Expert

எகிறும் சுகர் லெவலைக் கட்டுக்குள் வைக்க சாப்பிடும் போது நீங்க செய்ய வேண்டியவை.. நிபுணர் தரும் டிப்ஸ்

How to prevent blood sugar spikes after eating: அன்றாட உணவில் நாம் செய்யும் சில தவறுகள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கக்கூடும். இதில் இரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தவிர்க்க ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ள தகவல்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
எகிறும் சுகர் லெவலைக் கட்டுக்குள் வைக்க சாப்பிடும் போது நீங்க செய்ய வேண்டியவை.. நிபுணர் தரும் டிப்ஸ்


How to reduce blood sugar spikes after eating: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனால் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் எழலாம். குறிப்பாக, நீரிழிவு நோய் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. எனவே தான், உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர்.

இந்நிலையில், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க சீரான உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகும். உண்மையில் ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ளும் உணவுகளையும் சீரான அளவில், சரியான முறையில் எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். இதில் இயற்கையாகவே இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும் வகையில், ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எளிமையான ஆனால் பயனுள்ள உணவு உத்திகளைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: சர்ரென உயரும் சுகர் லெவலை மடமடனு குறைக்க உங்க சமையலில் சேர்க்கும் இந்த ஒரு மசாலா போதும்

நிபுணரின் கருத்து

உயர் இரத்த சர்க்கரை அல்லது ஹைப்பர் கிளைசீமியா, குறிப்பாக PCOS, நீரிழிவுக்கு முந்தைய நிலை, உடல் பருமன் அல்லது நீரிழிவு நோயின் குடும்ப வரலாறு உள்ளவர்களிடையே அதிகரித்து வரும் பொதுவான கவலையாக மாறி வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து உயர்ந்த குளுக்கோஸ் அளவுகள் நீரிழிவு, இதய நோய் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

மேலும் உட்கார்ந்தே சாப்பிடும் பழக்கம், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஒழுங்கற்ற உணவு முறைகளால் வகைப்படுத்தப்படும் நவீன வாழ்க்கை முறைகள், ஆபத்தை மேலும் அதிகரிக்கின்றன. இதில் இரத்த சர்க்கரையை இயற்கையாகவே நிர்வகிக்க உதவும் வகையில், ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி ஒரு எளிய, ஆனால் பயனுள்ள உணவு உத்தியைப் பகிர்ந்துள்ளார்.

இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்த உதவும் ஒரு எளிய ஹேக்கை மக்களுடன் பகிர்ந்து கொண்டார். அவரின் கூற்றுப்படி, முதலில் காய்கறிகள் மற்றும் புரதத்தை உட்கொள்ளவும், அதைத் தொடர்ந்து கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ளவும் அவர் அறிவுறுத்துகிறார்.

அவர் "உதாரணமாக, உங்கள் இரவு உணவில் கோழி, காய்கறிகள், சப்பாத்தி மற்றும் பருப்பு இருந்தால், கோழி மற்றும் காய்கறிகளுடன் தொடங்குங்கள்," என்று கூறினார். "நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் கலவையானது இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது. இவற்றை சாப்பிட்டு முடித்தவுடன், சப்பாத்தி அல்லது பிற கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரையில் திடீர் அதிகரிப்பு ஏற்படாது," என்று கூறியுள்ளார்.

இது தவிர, புரதம் மற்றும் காய்கறிகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன என்றும், இது குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்றும் கூறியுள்ளார். இவை சர்க்கரை பசியைக் குறைக்கிறது. மேலும், அதிகப்படியான கொழுப்புச் சேமிப்பைத் தடுக்கிறது மற்றும் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்த பதிவும் உதவலாம்: திடீரென இரத்த சர்க்கரை குறையறது சர்க்கரை லெவல் அதிகமாவதை விட ஆபத்தாம்.. எதனால் தெரியுமா?

இது ஏன் வேலை செய்கிறது?

புரதம் மற்றும் காய்கறிகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால், இவை மெதுவாக செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும், இது இரத்த குளுக்கோஸில் இது விரைவான உயர்வை ஏற்படுத்தாது. மாற்றாக, இவை கீழ்க்காணும் செயல்களைச் செய்கிறது.

  • இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்
  • சர்க்கரைக்கான பசியைக் குறைத்தல்
  • அதிகப்படியான கொழுப்புச் சேமிப்பைத் தடுப்பது
  • நீரிழிவு உட்பட நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைத்தல்.

நிபுணரின் கூற்றுப்படி, எந்த உணவுக் குழுக்களையும் நீக்குவதற்குப் பதிலாக உண்ணும் வரிசையில் கவனம் செலுத்துகிறது. முதலில், புரதம், அதன் பின்னர் காய்கறிகள், அதைத் தொடர்ந்து கார்போஹைட்ரேட்டுகள் என்ற வரிசை உடல் உணவுக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை கணிசமாக பாதிக்கிறது.

View this post on Instagram

A post shared by Anjali Mukerjee (@anjalimukerjee)

அறிவியல் பின்னணி

  • காய்கறிகள் நார்ச்சத்துக்களை வழங்குகிறது. இவை சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது.
  • இதில் உள்ள புரதம் செரிமானத்தை மேலும் மெதுவாக்குகிறது. மேலும் இன்சுலின் அளவை நிலைப்படுத்துகிறது.
  • இவை ஒன்றாக, ரிசி அல்லது சப்பாத்தி போன்ற கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து குளுக்கோஸ் ஸ்பைக்கைக் குறைக்கிறது.

அஞ்சலி முகர்ஜி கூற்றுப்படி, “இது சக்திவாய்ந்த நீண்ட கால முடிவுகளுடன் கூடிய ஒரு சிறிய மாற்றம்” என்று கூறியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோயாளிகள் பச்சையாக மஞ்சள் சாப்பிடலாமா? நிபுணர் சொல்வதைக் கேளுங்க

Image Source: Freepik

Read Next

Hpothyroid-ஐ கட்டுப்படுத்த உதவும் Top 5 உணவுகள்.. நிபுணர் பரிந்துரை..

Disclaimer