Ghee For Skin Care: முகத்தின் பளபளப்பையும், மென்மையையும் கெடுப்பதில் முகப்பரு மிக முக்கியமானது. இதனால் முகப்பருக்களை அகற்றுவது என்பது பெண்களுக்கான சவாலாகவும், கவலையாகவும் உள்ளது. முகத்தில் உள்ள அனைத்து எண்ணெய் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கள் முகப்பரு ஏற்படக் காரணமாக உள்ளன.

முகப்பரு என்பது டீன் ஏஜ் பருவத்தில் பலரைத் தொந்தரவு செய்யும் ஒன்று. முகத்தில் எஞ்சியிருக்கும் தழும்புகள் மற்றும் வடுக்கள் ஆகியவை முகப்பருவால் அடுத்தடுத்து ஏற்படும் பிரச்சனைகள் ஆகும். இதற்காக செய்யக்கூடிய பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அதில் சிலவற்றை கீழே பகிர்ந்துள்ளோம்…
முக்கிய கட்டுரைகள்
நெய்:
நெய்யில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், முகத்தில் தேவையற்ற பருக்களை தடுக்க உதவுகிறது. இது ஈரப்பதம் அளிக்க கூடியவை என்பதோடு பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவும்.

நெய்யில் எண்ணெய் பசை இருப்பதால் இது எப்படி சாத்தியமென நீங்கள் நினைக்கலாம், நெய் பாக்டீரியாவை அழிக்க வல்லது. இதில் வைட்டமின்கள் ஏ, டி மற்றும் ஈ உள்ளது. இவை அனைத்தும் சருமத்திற்கு நன்மை பயக்கும். இவை தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் நல்லது.
மேலும் இயற்கையான கிளசன்ரான நெய், சருமத்தில் படியும் அழுக்கு, மேக்கப், தூசுக்களை அகற்றி, முகப்பருக்களை உருவாக்கக்கூடிய துளைகளை அடைக்கிறது.
தேன்:
தேனுடன் நெய் சேர்ப்பது நல்ல பலனைக் கொடுக்கும். தோல் பராமரிப்புக்கும் தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலும் தேனுக்கு உண்டு.
நோய்த்தொற்றுகளால் ஏற்படும் தோல் எரிச்சல்களுக்கு சிகிச்சையளிப்பதில் தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருட்களில் தேனும் ஒன்றாக உள்ளது.
மஞ்சள்:
நெய் உடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலக்கலாம். முகத்தை நன்கு கழுவி துடைத்து இந்த கலவையை முகத்தில் தடவவும். பிறகு 20 நிமிடம் கழித்து கழுவவும். இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்தாலும் குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைக்கும்.
இதையும் படிங்க: கண் பார்வையை மேம்படுத்த உதவும் முக்கியமான 5 யோகாசனங்கள்!
முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகளைப் போக்கவும் இது நல்லது. மேலும் இது முகத்தை பொலிவாகவும் மிருதுவாகவும் மாற்ற உதவுவதுடன், சுருக்கங்களைப் போக்கவும் உதவுகிறது.
Image Source: Freepik