Dark Neck Causes: கழுத்தில் உள்ள கருமையை லேசா விடாதீங்க.. இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படலாம்!

  • SHARE
  • FOLLOW
Dark Neck Causes: கழுத்தில் உள்ள கருமையை லேசா விடாதீங்க.. இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படலாம்!


Does dark neck mean diabetes: சருமத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள நமக்கு தெரிந்த எல்லா வீட்டு வைத்தியத்தையும் நாம் செய்வோம். ஆனால், பெரும்பாலும் கழுத்தைச் சுற்றியுள்ள தோலின் நிறம் கருமையாகவோ அல்லது கருப்பாகவோ காணப்படும். அதை அகற்ற நாம் பல முயற்சிகள் செய்தும் கருமை மாறாமல் அப்படியே இருக்கும். இது வெறும் ஒரு சிறிய தோல் பிரச்சனை என்று நம்மில் பலர் நினைத்திருப்போம். ஆனால், அது உண்மையல்ல.

உண்மையில், நம் உடலுக்குள் ஏதாவது நோய் அல்லது சில பிரச்சனைகள் ஏற்பட்டால் தான், நமது கழுத்தின் கருமை மாறாமல் அப்படியே இருக்கும். இதற்காக நாம் எவ்வளவு வீட்டு வைத்தியத்தை செய்தலும், தீர்வு கிடைக்காது. இன்னும் சிலர் உடல் எடை அதிகமாக இருந்தாழும் கழுத்து கருமை ஏற்படும் என நினைக்கிறார்கள். ஆனால், கழுத்து கருமை ஏற்படுவதற்கான உண்மையான காரணத்தை பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Tired After Eating: நீங்க சாப்பிட்டதும் சோர்வாக உணர்கிறீர்களா? என்ன காரணம் தெரியுமா?

கழுத்து ஏன் கருப்பாக மாறுகிறது?

கழுத்தில் கருமை ஏற்படுவது நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறியாகும். நமது இரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது இதன் காரணமாக கழுத்தின் நிறம் கருப்பாக மாற ஆரம்பிக்கிறது. இந்நிலையில், உங்கள் இரத்த சர்க்கரை பரிசோதனையை உடனடியாக செய்ய வேண்டும்.

PCOD உள்ள பெண்களுக்கும் கழுத்து கருமையாக இருக்கும். PCOD இல் இன்சுலின் எதிர்ப்பின் அதிக ஆபத்து உள்ளது. அதாவது, இன்சுலின் எதிர்ப்பு நோய்க்குறி. இந்த காரணத்திற்காகவும் கழுத்தில் கருப்பு திட்டுகள் காணப்படுகின்றன.

இந்த பதிவும் உதவலாம் : Thyroid Diet: தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் பால் குடிக்கலாமா? டாக்டர் கூறுவது இங்கே!

தைராய்டு பிரச்சனை ஏற்பட்டால் கழுத்தும் கருப்பாக மாறும். தைராய்டு சுரப்பியால் ஹார்மோன்களை சரியாக உற்பத்தி செய்ய முடியவில்லை, இதன் காரணமாக அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் என்ற நிலை ஏற்படுகிறது.

நீங்கள் அதிக எடையுடன் இருந்தாலும், கழுத்தைச் சுற்றி பல கருமையான அடுக்குகள் உருவாகின்றன. பின்னர் தோல் நிறமி ஏற்படத் தொடங்குகிறது. இதன் காரணமாக கழுத்தின் தோல் கருப்பாக மாறத் தொடங்குகிறது. இந்நிலையில், அதை புறக்கணிப்பதற்கு பதிலாக, எடை இழப்புக்கு கவனம் செலுத்த வேண்டும்.

Pic Courtesy: Freepik

Read Next

ENT பிரச்னையே இல்லாமல் இருக்க அருமையான குறிப்புகள்.!

Disclaimer