Korean Glowing Skin: கொரிய பெண்களை போல் பளபளப்பான சருமம் வேண்டுமா.? இத மட்டும் பண்ணுங்க.!

  • SHARE
  • FOLLOW
Korean Glowing Skin: கொரிய பெண்களை போல் பளபளப்பான சருமம் வேண்டுமா.? இத மட்டும் பண்ணுங்க.!

கொரிய பெண்களைப் போல் பளபளப்பான மற்றும் மிருதுவான சருமம் வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் விருப்பமாக உள்ளது. நீங்களும் கொரிய பெண்களை போல் பளபளப்பான சருமம் பெற, சியா விதை ஃபேஸ் மாஸ்க் எப்படி செய்ய வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். 

சியா விதை ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

சியா விதைகள் - 1 டீஸ்பூன் 

பால் - 2-3 டீஸ்பூன் 

செய்முறை

சியா விதை ஃபேஸ் மாஸ்க் செய்வது மிக எளிமை. ஒரு பாத்திரத்தில் சியா விதைகள் மற்றும் பால் கலந்து, சுமார் 20 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும். ஃபேஸ் மாஸ்க் ரெடி. 

இதையும் படிங்க: முகப்பருக்களை நீக்க நெய்யை இப்படி பயன்படுத்துங்க - ஆயுர்வேத டிப்ஸ்!

சியா விதை ஃபேஸ் மாஸ்க்கை எவ்வாறு பயன்படுத்துவது? 

* சியா விதைகள் மற்றும் பால் கலந்த மாஸ்க்கை முகத்திலும் தடவவும். 

* மஸ்க்கை முகத்தில் தடவிய பின், வட்ட இயக்கத்தில் முகத்தை மெதுவாக மசாஜ் செய்யவும். 

* மசாஜ் செய்த பிறகு, இந்த பேஸ்ட்டை முகத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். 

* இப்போது அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும் மற்றும் ஒரு டவலால் முகத்தை உலர வைக்கவும். 

இதனால் கிடைக்கும் நன்மைகள்..

நீரேற்றமாக வைக்கும்

இந்த  ஃபேஸ் மாஸ்க்கில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். சியா விதைகள் முகத்தில் ஈரப்பதத்தை உறிஞ்சி, முகத்தின் மேற்பரப்பு வறண்டு போகாமல் தடுக்கிறது. 

இறந்த செல்களை நீக்கும்

சியா விதைகள் ஸ்க்ரப்பராக செயல்படும். இதன் பயன்பாடு சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, உங்கள் சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. 

பொலிவை அதிகரிக்கும்

பாலில் உள்ள ஊட்டமளிக்கும் பண்புகள் மற்றும் சியா விதைகளில் உள்ள எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகள் காரணமாக, இந்த மாஸ்க் உங்கள் சருமத்தை கொரிய பெண்களின் சருமம் போல பளபளக்க மாற்றும். 

பருக்கள் நீங்கும்

சியா விதைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது, இதனால் முகப்பரு போன்ற தோல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது. 

கொரியப் பெண்களைப் போல நீங்களும் பளபளப்பான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பினால், இந்த சியா விதை ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம். ஆனால் முகத்தில் ஏதேனும் ஒரு புதிய பொருளைப் பயன்படுத்துவதற்கு முன், ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். 

Image Source: Freepik

Read Next

Glowing Skin Tips: சருமத்தில் இயற்கையான பொலிவை பெற மஞ்சளை இப்படி பயன்படுத்துங்க!

Disclaimer

குறிச்சொற்கள்