ஹைப்போதைராய்டு (Hypothyroidism) பிரச்சனையால் பலர் செரிமானக் குறைவு, மலச்சிக்கல், சோர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் உணவுப் பழக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயுர்வேத ஊட்டச்சத்து மற்றும் குடல் நல நிபுணர் டிம்பிள் ஜாங்க்டா, ஹைப்போதைராய்டை கட்டுப்படுத்த உதவும் சிறந்த 5 உணவுகளை பரிந்துரைத்துள்ளார்.
Hpothyroid-ஐ கட்டுப்படுத்த நிபுணர் பரிந்துரைத்த உணவுகள்
1. பிரேசில் நட்டு (Brazil Nuts)
பிரேசில் நட்டு, செலினியம் (Selenium) நிறைந்த முக்கியமான உணவு. செலினியம் தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. தினமும் 2 பிரேசில் நட்டு ஊறவைத்து சாப்பிடுவது மலச்சிக்கலைக் குறைத்து, குடல் நலத்தையும் மேம்படுத்தும்.
2. திரிபலா (Triphala)
திரிபலா, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை குறைக்கும். இது தைராய்டுக்கு அதிக சுமையைக் குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
3. ஐயோடைன் (Iodine) உணவுகள்
ஸ்ட்ராபெரி, கடல்பாசி (Seaweed), மற்றும் ஐயோடைசட் உப்பு ஆகியவற்றிலிருந்து ஐயோடைனைப் பெறலாம். இது தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தி காய்ட்ர் (Goitre) அறிகுறிகளைத் தடுக்கும்.
4. அஷ்வகந்தா
சமயம், அஷ்வகந்தா (Ashwagandha) போன்ற Adaptogenic herbs சாப்பிடுவது உடலில் மன அழுத்தத்தையும் கார்டிசோல் ஹார்மோனையும் குறைத்து தைராய்டு நலத்தை மேம்படுத்தும்.
5. தாவர அடிப்படையிலான உணவுகள்
தைராய்டு ஆரோக்கியத்திற்கு Animal protein குறைக்கப்பட வேண்டும். அதற்கு பதில் plant-based diet பின்பற்ற வேண்டும்.
தினமும் சாப்பிட மற்றும் தவிர்க்க வேண்டியவை..
தினமும் சாப்பிட வேண்டியவை
தினமும் 2 கிண்ணம் பழங்கள், 2 கிண்ணம் வேகவைத்த காய்கறிகள், 1 கிண்ணம் சூப், 2 கிண்ணம் முழுதானியங்கள் சாப்பிட வேண்டும். பஜ்ரா, சோளம் தவிர, சிவப்பு அரிசி, பழுப்பு அரிசி, கருப்பு அரிசி, மற்ற சிறுதானியங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் ஆளி விதைகள் (Flax seeds), பரங்கிக்காய் விதைகள், சூரியகாந்தி விதைகள் குடல் ஆரோக்கியத்தையும் தைராய்டு ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
முட்டைகோஸ், காலிபிளவர், ப்ரோக்கோலி, சோயா பால், டோஃபு போன்ற cruciferous vegetables மற்றும் soya products அதிகமாக சாப்பிடக் கூடாது. இவை goitrogen நிறைந்தவை.
இறுதியாக..
ஹைப்போதைராய்டை கட்டுப்படுத்த மருந்துகளுடன் சேர்த்து உணவுப் பழக்கமும் மிக முக்கியம். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மேலே கூறப்பட்ட உணவுகளைச் சேர்த்து, தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்தால், உடல்நலம் மேம்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. உங்களின் உடல்நலத்திற்கு ஏற்ற சிகிச்சை மற்றும் உணவுப் பழக்கங்களுக்கு, தங்களின் மருத்துவரை அணுகுவது அவசியம்.