மலச்சிக்கல் என்பது பலருக்கு தீர்க்க முடியாத பிரச்சனையாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது,நார்ச்சத்து இல்லாத உணவு, ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, நோய்கள், மருந்துகள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை மலச்சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்.
இதையும் படிங்க: Diabetes : சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு… இந்த பழங்களை தொட்டுக்கூட பார்க்கக்கூடாது!
இதை தீர்க்க பல வழிகள் உள்ளன. சிலர் வழக்கமான மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் மாத்திரை இல்லாமல் மலம் கழிக்க முடியாது என்ற நிலை கூட ஏற்படலாம், இதை போக்க வீட்டு வைத்தியம் சிறந்தது. ஆயுர்வேதத்தின் படி மலச்சிக்கலை போக்க நெய் சிறந்ததாகும்.
நெய்:
நெய் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்ககூடியது. நெய்யில் பியூட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது மலச்சிக்கலை போக்க உதவும் என்று கூறப்படுகிறது.
நெய்யில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. இதன் காரணமாக, கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் அதிகரிக்கும் என்று பயப்பட வேண்டிய அவசியமில்லை. இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.
வாயு, அசிட்டி:
வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வாகும். குடலை அமைதிப்படுத்தும் ஒன்று. ஒரு டீஸ்பூன் நெய்யை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது மலச்சிக்கலைப் போக்குவதுடன் செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
நெய்யின் லுப்ரிகேட்டிங் பண்புகள் செரிமான அமைப்பை மிருதுவாக்கி மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
குடல் ஆரோக்கியம்:

இதையும் படிங்க: Constipation: மலச்சிக்கல் பிரச்சனையா?… நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்கள்!
இதில் உள்ள பியூட்ரிக் அமிலம் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் சிறந்த செரிமானமும் அடையப்படுகிறது. நெய்யில் ஆரோக்கியமான ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது உடலில் தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது.
நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்தது:
நெய் பல நோய்களுக்கு நல்ல மருந்தாகும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது மிகவும் நன்மை பயக்கும். இது கிளைசெமிக் குறியீட்டு அளவைக் குறைக்கிறது. சாதம், சப்பாத்தி சாப்பிடும் போது லேசம் நெய் சேர்ப்பது மிகவும் பலன் தரும்.நெய் சேர்த்தால் அதில் உள்ள சர்க்கரை விரைவில் ரத்தத்தில் சென்று சர்க்கரை திடீரென அதிகரிப்பதை தடுக்கும்.
Image Source:Freepik