அன்றாட உணவில் சர்க்கரை அதிகமாக எடுத்துக்கொள்வது, உடல்நலத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும். ஆனால் சர்க்கரையை வெறும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே தவிர்த்தால், உங்கள் முகத்தில் அதிர்ச்சிகரமான நல்ல மாற்றங்களை காணலாம் என்கிறார் டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் அமின் ஹனன்.
முதல் 3 நாட்கள் – தீவிர ஆசை
சர்க்கரையை தவிர்த்த உடன், முதல் 72 மணி நேரத்தில் அதிகப்படியான “cravings” ஏற்படும். இனிப்பு வேண்டுமென்ற ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் மன உறுதியுடன் தொடர்ந்தால், உங்கள் முகத்தில் ஏற்படும் சிவப்பு (redness) மற்றும் செயல்படும் முகப்பருக்கள் (active acne) குறைய தொடங்கும்.
7-ம் நாள் – வீக்கம் குறையும்
சர்க்கரை சாப்பிடாததால், உடலில் நீர் தங்கி இருப்பது (water retention) குறைகிறது. இதன் விளைவாக முகம் வீக்கம் குறைந்து, முகம் கூர்மையான (sharp look) தோற்றத்துடன் பிரகாசமாகும். கண் கீழ் வீக்கம் (under-eye puffiness) கூட மறைய தொடங்கும்.
11 முதல் 14 நாட்கள் – முகம் பளபளக்கும்
இரண்டு வாரங்கள் முழுவதும் சர்க்கரையைத் தவிர்த்தால், முகத்தின் சோம்பல் (dullness) மறைந்து, இயற்கையான ஒளிவீச்சு (glow) வெளிப்படும். அதோடு, குடல் ஆரோக்கியமும் (gut health) மேம்படும். இது சருமத்திற்கு நீண்டநாள் நன்மையை அளிக்கும்.
இறுதியாக..
டாக்டர் அமின் ஹனன் கூறுகையில், “சர்க்கரையை குறைப்பது, சரும ஆரோக்கியத்துக்கான மிகச் சிறந்த இயற்கை சிகிச்சை. உங்கள் தோலில் பிரகாசம் வேண்டும் என்றால், இந்த 14 நாள் சவாலில் கலந்துகொள்ளுங்கள்” என்று வலியுறுத்துகிறார்.