Egg Shell For Skin: நாம் அனைவரும் முட்டையை சாப்பிட்டுவிட்டு அதன் ஓட்டை தூக்கி வீசுகிறோம். ஆனால் அதிலும் நன்மைகள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். முட்டை ஓடு நம் சருமத்திற்கு பல நன்மைகளை தருகிறது. இதன் நன்மைகள் குறித்து விரிவாக காண்போம்.

முட்டை ஓட்டில் கால்சியம், செலினியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, அதனை சுத்தம் செய்து பின் உலர விடவும். முட்டை ஓடு காய்ந்த பிறகு அதை அரைத்து பொடி செய்யவும். இந்த பொடியை உங்கள் சருமத்தில் தடவினால் பல நன்மைகள் கிடைக்கும்.
சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், இறந்த செல்களை நீக்க முட்டை ஓடு சிறந்த பங்கு வகிக்கிறது. முட்டை ஓடு பொடியை, முட்டை வெள்ளைக்கருவுடன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். மேலும் சருமம் பளபளப்பாகும்.
உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்கள், வறண்ட சருமம் உடையவர்கள், இந்த முட்டை ஓடு பொடியை ஆப்பிள் சைடர் வினிகருடன் சேர்த்து, பஞ்சின் உதவி கொண்டு சருமத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். மேலும் முட்டை ஓடு பொடியுடன் தேன் கலந்து, அந்த கலவையை சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்து வந்தால், சருமம் ஜொலிக்கும்.
Image Source: Freepik