் தோல் நிறம் மாற்றமடையலாம். இந்த கழுத்துக் கருமை பிரச்சனை காரணமாக பலரும் சிரமப்படுகின்றனர். இந்த கருமையை நீக்க பல்வேறு அழகு மற்றும் தோல் பராமரிப்பு பொருள்களைப் பயன்படுத்துவர். ஆனால் இவை பெரிய பலனைத் தருவதில்லை.
கழுத்துக் கருமையை நீக்க இயற்கை பொருளான தேன் பயன்படுத்தப்படுவதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். தேன் இயற்கையாக சருமத்திற்கு ஈரப்பதம் தருவது மட்டுமல்லாமல், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை நீக்க எந்தெந்த வழிகளில் தேன் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
முக்கிய கட்டுரைகள்

கழுத்துப் பகுதி கருமையை தேன் கொண்டு நீக்குவது எப்படி?
கருமையான கழுத்துக்கு தேன் ஒரு இயற்கையான தீர்வாகும். இந்த பிரச்சனையைத் தீர்க்க தேன் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.
தேன் மற்றும் தயிர்
கழுத்தில் உள்ள கருமையை நீக்க, தேன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தலாம். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தின் நிறத்தை மென்மையாக வைக்க உதவுகிறது. பாத்திரம் ஒன்றில் 2 ஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதை கழுத்துப் பகுதியில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து பின் சுமார் 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Honey for kids cough : குழந்தையின் இருமல் ஒரே இரவில் குணமாக தேனை இப்படி கொடுங்க!
தேன் மற்றும் கற்றாழை
தேன் மற்றும் கற்றாழை இரண்டையும் சேர்த்து பயன்படுத்துவது சருமத்தின் நிறத்தை மாற்றுவதுடன் மென்மையாக வைக்க உதவுகிறது. 2 ஸ்பூன் கற்றாலை ஜெல்லுடன், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கழுத்தில் தடவி 5 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின் 10-15 நிமிடங்கள் கழித்து, பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். சிறந்த முடிவைப் பெற வாரம் 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம்.
தேன் மற்றும் தக்காளி
தக்காளியில் அதிக அளவிலான வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கறைகளை மென்மையாக்குகிறது. மேலும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. தேன் மற்றும் தக்காளி கலவையானது கருமையைப் போக்க பயனுள்ளதாக அமைகிறது. கிண்ணம் ஒன்றில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, அதில் ஒரு ஸ்பூன் தக்காளி சாறு சேர்க்க வேண்டும். இவற்றை கழுத்தில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவி விடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cracked Mouth Corner Treatment: வாயில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்க
தேன், சர்க்கரை மற்றும் எலுமிச்சை
கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை நீக்க தேனுடன் எலுமிச்சைப்பழம் மற்றும் சர்க்கரையைச் சேர்க்கலாம். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. தேன் சருமத்தை மென்மையாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை ஆனது இறந்த சருமத்தை நீக்கி, சருமத்தை உரிக்கச் செய்கிறது. கிண்ணம் ஒன்றில் ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து பேஸ்ட் தயாரித்து கழுத்தில் தடவி கைகளால் ஸ்க்ரப் செய்யலாம். பின் சுமார் 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவி விடலாம். இதன் சிறந்த பலன்களைப் பெற வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.
கழுத்தில் உள்ள கருமையை நீக்க மேலே கூறப்பட்ட வழிகளில் தேனைப் பயன்படுத்தலாம். எனினும், தோல் உணர்திறன் மிக்கதாக இருப்பதால் இந்த வழிகளைப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Fatty Liver Home Remedies: கல்லீரலில் உள்ள கொழுப்பை அகற்ற உதவும் இயற்கையான வீட்டு வைத்திய முறைகள்
Image Source: Freepik