Homemade Korean Face Mask For Glass Skin: கொரிய பெண்களின் அழகை யார் தான் விரும்ப மாட்டார்கள். அவர்களின் விரும்பத்தக்க கண்ணாடி தோல் தோற்றத்தை அடைய வேண்டும் என்பது பலரின் விருப்பமாகும். சரும பராமரிப்பில் ஆர்வம் உள்ளவர்கள், கொரிய பெண்களின் தோற்றத்தைப் பெற விரும்பி சில ஃபேஸ்பேக்குகளைப் பின்பற்றுவர். அதே சமயம் விலை குறைவாகவும், எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் சரும பராமரிப்பிற்கு சந்தையில் கிடைக்கும் பொருள்களில் இரசாயனங்கள் கலந்திருப்பதால், அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே வீட்டிலேயே சில ஆரோக்கியமான சரும பராமரிப்பு வழக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். மேலும், இதில் எந்த விதமான இரசாயன விளைவுகளும் இருக்காது. வீட்டிலேயே எளிமையான முறையில் கொரியன் ஃபேஸ் பேக்குகளைத் தயார் செய்யலாம். இவை சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் சரும பராமரிப்பில் கொரிய தோல் பராமரிப்பை இணைக்க என்னென்ன ஃபேஸ்பேக்குகளைப் பயன்படுத்தலாம் என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pigmentation Removal Tips: முகத்தில் கருந்திட்டுகள் அதிகமா இருக்கா? இந்த ஒரு பொருள் போதும்
கண்ணாடி சருமம்
கண்ணாடி சருமம் என்பது கண்ணாடியைப் போல குறைபாடற்ற, துளைகள் மற்றும் ஒளிரும் தோலை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லைக் குறிக்கிறது. கொரியர்களின் இந்த கண்ணாடி சருமத்திற்கு அவர்கள் தோல் பராமரிப்பு மற்றும் நீரேற்றம் இரண்டும் அடங்கும். இதில் கொரியர்களின் கண்ணாடி போன்ற தோற்றத்தை அடைய உதவும் ஃபேஸ் பேக்குகளைக் காணலாம்.
சருமம் கண்ணாடி போன்று பளபளப்பாக உதவும் ஃபேஸ் பேக்குகள்
கொரியப் பெண்களைப் போன்று சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க சில ஆரோக்கியமான ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தலாம். அதில் சிலவற்றைக் காண்போம்.
புளித்த அரிசி தவிடு ஃபேஸ் பேக்
அரிசி தவிடு முகத்தில் இறந்த சரும செல்களை நீக்க உதவுகிறது. இந்த ஃபேஸ் பேக் தயிர் மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தயிர் சருமத்திற்கு பிரகாசத்தைத் தரக்கூடியதாகவும், தேனை நீரேற்றமாகவும் வைக்க உதவுகிறது.
தேவையானவை
- அரிசி தவிடு பொடி - 2 டேபிள் ஸ்பூன்
- தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
- தேன் - 1 டீஸ்பூன்
செய்முறை
- இந்த ஃபேஸ் பேக் தயார் செய்ய, மேலே கொடுக்கப்பட்ட அரிசி தவிடு பொடி, தேன் மற்றும் தயிர் போன்றவற்றைச் சேர்த்துக் கலக்க வேண்டும்.
- இந்தக் கலவையை சருமத்தில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
- பிறகு இதை 5-10 நிமிடங்கள் வரை வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Korean Skin Care: கொரியர்களைப் போல் சருமம் ஜொலிக்க இதை செய்யவும்…
கிரீன் டீ மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்
தேன் இனிமையான பண்புகளைக் கொண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தரக்கூடியதாகும். மேலும், கிரீன் டீயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை அமைதிப்படுத்தவும் பாதுகாக்கவும் உதவுகிறது.
தேவையானவை
- தேன் - 1 டேபிள் ஸ்பூன்
- கிரீன் டீ - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- இதற்கு 1 டேபிள் ஸ்பூன் அளவிலான தேனுடன், 1 டேபிள் ஸ்பூன் குளிர்ந்த கிரீன் டீயைக் கலக்க வேண்டும்.
- இந்தக் கலவையை சருமத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்.
- பிறகு இதை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். பின் சருமத்தை மெதுவாக உலர வைக்கலாம்.
- இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.

வெள்ளரி மற்றும் அலோ வேரா மாஸ்க்
இந்த ஃபேஸ் மாஸ்க் கொரிய தோல் பராமரிப்பு பிரதானமாகக் கருதப்படுகிறது. இதில் கற்றாழையின் மருத்துவ குணங்கள் சருமத்தை ஆற்றுவதற்கும், நீரேற்றமாக வைக்கவும் உதவுகிறது. வெள்ளரி சாறு குளிர்ச்சி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
தேவையானவை
- புதிய கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி
- வெள்ளரி சாறு - 2 தேக்கரண்டி
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்ட பொருள்கள் இரண்டையும் சேர்த்து கலக்க வேண்டும்.
- பின் இந்தக் கலவையில் ஒரு ஷீட் மாஸ்க் டேப்லெட்டை முழுவதுமாக உறிஞ்சும் வரை ஊறவைக்க வேண்டும்.
- அதன் பிறகு இந்த ஃபேஸ்மாஸ்க்கை முகத்தில் தடவலாம்.
- இதை 20-30 நிமிடங்கள் வரை வைத்து, பிறகு கழுவி விடலாம்.
- இந்த ஃபேஸ்மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: பளபள சருமத்திற்கு வீட்டிலேயே இந்த கொரியன் ஃபேஸ் கிரீம் தயாரித்து அப்ளை பண்ணுங்க!
ரைஸ் வாட்டர் டோனர்
இந்த ஃபேஸ் மாஸ்க் தயார் செய்வதற்கு சருமத்தை சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. அரிசி தண்ணீர் ஃபேஸ்மாஸ்க் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை சருமத்தின் நிறத்தை பிரகாசமாக்குகிறது.
தேவையானவை
- ஆர்கானிக் அரிசி - அரை கப்
- தண்ணீர் - 2 கப்
செய்முறை
- முதலில் அரிசியை நன்கு கழுவி, அழுக்குகளை அகற்ற வேண்டும். பின்னர் சுமார் 30 நிமிடங்கள் அரிசியை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
- இதை அவ்வப்போது கிளறி விட்டு, அரிசியை வடிகட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும்.
- ஒரு சுத்தமான கொள்கலன் ஒன்றில் அரிசி தண்ணீரை ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.
- முகத்தை சுத்தம் செய்த பிறகு, காட்டன் பேட் ஒன்றைப் பயன்படுத்தி அரிசி நீரை தடவ வேண்டும்.

இந்த வகை ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்தி கொரிய பெண்களின் சருமத்தைப் பெறலாம். எனினும், ஒவ்வாமை, சரும எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள் ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்தும் முன்னதாக பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Korean Rice Water: கொரிய பெண்களின் அழகு ரகசியத்துக்கு இது தான் காரணமா.?
Image Source: Freepik